பவளக்கொடியைத்
தேடி..
ஒரு இசை சேகரிப்பாளரின் பயணம்
அலிகான்
அவர்களுடன் ரஞ்சித் மிலிந்தன் நேர்காணல்
(செப்டம்பர்
2011 ல் வெளிவந்த நேர்காணல்.மீள்பதிவு)
.......................................................................................................................
சேகரிப்பாளர் அலிகான திருவாரூர் மாவட்டத்திலுள்ள
முத்துப்பேட்டை என்ற சிற்றூரில் 1939ல்
பிறந்தவர். தமிழ் சினிமாவின் ஆரம்ப
கட்ட படங்களிலிருந்து இன்று வரைக்குமான சினிமாப்பாடல்களை
கால் தேயத் தேய சேகரித்து
வைத்திருக்கிறார். ஆரம்பகால சினிமான கிராமஃபோன் இசைத்
தட்டுக்களைப் பற்றிய கேள்விகளைத் தொகுத்ததில்,கிடைத்த பேட்டிதான் இது. இத்தகைய
சேகரிப்புகளை பாதுகாக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக் கொள்வதே
பொருத்தம் எனக்கூறும் இவர் ஆற்காட்டு ரோட்டில்
ராம் தியேட்டர் அருகே
ஓர் ஆய்வு மையம் வைத்துள்ளார்
. அங்கே செல்பவர்கள் தேவையான
தமிழ் படப்பாடல்களையும் இந்திப்பட பாடல்களையும் உரிய கட்டணம் செலுத்தி
பதிவு செய்து கொள்ளலாம். வானொலி,
தொலைக்காட்சி அச்சு ஊடகம் எல்லாவற்றிலும்
பங்கேற்றிருக்கும் ,பதிவு செய்யப்பட்டிருக்கும் அலிகான் அவர்களை
காட்சிப் பிழைக்காக நேர்காணல் செய்தவர் ரஞ்சித் மிலிந்தன்.
....................................................................................
கே. உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்?
பதில்.
நான் முத்துப் பேட்டைலதான் பிறந்தேன். அப்பா ஒரு சுதந்திரப்போராட்ட
தியாகி. அவருக்கு காமராஜர் சத்தியமூர்த்தியிடம் எல்லாம் பழக்கமுண்டு. என்
மறக்க முடியாத சிறுவயது அனுபவம். ஒரு
நாள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தேன். பதின்பருவம் ஓர் அம்பாஸிடர் கார்
வீட்டு வாசலில் வந்து நின்றது.
முன்னாலிருந்து ஒரு போலிஸ்காரர் இறங்கி
கதவைத்திறக்க பின்னாலிருந்து
உயரமான ஒருவர் இறங்கினார். நேரே
என்னிடம் வந்து தோளைத்தட்டி ‘இஸ்மாயில்
இருக்கானா?‘ என்று கேட்டார். எனக்கு
அப்பாவை அவன் இவன் என்று
பேசுகிறாரே என்று கோபம். உள்ளே
சென்று அப்பாவிடம் யாரோ ஓர் ஆள்
உன்னைக் கேட்கிறார் என்று சொன்னேன்.. வெளியே
வந்தவர்,‘ அடடா காமராசா வா
வா“ என்று வந்து அணைத்துக்
கொண்டார். வீட்டில் நாற்காலி போன்ற எதுவும் கிடையாது.
உள்ளே சென்ற காமராஜர் அவரே
ஒரு பாயை எடுத்து விரித்துக்
கொண்டார். அம்மாவிடம்
என்ன சமையல் என்று கேட்டார்.
மீன் வாங்கியுள்ளேன்.
