Monday, November 9, 2015

நீ‬ ‪ ஏன்‬ ‪ வெளிநாடு‬ போன .?...இந்தியா ல வேலை இல்லையா ?



#‎சொல்வதெல்லாம்_உண்மை‬...!!!

#‎நீ‬ ‪#‎ஏன்‬ ‪#‎வெளிநாடு‬ ‬ போன ..இந்தியா ல வேலை இல்லையா ? ன்னு கேட்கும் சில சில ‪#‎அறிவு‬ ‪#‎ஜீவிகளுக்கு‬...!
கடுப்புடன் ..!

உங்கள் ‪#‎அப்பா‬ தாத்தா சம்பாதித்து வச்சி காசை என்ன பன்றது தெரியாம எதோ ஒப்புக்கு ‪#‎காலேஜ்‬ போய் எதோ ஒரு டிகிரி வாங்கி இருக்கும் செல்வாக்கில் அங்கே ஒரு வேலையும் வாங்கி அதுல வரும் காசை என்ன செயறதுன்னு தெரியாம குடி கும்மாளம்னு அடிச்சி ஜாலியா போய்டு இருக்கும் வாழ்கையில் எதோ ஒரு கல்யாணம் செய்து அதுல வரும் வரதட்சணையை வச்சி எதோ ஒரு தொழில் ஆரமித்து . கஷ்ட்டம்னாலே என்னான்னு தெரியாத சில உள்நாட்டில் வேலை பார்க்கும் நண்பர்களே

நாங்க ஒன்னும் விருப்ப பட்டு வெளிநாடு வரலை
நாங்கள் அனுப்பும் பணத்தில் தான் குடும்பம் நடத்தனும் வீட்டில் உள்ளவங்க சாப்பிடனும் அப்பா அம்மா மருத்துவ செலவை பார்க்கனும் எதோ ஒரு சூழ்நிலையால் அப்பா வாங்குன கடனை கட்டி ..கடன் காரன் எல்லோருக்கும் பதிலை சொல்லி .. ‪#‎அக்கா‬ ‪#‎தங்கச்சி‬ கல்யாணம் செய்யனும் நாளைக்கு வரபோறவளுக்கு சேர்த்து வைக்கனும்னு இப்படி ஏகப்பட்ட கமிட்மென்ட் எங்களுக்கு இருக்கு

இங்கே வந்து யாரும் இல்லாத அனாதையா இருக்கும் எங்களை பார்த்தால் சிலருக்கு எகத்தாலாமா நக்காலா தான் இருக்கும்...!

பாரின் ல வந்து எந்த கம்பெனியும் சும்மா காசு ‪#‎பணம்‬
தருவது இல்லை ..! இந்தியாவில் ஒரு பங்கு உழைத்தால் இங்க 04 பங்கு உழைக்கணும் ..அப்போதான் எதோ கொஞ்சம் மிச்சம் செய்து எங்க குடும்பத்தையும் 04 பேருக்கு முன்னால தலை நிமித்து மரியாதையோடு நடக்க வைக்க முடியும் ..!

என் ‪#‎குடும்பம்‬ ஊருல ஒரு அந்தஸ்தோட இருக்கு என்றால் என்னோட பல நாள் கண் விழிப்பு இருக்கு ...!
இங்க ஒன்னும் நாங்க எப்போதும் ஏசியில் உக்காந்துகிட்டு ..எதோ பொழுது போக்கிகிட்டு மாசம் முடிந்தால் வீட்டுக்கு பணம் அனுப்பும் நபர்கள் நாங்க இல்ல ..! ஒவ்வொரு நாளும் அவ்ளோ வேலை வலி வேதனை ..இருக்கு ..!
சோறு தண்ணி இல்லாம ..மழை வெயில் பாராமல் ..சொந்தம் பந்தம் அருகில் இல்லாமல் ..எல்லாம் இந்த பணத்துக்காக தான் பல்லாயிரம் கிலோ மீட்டர் தாண்டி வந்து கிடக்கிறோம் ..!

இத பார்த்தா என்னமோ ..உங்களுக்கு நக்கலா இருக்கு .
முதல் முறை இந்த உலகை தொட்ட தன் பிள்ளையின் பாதத்தை பார்க்காமல் இங்கே துடிப்பவர்களையும் .. அக்கா தங்கை கல்யாணத்தை நல்லபடியா நடத்தி வைக்கிறோம் ஆனா நாங்க கல்யாணத்தை பார்த்தது இல்ல ..அந்த விடியோ பார்க்கும் போது தன்னை அறியாமல் கண்ணில் நீர் கோர்க்கும் ..

எத்தனை எத்தனை புள்ளைகள் தன் பெற்றோர் இறப்பு கூட போக முடியாம துடிப்பதையும் ..விட்டு வந்த காதலியோடு ..கனவுலையே குடும்பம் நடத்துவதையும் இங்க மட்டும் தான் பார்க்க முடியும் ..அந்த வேதனை ..‪#‎வலி‬ ..‪#‎ரணம்‬ ..அனுபவிக்கும் போது கொடுமை ..எல்லாம் இந்த காசுக்காக

என்னமோ ‪#‎இந்தியாவில்‬ வேலை கொடுத்த மாதிரியும் அதை பார்க்காமல் உதறிவிட்டு இங்க வந்து சும்மா உக்காந்து கால் மேல் காலை போட்டுக்கிட்டு ஏசி ரூமில் உக்காந்து சம்பாதிக்கிற மாதிரி பேசுறிங்க .!
வந்து ஒரு மாசம் ‪#‎வெளிநாட்டில்‬ இருங்க பார்ப்போம் ..! ஒரு நாள் வீட்டுக்கு போன் போகலைனா ..என்ன நிலமை ஆகும் தெரியுமா ..!

ஒரே ஒரு நம்பர் இந்தியாவில் இருந்து மிஸ்டு கால் வந்தா போதும் ..அடுத்த நிமிடம் வேலை பார்க்க முடியாது ..அவ்ளோ பதற்றம் தொத்திக்கும் யாருக்கு என்ன அச்சோ எது ஆச்சோ எல்லோரும் நல்லா இருக்கணும் ந்னு மனசு அலை பாயும் .. அந்த துடிப்பு வேதனை வலி சொன்ன எல்லாம் புரியாது அனுபவித்தால் தான் புரியும் ..!

செத்துடுவிங்க ..! இவ்ளோ வலி வேதனை தாங்கிட்டு எதுக்காக இங்க இருக்கோம் நாம் கஷ்டபட்டாலும் என் குடும்பம் நல்லா இருக்கணும் என்பதற்காக மட்டும் தான் ..! உங்களுக்கு எல்லாம் சொன்னால் புரியாது இது ...பட்டால் தான் தெரியும் ..
....
சவால் விடுறேன் ..உங்க அப்பா ‪#‎தாத்தா‬ பேரை சொல்லாமல் ..அவங்க சம்பாதிச்ச பணத்தை பயன்படுத்தாமல் ஊரில் இருந்து மாசம் ரொம்ப வேணாம் மாசம் 10000 ‪#‎சம்பாதித்து‬ உங்க செலவை பார்த்துகிட்டு உங்க‪#‎குடும்பத்தையும்‬ காப்பாத்துங்க பார்க்கலாம் ..!சரியா தவறா

நன்றி :
https://www.facebook.com/sheik.mideen.9/posts/10207627370504000
http://www.nellaieruvadi.com/news/news.asp?newsID=4167

2 comments:

N. Abdul Hadi Baquavi said...

சரியான பதிவு. வாழ்த்துக்கள். நிறைய எதிர்பார்க்கிறோம். இன்னும் தொடரட்டும்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வேதனை...

கேள்வி கேட்டுவிட்டோம்!
பதில்?