ஏழையின் சிரிப்பில் எவ்வாறு இறைவனைக் காண் முடியும் என்பதை பெருமானார்(ஸல்) அவர்கள் உயிருடன் வாழ்நத காலத்திலேயே பட்டியலிட்டுக் கூறி அதை அவர்களும் அவர்களுடைய ஆருயிர் தோழர்களும் நடைமுறைப் படுத்தி;க் காட்டினார்கள்.
அல்லாஹ் இறுதித் தீர்ப்புநாளில் கூறுவான்: ஆதமின் மகனே! நீ உலகில் வாழ்ந்து கொண்டிருந்த பொழுது ஒரு நாள் நான் உன்னிடம் எனக்கு உணவளிக்கும்படி கேட்டேன், ஆனால் நீ உணவளிக்கவில்லை.
அதற்கு மனிதன் கூறுவான்: என் அதிபதியே! அனைவருக்கும் உணவளித்து அகிலமனைத்தையும் பராமரித்துக் காப்பவன் நீயே! அப்படியிருக்க, நான் எப்படி உனக்கு உணவளிக்க முடியும் ? அப்பொழுது இறைவன் கூறுவான்: உன்னிடம் என்னுடைய இன்ன அடியான் அவனுடைய பசிக்கு உணவளிக்கும்படிக் கேட்டான். ஆனால் நீ மறுத்து விட்டாய் நீ அவனுக்கு உணவளித்திருந்தால், அதை நீ எனக்கு அளித்ததாக பெருமைப் பட்டிருப்பேன் அதற்கான வெகுமதியை இப்பொழுது நீ என்னிடமிருந்து பெற்றிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?
ஆதமின் மகனே! நீ உலகில் வாழ்ந்து கொண்டிருந்த பொழுது ஒரு நாள் நான் உன்னிடம் எனக்கு நீர் புகட்டும் படிக்கேட்டேன், ஆனால் நீ மறுத்து விட்டாய். அதற்கு மனிதன் கூறுவான்: என் அதிபதியே! அனைவருக்கும் நீர் புகட்டி அகிலமனைத்தையும் பராமரித்துக் காப்பவன் நீயே! அப்படியிருக்க, நான் எப்படி உனக்கு நீர் புகட்ட முடியும் ?
ஆதமின் மகனே! நீ உலகில் வாழ்ந்து கொண்டிருந்த பொழுது ஒரு நாள் நான் உன்னிடம் எனக்கு நீர் புகட்டும் படிக்கேட்டேன், ஆனால் நீ மறுத்து விட்டாய். அதற்கு மனிதன் கூறுவான்: என் அதிபதியே! அனைவருக்கும் நீர் புகட்டி அகிலமனைத்தையும் பராமரித்துக் காப்பவன் நீயே! அப்படியிருக்க, நான் எப்படி உனக்கு நீர் புகட்ட முடியும் ?
அப்பொழுது இறைவன் கூறுவான்: உன்னிடம் என்னுடைய இன்ன அடியான் அவனுடைய தாகத்திற்கு தண்ணீர் கேட்ட பொழுது நீ அதை மறுத்து விட்டாய் நீ அவனுடைய தாகத்திற்கு தண்ணீர் கொடுத்திருந்தால், நீ எனக்கு நீர் புகட்டி என் தாகத்தை தனித்ததாக நான் கருதி பெருமைப் பட்டிருப்பேன் அதற்கான வெகுமதியை இப்பொழுது என்னிடமிருந்து பெற்றிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? என்று இறைவன் கூறுவதன். என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஆதார நூல் (முஸ்லிம்)
ஒரு வேளை உணவைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத வறியவர் ஒருவர் தனது வீட்டு வாசலில் பசியோடும், தாகத்தோடும் நின்று கையேந்தும் பொழுது அவருக்கு தேவையான உணவையும், நீரையும் புகட்டினால் அவர் உண்டு புசித்து அவரது பசி அடங்கும் போது உங்களை நோக்கி புன்முறுவல் பூப்பார் அங்கு இறைவனைக் காண்பீர்கள் என்று கருணையே உருவான காருண்ய நபி(ஸல்) அவர்கள் தங்களுடைய தோழர்களிடம் கூறினார்கள்.
அத்துடன் தர்மத்தை ஆர்வமூட்டி இறைவனிடமிருந்து புனித வசனங்கள் இறங்கியதும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடைய தோழர்கள் ஒவ்வொருவரும் தங்களிடம் இருக்கும் பொருளாதாரத்தை ஏழை எளியோருக்கு வாரி வழங்கி இறை திருப்தியை அடையலானார்கள்.
Published in : ஆன்மீகம், இஸ்லாம்நன்றி:அதிகாலை
No comments:
Post a Comment