இனிமேல்தான் சமைக்க வேண்டும். என்றார்
அம்மா. நான் மெதுவாகச் சமையுங்கள்
நான் சாப்பிட்டுவிட்டுப் போகிறேன் என்று சொல்லிவிட்டு
தந்தையுடன் பேசத்தொடங்கிவிட்டார். அப்போது
சீனா.கானா. முகம்மது இஸ்மாயில்
உப்புசத்தியாக் கிரகத்தில் கலந்து கொண்டு சிறைசென்றவர்
காந்தியைப் பார்க்கக் குழந்தைகளான என்னைக் கூட்டிச் சென்றிருந்தார்
தனிநபர் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு நடைப்பயணமாக
சென்னை நோக்கிச் சென்றவரை மாயாவரத்தில் அடித்துப்போட்டு விட்டார்கள். பிராமணக் குடும்பம் ஒன்று அவரைக் காப்பாற்றி
வீட்டில் வைத்து வைத்தியம் செய்து
ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். அப்படியாக
தீவிர அரசியல்வாதியாக வாழ்ந்தவர் பின்னாளில் எம்.எல்.ஏவாக
நிற்கச் சொன்னபோது அதெல்லாம் சரிப்படாது என்று மறுத்துவிட்டார்.
கே. உங்கள் கல்வி, தொழில்
ஆகியவை எப்படி அமைந்தன?
ப. நான் முத்துப்பேட்டைலதான் படிச்சேன்.
எஸ்.எஸ்.எல்.சி
பெயில். 1959ல் தமிழக அரசின்
ஊரக வளர்ச்சி துறைல பணியில் சேர்ந்தேன்.
முதலில் நாகப்பட்டினம் கீழ்வேளுரில் போஸ்டிங்.பின்னர் வேறு சில
இடங்களுக்குப் பிறகு கும்மிடிப் பூண்டிக்கு
வந்து அங்கே முப்பத்தைந்து ஆண்டுகள்
பணிசெய்து 1999ல் ஓய்வு பெற்றேன்.
ஊர்ல இருக்கும்போதே ஐந்து வயசுல இருந்து
ஊரில் இருந்த சினிமா கொட்டகைல
படம் பார்க்க ஆரம்பிச்சேன்.
அப்பா சுதந்திர போராட்ட
தியாகியாகையால் எனக்கு அங்கே சினிமா
இலவசமாப பார்க்க முடிஞ்சது.
கே. சினிமா பாடல்களின் இசைத்தட்டுகளைச்
சேகரிக்கணும்னு உங்களுக்கு எப்பத் தோணியது?
ப. அப்ப எல்லாம் இலங்கை
வானொலிதான் ஃபேமஸ்
அதுல நிறைய பாட்டுக்களை போடுவாங்க
. பாட்ட கேட்டுக் கேட்டு அந்தப் பாடல்கள்
மேல் ஆர்வம் வந்துச்சு. அந்தப் பாடல்களை மீண்டும்
கேட்க ஆசைப்பட்ட போதுதான் கிராம ஃபோன் இசைத்தட்டுகளைச்
சேர்க்கணும்னு ஆர்வம் வந்துச்சு. பதினாறு பதினேழு வயசுல
இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க
ஆரம்பிச்சேன். பிறகு அதுவே பெரிய
வேலையாப் போச்சு.
கே. வேலைல சேர்ந்த்தற்கு அப்புறம்
எப்படிச் சேகரிப்பைத் தொடர்ந்தீங்க?
ப. லீவு நாட்கள்ல எங்கயாவது
கிளம்பிடுவேன். தமிழ்நாட்டுல எல்லா ஊர்களுக்கும் கிராமங்களுக்கும்
இசைத் தட்டு வாங்குவதற்காக சென்றிருக்கிறேன்.
ஒருமுறை தம்பிக்கோட்டை என்ற ஊரில் ஒரு
கல்யாணத்துக்காக சென்றிருந்தேன். அங்கு வெற்றிலை பாக்கு
வைத்துக்கொடுத்த தட்டைப் பார்த்தால் இசைத்தட்டாக
இருந்தது. இசைத்தட்ட ஓரங்கள்ல வளச்சி வெத்தில தட்டா
மாத்தி வச்சிருந்தாங்க. அதன்பிறகு
அப்படி மடிக்காத இசைத்தட்டுகள்
பலதையும் வாங்கி வந்தேன்.
#சினிமா
தொடரும் 1
Mohamed Safiதமிழ் முஸ்லிம் திண்ணை
No comments:
Post a Comment