Wednesday, June 17, 2015

படித்ததில் பிடித்தது

ஒரு நாள-

ISIS தீவிரவாதிகள் காரில்
சென்றுகொண்டிருந்த ஒரு
குடும்பத்தை வழி மரித்தனர்.

ISIS தீவிரவாதி:" நீ எந்த மதம்?"

காரில் இருந்த மனிதர் :
"நாங்கள் முஸ்லிம்"
(உண்மையில் அவர்கள் கிருஸ்துவர்கள்்)

ISISதீவிரவாதி : "அப்படியானால்
குரானிலிருந்து சில வரிகளை
சொல்.

(காரில் இருந்தவரின் மனைவி
நடுங்கிவிட்டாள்)

ஆனால் அவருடன் இருந்த கணவர் சிறிதும் தயக்கமின்றி
பைபிளில் இருந்து சில வரிகளைக்
கூறினார்.

ISIS தீவிரவாதி: " சரியாகக் கூறினாய். நீங்கள் செல்லலாம்.

கார் சிறிது தூரம் நகர்ந்ததும் அவர் மனைவி "எப்படிச் சிறிதும்
பயமின்றிக் குரானுக்கு பதிலாக பைபிளை கூறினீர்கள்,
ஒரு வேளை அந்தத் தீவிரவாதி
கண்டு பிடித்திருந்தால் நம் நிலை
என்னாவது?"

அதற்கு அந்த மனிதர் சொன்னார்:
"எனக்குப் பைபிள் முழுமையாகத் தெரியும்; இந்தத் தீவிரவாதிகளுக்குக் குரான் தெரியாது"

மனைவி : "அவர்களுக்குக் குரான் தெரியாது என்பது எப்படி உங்களுக்குத் தெரியும்.?"

அவர் சிரித்துக்கொண்டே "அவர்கள்
குரானை படித்துப் புரிந்து கொண்டிருந்தால் ஆயுதம்
ஏந்தி அப்பாவி மக்களைக் கொலை
செய்யும் தீவிர வாதத்தை இஸ்லாம் என்று கருதி இப்படி வெறியர்களாக மாறியிருக்கமாட்டார்கள்".

எந்த ஒரு மதமும் பிறரைக் கொலை செய்யச் சொல்லவில்லை.

தீவிரவாதிகளுக்கு மதமும்
கிடையாது; மனமும் கிடையாது,

அவர்கள் மனிதர்களும்
கிடையாது."

//படித்ததில் பிடித்தது//
தகவல் தந்தவர் Krishnan Balaa

1 comment:

”தளிர் சுரேஷ்” said...

அருமை! பகிர்வுக்கு மிக்க நன்றி! மதம் பிடித்தவர்களுக்கு மதம் கிடையாதுதான்!