Friday, March 20, 2015

Mohamed Ali அண்ணனின் சந்தேகமும்... திராவிடன் - ஆரியன் - அலசலும்...

Mohamed Ali அண்ணனின் சந்தேகமும்...
திராவிடன் - ஆரியன் - அலசலும்...
--------------------------------------------
'திராவிட நாடு என்று ஒரு தனி நாடு இருந்ததா
தெரிந்துக் கொள்ள விருப்பம்
ஆரிய நாடு என்று ஒரு தனி நாடு இருந்ததா
அதனையும் அறிய வேண்டும்.'
- Mohamed Ali

# சென்ற வாரத்தில் முகம்மதலி அண்ணனின்
மேற்கண்டப் பதிவிற்கு
நான் எழுதிய வரிகளைதான்
இங்கே கீழே உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன்.
- தாஜ்

*
ஆதிதொட்டு
இமயத்திற்கு
இந்தப் பக்கம் இருந்தவர்கள் பலரும்
பரவலாக திராவிடர்கள் என்றே அறியப்பட்டார்கள்.

இந்தியப் புதைப்பொருள் ஆராச்சியின் வழியாக
கண்டறியப்பட்ட
4000 வருஷங்களுக்கு முந்திய நகரங்களான
மோகன்சோதாரோ / ஹரஃபா - வில் வாழ்ந்த மக்கள்
திராவிடர்கள் என்றே அறியப்படுகிறார்கள்!!

சுமார் 4000 -ம் ஆண்டுகளுக்கு முன்னால்
கைபர் - போலன் கனவாய் வழியாக -
மத்தியத் தரை பிரதேஸங்களில் இருந்து
ஆரியர்கள் தங்களது வாழ்வாதாரமான
கடவுள் சிலைகளோடும் / மாடுகளோடும்
இந்திய தீபகர்பகத்திற்குள் வரவை நிகழ்த்தி
பஞ்சசீல நதிகரையோறங்களில் குடி அமர்ந்தார்கள்!

( இப்படி இவர்கள்...
ஆசியாவின் பல பாகங்களிலும் நுழைந்து
தங்களது இருப்பை ஸ்திரப்படுத்தினார்கள் என்பது
இங்கே குறிப்பிட வேண்டிய செய்தி.
ஹாங்காங்கில் கூட பிரம்மாவின் சிலையொன்றை
நான் கண்டதுண்டு. வழிப்படும் மக்களையும் பார்த்தேன்.)

அதன் பின்னான இந்திய
பல புதிய முகங்களை கொண்டது.
ஆரியன் - திராவிடன்...
வெள்ளையன் - கருப்பன்
குரு - சிஷ்யன்
ஆண்டான் - அடிமை
புத்தமத வெளியேற்றம் - இந்துமத நுழைவு
இயற்கை வழிப்பாடு நிந்தனை செய்யப்பட்டு...
சிலை வழிப்பாடு புகுத்தல் என்று
பல புதிய பரிமாணங்கள் இங்கே அரங்கேறியது.

வந்தாரக்குடியாக பார்க்கப்படும் ஆரியன்
நம்மை ஆள...
பூர்வீகக்குடியான திராவிட மக்கள்
அவர்களுக்கு பணிந்து கூனிக் குறுகி
அடிமைகளாகிப் போனார்கள்!
இதில் பெரிய அடிமையானவன் தான்
மன்னன்.
ஆனால், அதனிலும் மேலானவன் ஆரியன்!
ஆவனே ராஜ குரு!!

இடைக்காலத்தில்....
ஓர் புரிதலுக்கு வேண்டி...
வெள்ளையாக இருப்பவன் ஆரியன் என்றும்
கருப்பாக இருப்பவன் திராவிடன் என்றும்
நடைமுறை வழக்கில் அடையாளம் காணப்பட்டது.

நம் அரசியல் கட்சிகள் கூட
மனிதர்களின் வெள்ளை கருப்பையே
ஆரியம் - திராவிடம் என்கிற கணக்கில் சுட்டினார்கள்.

இதில் அசல் கருப்பான
தலித் மக்கள்
தங்களை சுத்தமான 'திராவிடன்' என்று
அடையாளப்படுத்திக் கொண்டனர்.

// ஆரிய நாடு என்று தனிநாடு
இந்திய சரித்திரத்தில் இருந்ததில்லை.
ஆனால்,
ஆரியத்தின் வீர சிம்பலான
பரசுராமனை ( இவன் இதிகாசப் புருசன்) முன்நிறுத்தி
'ஆரிய வர்த்தம்' என்றோர் ராஜியம் காண
ஆரியர்களுக்கு மகா எண்ணமுண்டு.
அந்த ஆரிய வர்த்த ராஜியத்தின் நீள - அகலம் என்பது
முழு உலகளவு!
அதாவது...
உலகமே ஆரிய வர்த்தமாக ஆகவேன்டும்.
அதுவே அவர்களது ஒரே குறியும் கூட.

// ஆர்.எஸ்.எஸ்.-ன் அடிப்படை நோக்கமே
ஆரிய வர்த்தம்தான்.

// நம்ம ஆரியர்களின் 'இஸ்ரேல் - யூத' உறவு கூட
அந்த குறியை நோக்கிய பயணம்தான்.
இன்னொருப் பக்கம்
அந்த வம்சாவளியைச் சேர்ந்தவர்களாகவும்
சரித்திர ரீதியில்
இந்த ஆரியர்கள் கணிக்கப்படுகிறார்கள்.

// அது வாஸ்தவமாகிப் போனால்...
இஸ்ரேலிய - பாலஸ்தீனியர்களின்
ரத்த உறவென ஆகிப் போகிறார்கள்..

// ஆக,
இஸ்ரேலிய - பாலஸ்தீனியர்களுக்கு
இவர்கள் ரத்த உறவென்றால்...
நமக்கும் இவர்கள் உறவு நிலை!
ஒரு தாய் மக்கள் சங்கதி!!

// அங்கே...
யூதர்கள் பாலஸ்தீனிய சகோதரர்களை இம்சிக்கிறார்கள்.
இங்கே...
இவர்கள் நம்மை இம்சிக்கிறார்கள்.

// கணக்கு சரிதானே...?

Taj Deen

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails