Wednesday, January 5, 2011

க்ராஃபிக்ஸ் பயிற்சி - Selections - Refining

க்ராஃபிக்ஸ் பயிற்சி - Selections - Refining

செலக்ஷன் தொடரில் ரிஃபைனிங் குறித்து தெரிந்துகொள்ளப்போகிறோம். அதாவது நாம் செலக்ட் செய்யும் படங்களுக்குத் தேவையான அளவில் அதன் Edge ஐ ரிஃபைன் செய்வது எப்படி என்ற பாடமேயாகும்.

படம் 11_0 வைத் திறக்கவும்.

Tool Bar லிருந்து Quick Selection Tool ஐ Default Mode ல் எடுத்துக்கொள்ளவும்.

படத்தில் தெரியும் ஆற்று நீர் மீது Click & Drag செய்து தொடர்ச்சியாக (ஆற்றுநீரை) நிரப்பவும்.  Drag செய்யும்போது சில சமயங்களில் உங்கள் செலக்ஷன் ஆற்றைக் கடந்து கரையேறினாலும் பயப்படத் தேவை இல்லை. ;-)

படம் 11_1 ஐ பார்வையிடவும். சாதாரணமாக செலக்ட் செய்யும்போது படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளதைப் போன்று தேவைக்கு அதிகமான இடங்களும் Selection செய்யப்படலாம். அதனால் ஒன்றும் பிரச்சனை ஏற்படாது. Option Bar லிருந்து Subtract from Selection Tool ஐ தேர்வு செய்து (தேவைக்கு அதிகமாக செலக்ட் ஆகிவிட்ட) பச்சைப் புல் வெளியில் ட்ராக் செய்துவிடவேண்டும்.

இப்போது படம் 11_2 ல் காண்பித்தபடி ஆற்று நீர் மட்டும் தேர்வாகியிருக்கும்.

சரி, செலக்ஷனை எப்படி ரிஃபைன் செய்வது?

Menu bar > Select > Inverse செய்யவும். ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு வெளியே தேர்வாகும். தொடர்ந்து Option Bar ல் காணும் Refine Edge பட்டனை அழுத்தவும். அல்லது Menu Bar > Select > Refine Edge ல் க்ளிக் செய்யவும்.

உடனே படம் 11_3 ல் காண்பதைப்போன்று தெரியும். இந்த Default வசதியை விடுத்து கீழ் காணும் ஐந்து Option களில் On White என்ற நான்காவது Option ஐ தேர்வு செய்யவேண்டும். அப்போது ஆற்று நீர் பகுதி வெள்ளை நிறத்தில் தெரியும்.

தொடர்ந்து நமக்குத் தேவையான அளவில் நாம் ரிஃபைன் செய்யவேண்டும்.
புல் வெளிகள் அமைந்துள்ள கரையோரம் சற்று சாப்டாக அதே நேரத்தில் ஏற்கனவே உள்ளவற்றில் எந்த சிதைவோ குறைபாடோ இன்றி செலக்ட் செய்வதற்காக புது ரிஃபைன் விண்டோவில் (படம் 11_4 ல் காண்பித்துள்ளபடி எஃபக்ட் கிடைக்க)

Radius 9.4 என்றும்
Contrast 5 என்றும்
Smooth 3 என்றும்
Feather 1 என்றும்
Contract / Expand -5 என்றும் நான் கொடுத்திருந்தேன். பின்னர் OK செய்து Menu Bar > Image > Adjustment > Color Balance என்பதை க்ளிக் செய்யும்போது கிடைக்கும் விண்டோவில்(படம் 11_5 ல் காண்பித்தபடி) மாற்றம் செய்தால் ஆற்று நீரின் நிறத்தை மாற்றியபோது அதன் கரையோரங்கள் மிக துல்லியமாக செய்யப்பட்டுள்ளதை கவனித்திருப்பீர்கள். ரிஃபைன் செய்யாமல்  நிற மாற்றம் அல்லது இன்னபிற வேலைகள் செய்தால் அது கரடு முரடாக இருக்கும்.

இயன்ற அளவு இந்த பயன்பாட்டை மீண்டும் மீண்டும் செய்து பாருங்கள்.

Selections - Quick mask

ஃபோட்டோ ஷாப் தருகின்ற ஆயிரக்கணக்கான வசதிகளே அதன் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது. இன்னும் சொன்னால் இதெல்லாம் தேவையா என்று எண்ணும் அளவுக்கு சிறு சிறு விஷயங்களைக் கூட விட்டு வைக்காமல் எல்லாவற்றிக்கும் ஆப்ஷன்களைத் தந்துதவும் அதன் சிறப்பே தனி. அந்த வகையில் செலக்ஷன் பகுதிக்காக அது வழங்கும் இன்னொரு வசதியின் பெயர் Quick mask ஆகும்.
உதாரணமாக படம் 11_6 ஐத் திறந்து அதில் காணும் மஞ்சள் நிறப்பகுதியை Quick Selection மூலம் தேர்வு செய்கின்றோம். நாம் நினைத்த அளவு மட்டுமின்றி மேலதிகாக சில இடம் தேர்வாகியிருக்கும். சில இடம் தேர்வாகாமல் விடுபட்டிருக்கும்.

இது போன்ற நேரங்களில் Tool Bar ன் கீழே அமைந்துள்ள Edit in Quick Mask Mode (Icon) (Short Cut = Q) ஐ க்ளிக் செய்யவேண்டும். அப்போது நம் Work Window வில் Select ஆன பகுதியைத் தவிர மீதமுள்ள இடங்கள் செந்நிற மாஸ்க் (Red Mask) மூலம் மறைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். Tool Bar லிருந்து Brush Tool (B) ஐ தேர்வு செய்யவும். தேவைக்கேற்ப அதன் அளவை Right Click  செய்து மாற்றிக்கொள்ளவும்.

இவ்விடத்தில் வெள்ளை மற்றும் கறுப்பு ஆகியவற்றை மட்டுமே  நாம் பயன்படுத்த முடியும்.

வெள்ளை  = to ad selection
கறுப்பு = Subtract from Selection

இப்படி மாஸ்க் மற்றும் மாஸ்க் செய்யப்படாத பகுதியில் நாம் வரைந்துவிட்டு திரும்பவும் Tool Bar ன் கீழே அமைந்துள்ள Edit in Quick Mask Mode (Icon) (Short Cut = Q) ஐ க்ளிக் செய்தால் படம் துல்லியமான Selection னுடன் பழைய நிலைக்கு திரும்பியிருக்கும்.

இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக் கொள்வோம். Selection தொடரில் அடுத்த வகுப்பு நான்கு தலைப்புகளைக் கொண்டு பெரிய பாடமாக வரவிருக்கின்றது. அத்துடன் செலக்ஷன் பாடம் நிறைவுறும்.

எனவே இம்முறை தந்துள்ள குறிப்புகளை மிகக் கவனமாக சோதனை பயிற்சி செய்து கொள்ளுங்கள்.

(சென்றமுறை நான் பாதியில் நிறுத்திவிட்டுச் சென்ற பின்னணியில் வானத்தைக் காட்டும் பயிற்சி இந்த பதிவின் பின்னூட்டம் வழியாக பதிவு செய்கின்றேன். ஏன் எனில் தொடர் பாடத்தின்போது பாடமாகவே அது வரவேண்டும் என்பதால் அதை ஒரு பாடமாக இணைக்க விரும்பவில்லை. பின்னூட்டத்தை எதிர்பார்த்துக் காத்திருங்கள். நீங்களும் பின்னூட்டத்தில் பின்னியெடுங்கள்)
- jothi@inneram.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்

(க்ராஃபிக்ஸ் பயிற்சி தொடர்பான அனைத்துப் பதிவுகளையும் இங்கு காணலாம்)

No comments: