Tuesday, March 10, 2015

கறுவுளக் கொள்ளையர்கள்

அற்புதமான நம் மண்ணில்
அரசியல் பருந்துகள்
நம் வாழ்வின்
அத்தனை சுகங்களையும்
கடிதில் கவ்விச் செல்கிறார்கள்
நரி வடை கவ்விச் செல்வதைப்போல

திருட்டு என்றால்
எதைத்தான் திருடுவது என்று
ஒரு வெட்கம் வேண்டாமா

சோறு திருட்டு
சுகம் திருட்டு
வேலை திருட்டு
வசதி திருட்டு
உரிமை திருட்டு
உறக்கம் திருட்டு
என்பதெல்லாம் போக
நீர் திருட்டு
நிலம் திருட்டு
நெருப்பு திருட்டு
காற்று திருட்டு
ஆயாகம் திருட்டு
என்று
பஞ்ச பூதங்களைக்கூட
எப்படித்தான் திருடுகிறார்களோ
பச்சைத் திருடர்கள்

இங்கே பாருங்கள்
ஒரு குளம் திருட்டுபோன
அவலத்தை

கணிஞர் மணிவண்ணனோடு
சென்னையில்
ராமகிருஷ்ணா
மருத்துவமனை சென்றேன்

அங்கே பெரும் ஏரியின்
திருட்டுபற்றி
அங்கலாய்த்தார் அவர்

மணி மணிவண்ணன்
உங்கள் ஊர் கொஞ்சம் பெருசு
அதனால் அங்கே ஏரி திருட்டு

எங்கள் ஊர் சிறுசு
ஆனாலும் விடமாட்டார்கள்
இங்கே குளங்கள் திருட்டு
கேணிகள் திருட்டு
சின்னச்சின்ன
குட்டைகளும் திருட்டு

குட்டை மட்டுமா திருட்டு
குட்டையின் மண் திருட்டு
மண்ணின் தூசும் திருட்டு

காப்பொன்னிலும்
மாப்பொன் எடுப்பான்
பத்தன் என்பது நக்கல்மொழி

காலேயரைக்கா மண்ணானாலும்
அப்படியே கவ்விக்கொள்வான்
அரசியல்வாதி என்பதே
நடப்புமொழி

சளியைக்கூட
பொத்தி வையுங்கள்

வருகிறார்கள் வருகிறார்கள்
இதோ வந்தேவிட்டார்கள்
வெள்ளாடை போர்த்திய
கறுவுளக் கொள்ளையர்கள்

 

அன்புடன் புகாரி

நன்றி : http://anbudanbuhari.blogspot.


No comments: