Sunday, October 18, 2009

தேவையை தருவாய் தேவதையே...by SUMAZLA/சுமஜ்லா

முதலில், நான் ஏக இறையை தவிர, யாரிடமும் எதுவும் கேட்பதில்லை. ஆக, இந்த தேவதை, இறையின் தூதாக கொண்டு பதில் தருகிறேன்.

ஏகாந்த தனிமையில், மொட்டை மாடியில், கவலையோடு அமர்ந்திருந்தேன்...

வழக்கமான என் பொழுதுபோக்கான நட்சத்திர ஆராய்ச்சி கூட செய்யவில்லை...

ஆனால், இரண்டு நட்சத்திரங்கள் என்னை பார்த்து கண்சிமிட்டின. கொஞ்சம் கொஞ்சமாக அவை அருகில் வர, எங்கிருந்து, அதன் பின்னால், இரண்டு நிலாக்கள் முளைத்தன? அட, இறக்கைகள்...

கண்ணை மூடி திறந்தபோது தெரிந்தது, நவாஸும், சதீஷும் என்னிடம் அனுப்பியிருப்பது...

ஆசைக்கா பஞ்சம்...என் கவலைக்கு காரணமே அதானே???

இதோ என் வேண்டுகோள்களின் பட்டியல்!

1.எல்லா அசைன்மெண்ட்டுகள் மற்றும் ரெகார்டுகளும் தானாக எழுதப்பட்டு விட வேண்டும்.

2.பேனாவை எடுத்து பேப்பரில் வைத்தால், தானாகவே பரிச்சை எழுதி விட வேண்டும்.

3.சிஸ்டம் முன்பாக உட்காரும் தேவை இல்லாமல், நான் மனதில் நினைத்து எண்டர் கொடுப்பது, பதிவாக வந்து விட வேண்டும்.

4.வீட்டு வேலைகளை எல்லாம் நொடியில் முடித்து தர, சொன்ன வேலையை செய்யும் ஒரு ரோபோ வேண்டும்.

5.மாதம் ஒரு முறை, உலகின் எதாவது ஒரு மூலைக்கு விர்ச்சுவல் டூர் போய் வந்து, அந்த கட்டுரையை என் ப்ளாகில் போட வேண்டும்.

6.உள்ளே கை விட்டு எடுக்க எடுக்க, ஆயிரம் ருபாய் நோட்டுக்களாக(அல்லது தங்க கட்டிகளாக) வரும் ஒரு உண்டியல் வேண்டும்.

7.எழுத்துலகில் ஒரு பவர்ஃபுல் சக்தியாக நான் உருவெடுக்க வேண்டும்.

8.என்றென்றும் வாழ்வில் நிம்மதி நிலைத்திருக்க வேண்டும்.

9.வெளியே சொல்ல முடியாமல், மனதில் இருக்கும் எல்லா ஆசைகளும் நிறைவேற வேண்டும்.

என்ன, எல்லாம் சுயநலமாக இருக்கு என்று பார்க்கிறீர்களா? இதோ என் பத்தாவது வேண்டுகோள்.....

10.இந்த உலகில் துன்பம் என்பதே யாருக்கும் இருக்கக் கூடாது!

இதில் எல்லாமே அடங்கி விட்டதல்லவா??????

தேவதை எல்லாவற்றையும் கேட்டு விட்டு, ‘இவை ஆசைகள் அல்ல, பேராசைகள். அதனால், இவை எல்லாம் நிறைவேற நீ மறு உலகம் வர வேண்டும்’ என்று சொல்லிவிட்டு சென்று விட்டது...இப்போதைக்கு நான் இருப்பதை விட்டு பறப்பதை பிடிப்பதாக இல்லை...என்ன செய்யலாம் சொல்லுங்கள்?!
நன்றி-சுமஜ்லா.
source:sumazla.blogspot.com

No comments: