Wednesday, January 19, 2011

வாழும் நாட்டின் கொடுமையாமல் இறைவனுக்காக நாடு துறந்ததால் வந்த வழிகாட்டி !

A.D. என்பது கிறிஸ்துவிற்கு பின்பு என்று பொருள் படும்.ஆங்கில காலண்டர் அதன் வழி வந்ததுதான்  .A.H.என்பது ஹிஜ்ராவுக்கு  பின்பு  என்று பொருள் படும். .முஸ்லிம்கள் ஆங்கில காலண்டரை   பயன்படுத்தினாலும்  ஹிஜ்ரா காலண்டரையும்  சேர்த்து பயன்படுத்துகின்றனர். குறிப்பாக மார்க்க காரியங்களுக்கு இது அவசியமாக உபயோகிக்கப்படுகின்றது .

ஹிஜ்ரா என்றால்  வாழும் நாட்டின்   கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனுக்காக நாடு துறந்து அன்னிய நாட்டில் தஞ்சம் புகுவது. முஹம்மத்நபி(ஸல்)அவர்கள் மக்கா நகர் துறந்து(622 C.E.stands for Christian Era.) மதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் சென்ற நிகழ்விலிருந்து ஹிஜ்ரா காலண்டர் தொடங்கியது.முஹம்மத்நபி(ஸல்) அவர்கள் மெக்காவிலிருந்து மதினாவுக்குச் சென்ற நாளிலிருந்துதான் இஸ்லாமிக் காலண்டரின் வருடம் துவங்குகிறது. கி.பி. 622 இல் நிகழ்ந்தது நபியின் பயணம். சந்திரனை அடிப்படையாக கொண்ட இது 12 மாதங்கள் கொண்டது கலண்டே’ எனும் இலத்தீன் உச்சரிப்பிலிருந்து உருவானதுதான் காலண்டர் (Calender) எனும் ஆங்கிலச் சொல்.


ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அடையாளமாக நாட்காட்டிகள் உள்ளன. அச்சமுதாயங்கள் பெருமைப் படக்கூடிய பல அர்த்தங்கள் அந்த நாட்காட்டிகளில் அடங்கியுள்ளன. மேற்குலகின் மீதுள்ள கண்மூடித்தனமான மோகத்தால் சவூதி அரேபியா தவிர அனைத்து இஸ்லாமிய நாடுகளும் தங்களின் ஹிஜ்ரா காலண்டர் நடைமுறையை இழந்தன. கிருத்துவக் காலண்டரையே தங்கள் அரசின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியாக அறிவித்தன.

சவூதி அரேபியா மட்டும் ஹிஜ்ரீ நாட்காட்டியை பயன்படுத்திக் கொண்டிருப்பதுடன், அவ்வாறு செயல்படவேண்டும் என்பதை அந்நாட்டின் அரசியல் சாசனச் சட்டத்தின் இரண்டாவது பகுதியில் சட்டமியற்றியுள்ளது.

ஹிஜ்ரா (சந்திர) மாதங்கள்

   1. முஹர்ரம்
   2. ஸஃபர்
   3. ரபீவுல் அவ்வால்
   4. ரபீவுஸ் ஸானீ
   5. ஜுமாதில் ஊலா
   6. ஜுமாதிஸ் ஸானீ
   7. ரஜப்
   8. ஷாஃபான்
   9. ரமளான்
  10. ஷவ்வால்
  11. துல்கஃதா
  12. துல்ஹஜ்



நன்றி சமுதாய ஒற்றுமை .காம் --------------------------------------------------------------------------------------------------
ஹிஜ்ரா காலண்டர் 1432

Click a picture to see a larger view.
 பெரிது படுத்தி பார்க்க படத்தினை கிளிக் செய்யுங்கள்.




 
Source : http://www.islamkalvi.com/hijracalendar/1432/index.html

No comments: