Saturday, December 4, 2021

பெண்கள் மீது இருக்கும் மதிப்பை நீங்கள் குறை சொன்னால் உங்களிடம் ஏதோ ஒரு குறை இருக்கிறது

 

பெண் என்பவள் வீட்டின் விளக்கு .அவள் இன்றேல் வீட்டில் வெளிச்சம் இல்லை.

வாழ்க்கையில் ஒருவன் எதுவாக வேண்டும் என்று ஒரு பெண்னே தீர்மானிக்கிறாள்.

அவள் தான்

பரம்பரையை உருவாக்குபவள்.

 பெண்கள் மீது இருக்கும் மதிப்பை நீங்கள் குறை சொன்னால் உங்களிடம் ஏதோ

 ஒரு குறை இருக்கிறது அதை முதலில் திருத்துங்கள்

-----------------------------

ஊடுருவும் பார்வை

சுவை பார்க்கும் நாக்கு

சிந்திக்கும் மூளை

செயல்படும் கை

தொடர்ந்து ஓடும் குருதி

துடிக்கும் இதயம்

இடம் விட்டு நகர உதவும் கால்கள்

கேட்டு அறியும் செவிகள்

இன்னபிற அங்கங்கள் பெற்றாய்

இவைகளைக் கொண்டு வாரிசுகளையும் உருவாக்கினாய்

இவைகளை உமக்களித்த இறைவனுக்கு நன்றி செய்து அவனைத் தொழுதாயா !

அங்கங்கள் செயல்பட உலகில் உலாவருகின்றாய்

அங்கங்கள் செயல்படும் திறனை இழக்க இருந்த இடத்தில் மூலையில் முடங்குகின்றாய்

முடங்கிய பின் முதிர்ச்சி பெற்று இறைவனின் ஆற்றலை சிந்திக்கின்றாய்

மாண்புடைய இறையோனின் அருள் நாடி அழுகின்றாய்

இறையோனின் அருள் பெற்று நலம் பெற்று திரும்பிய நிலையில்

இறையோனின் நினைவில் சில நாட்கள் இருக்கின்றாய்

இறையோனின் நினைவு சில நாட்கள் இருந்து உன்னை விட்டு அகல்கின்றதேன்!

நன்றி மறப்பதும் நல்லதை நினைக்க மறப்பதும் மனிதனோடு உடன்பிறந்த செயலானதேன்!

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு. குறள் 110:

==============


No comments: