Monday, March 2, 2015

ரஹீம்கஸாலி‬ யின் ‪#‎கஸாலித்துவம்‬ புத்தகத்திலிருந்து ஒரு துளி..

க்ளாஸ் மேட் ,காலேஜ் மேட், ரூம் மேட் மாதிரி எதிர் காலத்தில் ஃபேஸ்புக் மேட் என்றும் புதிய வார்த்தை வந்துடும்ன்னு நினைக்கின்றேன்
#‎ஃபேஸ்புக்த்துவம்‬

இது ‪#‎ரஹீம்கஸாலி‬ ‬ யின் ‪#‎கஸாலித்துவம்‬
புத்தகத்திலிருந்து ஒரு துளி
இன்னும் நிறைய கட்டுரையாக, நிகழ்வுகளாக, அரசியல் விமர்சனமாக நவீனத்துடன்,மேம்படுத்தலாக(update) உள்ளது.அதனை அனைவரும் பார்த்து படிக்க, ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய புத்தகம் #‎ரஹீம்கஸாலி‬ யின் #‎கஸாலித்துவம்‬


எழுதும் ஆற்றல் சிலரிடம் இருந்து அதனை பல பத்திரிக்கைகளில், வலைதளங்களில்,முகநூலில் எழுதி மற்றவர்களும் படித்திருப்பார்கள்.அது அக்காலத்தோடு ,அந்த நேரத்தோடு முடிந்து விடும். காலத்தைக் கடந்து இருப்பதற்கு அவைகள் புத்தகமாக வர வேண்டும். அதுவே மக்களுக்கு தொடர்ந்து பயன்தரும்.

புத்தகமாக கொண்டு வருதல் தொடர்ந்த சேவையாக அமைந்து விடும். புத்தகம் ஆதாயத்தை நோக்கமாக கொண்டு செயல்படுவதல்ல. நன்மையை அடைவதின் விருப்பத்தினால் மனதில் இறைவனால் தூண்டப்பட்டதே.

'உங்களில் உயர்ந்தோர் தாம் பெற்ற அறிவை மற்றவருக்கு கற்பிப்பவர் ஆவார்' என்பது நபிமொழி
இவ்வகையில் ரஹீம் கஸாலி அவர்கள் நன்மையான செயலாக கஸாலித்துவம் என்ற புத்தகத்தை மக்களுக்கு தந்துள்ளார்.நாம் அதனை படித்து பயனடைவோம்.
இறைவனது அருள் அவருக்கு மேன்மேலும் கிடைத்து இன்னும் நிறைய பத்தகங்கள் வெளியாக்கித் தர வாழ்த்துவோம் .ஆமீன்
அன்புடன் ,

Mohamed Ali

.

1 comment:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆமீன்!

தம்பி ரஹீம் கஸாலி மேலும் நிறைய புத்தகங்கள் வெளியிட வாழ்த்துவோம்.