ஒன்றின் மீது
அர்த்தப் பொதிவுடன்
வார்த்தைகளால் மெருகூட்டும்
வேலைப்பாடே
தத்துவம்!
தத்துவத்தை ஒருவன்
பக்குவப்பட்ட வயதில்...
அதாவது...
அவனுக்கான காலத்தில்
30% கழிந்தப் பின்னே
அறியவருவான்!
அதுதான் சாத்தியமும் கூட!
பிறப்பு வளர்ப்பு தொட்டு
இடைப்பட்ட காலத்தில்
சமூகத்தாலும், சூழலாலும்...
அவன் கற்ற அத்தனையும்
அவனது இரத்தில் ஊறிகிடக்கும்.
தவிர,
மூதாதையர்களின் ஜீன் வழியாகவும்
பல பழக்கவழக்கங்கள்
அவனின் பிறப்போடே
உடன் வரவும் செய்யும்.
இதன் பின்னால்....
அவன் உணர வருகிற
மகத்தான தத்துவங்கள் இனிக்குமே தவிர
அதனை அவன்
வாழ்வோடு
பிணைத்துக் கொள்ள முடியாது!
மனிதன்
தான் கிளர்ச்சி கொள்ளும் தத்துவங்களோடு
தொடர முடியாமல் போவதென்பது
இதனால்தான்.
இது குறித்து வருந்துவதிலும் அர்த்தமிருக்காது.
என் வாழ்வில்
எத்தனையோ தத்துவங்கள்
என்னை கிளச்சி செய்தும்
தொடர முடியாமல் போனது இதனால்தான்.
உலகம் கொண்டாடிய
தத்துவ மேதை
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்கள்
ஒரு காலக்கட்டத்தில்
என்னில் மிகைத்து இருந்தது.
இருந்தாலும்...
அது தானே என்னில் இருந்து
கீழே விழுவும் செய்தது.
அப்படி ஆகிப் போனதில்
இன்றைக்கும் வருத்தம் உண்டு.

No comments:
Post a Comment