Monday, September 9, 2013

மூடநம்பிக்கை என்றால் என்ன !

'மூடநம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு கருணாநிதி வலியுறுத்தல்' - செய்தி .

ஒரு சட்டம் இயற்ற பல விதிகள் உண்டு .
மூடநம்பிக்கை என்றால் என்ன !
எது! எது ? மூடநம்பிக்கையில் வரும்

ஒரு செயல் நடைபெற ஒரு காரியம் உண்டு
ஒரு காரியம் நடைபெற காரணகர்த்தா யார்
ஒரு வினைக்கு எதிர் வினை உண்டு
வினையை உருவாக்கியவன் யார் !
இயற்கையாக நிகழ்ந்தது என்றால் அந்த இயற்கையை உருவாக்கியவன் யார்
இயற்கை இயற்கையாக நிகழ்ந்ததா !
இயற்கையின் விளக்கம் என்ன?
கருவில்லாமல் உருவில்லை
இருக்கும் கருவை உருவாக்கியவர் யார்

மனிதன் உருவாக்கிய சட்டத்திற்கு ஆயிரம் திருத்தங்கள்
நம்பிக்கை மனதைப் பொறுத்தது
நம்பிக்கை அற்றவன் போகும் இடம் அறியாதவன்
தவறான நம்பிக்கை கொண்டவன் தற்குறி
தற்குறித் தன்மை தன்னை விட்டு நீங்க அறிவு அவசியம்
கொடுக்கும் அறிவில் கோளாறு
இன்று கொடுத்த அறிவு நாளை தவராகிவிடுகிறது

தத்துவம் விஞ்ஞானத்தின் வழிகாட்டி
வழிகாட்டும் தத்துவம் விடிவிளக்கு
விடிவிளக்கு வெளிச்சம் தரும்
வெளிச்சம் அழுக்கைக் காட்டும்
அழுக்கை அகற்ற துடைப்பான் (விளக்குமாறு )தேவை
தேய்ந்த துடைப்பானும் ஒளிகுன்றிய விளக்கும் உதவாது
மனிதன் தரும் சட்டங்களுக்குள் ஆயிரம் ஓட்டைகள்
சட்டத்தை போடுபவர் ஓட்டையை வைத்து சட்டத்தை மீறுகிறார்

நிலையான சட்டம் இறைவன் வகுத்தது
இறை நம்பிக்கை தவறு செய்ய தயங்கும்
இறை நம்பிக்கையில் மூடநம்பிக்கைக்கு இடமில்லை

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

/// வழிகாட்டும் தத்துவம் விடிவிளக்கு
விடிவிளக்கு வெளிச்சம் தரும்... ///

அருமை ஐயா...