இப்போதெல்லாம் நாம் தொலைக்காட்சியில் அடிக்கடி நகைக்கடைகளின் விளம்பரத்தை காணலாம்…சேதாரம் இல்லை செய்கூலி இல்லை …என்று மக்களை கவர்கிறது இந்த வாசகங்கள்.
சேதாரமும் செய்கூலியும் இல்லாமல் நகைகள் தயாரிக்கப்படுகிறதா…?
அல்லது பேஷன் மாறிப்போன துணிகளை தள்ளுபடி என்ற பெயரில் விற்கிறார்களே அது போன்று பழைய டிசைன் நகைகளை அப்படி ஏதும் விற்பனை செய்கிறார்களா…? என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது.
சேதாரம் இல்லாமல் நகைகள் தயார் செய்யப்படுவதே இல்லை.
பட்டறைகளில் தொழிற்சாலைகளில் செய்யப்படும் நகைகளுக்கு கண்டிப்பாக சேதாரம் உண்டு.
மொத்த வியாபாரிகள் வாங்கக்கூடிய நகைகளுக்கு அதாவது 916 க்கு அவர்கள் 920 என்றக் கணக்கில் 4 சதவீதம் சேதாரத்துடன் கொடுத்துதான் வாங்குவார்கள்.இது கல்கள் இல்லாத நகைகளுக்கு மட்டும்.
கல்வைத்த நகைகளுக்கு சேதாரம் இல்லை காரணம் கல்லின் எடை தங்கத்துடன் சேர்ந்துக் கொள்வதால் செய்கூலி சேதாரம் இல்லாமலேயே மொத்த வியாபாரிகள் வாங்குவார்கள்.
ஆனால் கல்பதித்த நகைகளை செய்யும்போதும் சேதாரம் ஏற்படும்.சேதாரம் இல்லாமல் நகைகள் செய்யப்படுவதில்லை.
பழைய நகைகளாக இருந்தாலும் அதை பாளீஸ் செய்து சூடுபத்திய திரவங்களில் நனைத்து அதிலுள்ள அழுக்குகளைப் போக்கி புதிய நகைப்போல விற்றுவிடுவார்கள்.
கல் வைத்த ஓரு மோதிரம் செய்வதென்பது
முதலில் மோல்டிங் செய்யப்படவேண்டும் மோல்டிங் செய்ய நகை செய்பவரால் கூலி மற்றும் சேதம் கொடுக்க படுகிறது.
பின்னர் அளவு தட்டி ராவி சுத்தம் செய்ய படுகிறது . அளவு தட்டும் போதும் ராவும் போதும் சேதம் ஏற்படும் . அடுத்து மோதிரம் பம்பிங் முறையில் மெருகு ஏற்ற படுகிறது. இதிலும் சிறிது சேதம் ஏற்படும். பின்னர் கல் வைத்து செதுக்க படுகிறது. கல்வைக்க செதுக்க நகை செய்பவரால் கூலி மற்றும் சேதம் கொடுக்க படுகிறது. பின்னர் நீர் மெருகு போடப்பட்டு மோதிரம் இறுதி வடிவம் அடைகிறது.
இவ்வளவு வேலைகள் செய்துவிட்டு சேதாரம் இல்லை செய்கூலி இல்லை என்று விளம்பரம் செய்கிறார்களே…தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்களா…? பொது மக்களை ஏமாற்றுகிறார்களா…?
சேதாரம் செய்கூலி இல்லாத நகைகளில் தரத்தினை சோதனைச் செய்துப் பாருங்கள் . இது ஒருவகையான மோடி வித்தைக்காரனின் மோசடியாகவே இருக்கும்.
18 கேரட்டின் நகைகள்……….
இது 750 என்ற சுத்த தங்கமும் 250 செம்பும் கலந்து செய்யப்படுகிறது.இதன் நிறம் மஞ்சளாக இருக்காது வெழுத்துப்போன நகைகளாக காட்சியளிக்கும்.சிலர் இந்த நிறத்தைக் கண்டுவிட்டு தங்கமே அல்ல என்று சத்தியம் செய்வார்கள்.
சொல்லப்போனால் அதிகமான புதிய வடிவங்களை இந்த 18 கேரட்டில்தான் வடிவமைக்க முடிகிறது. குhரணம் தங்கத்தில் கலவை அதிகமாக கூட்டினால் அதன் தன்மை கெட்டியாகும். நாம் நினைத்தபடி வடிவங்களை உருவாக்க முடியும்.
நம்ம ஊர்களில் காசிமாலை என்ற 22 கேரட் பத்து பவுன் நகையைப் பார்த்தால் பெரிதாக இருக்கும்.அதே பத்து பவுனுக்கு துபாயில் காசிமாலை வாங்கினால் பார்வைக்கு சின்னதாக இருப்பது போலத் தெரியும்… தரம் குறைவுதான் அதற்கு காரணம்.
பணக்காரர்கள் 18 கேரட்டின் நகைகளைதான் அதிகம் வாங்குபவர்களாக இருக்கிறார்கள். அதில் வைரங்களை பதிப்பதற்கு ஏற்றமான தரத்தை கொண்டதாக 18 கேரட் இருக்கிறது.
தற்போது 18 கேரட் நகைகள் பல நிறங்களில் செய்கிறார்கள்.வெள்ளை நிறம் ரோஸ்நிறம் பழுப்பு நிறத்திலும் செய்யப்படுகிறது.
தங்கம் விலை உதாரணத்திற்கு ஒரு கிராம் 18 கேரட் 1000 ரூபாய் என்றால் அதன் செய்கூலி ஒரு கிராமுக்கு 200 – 300 என்று பல வேலைப்பாடுகளுக்கு தகுந்தமாதிரி இருக்கிறது.
நம்நாட்டில் பெரிய நகரங்களில் 18 கேரட்டின் டிசைன்கள் விற்பனையாகி வருகிறது. மும்பை சென்னையிலும் சாதாரன 18 கேரட் சங்கிலிகள் வெள்ளைத்தங்கத்தில் விற்கப்படுகிறது.
ஆலோய் என்ற உலோகத்தை தங்கத்தில் கலந்து செய்த நகையை ரோடியம் என்ற அமிலத்தில் நனைத்து எடுத்தால் வெள்ளை நிறமாக மாறிவிடும்.
இப்போதெல்லாம் 22கேரட்டுகளில் வளையல்களில் வெள்ளை ரோடியம் இடப்படுகிறது. மஞ்சலும் வெள்ளை கலரும் கலந்திருப்பதினால் அழகின் மெருகு கூடுகிறது.
இன்னும் தொடர்வோம்…
No comments:
Post a Comment