முரசொலி செல்வம்
திரு கலைஞர் கருணாநிதியின், இரண்டாவது சகோதரி சண்முகசுந்தரி அவர்களின் மற்றொரு மகன்.
முரசொலி மாறன் அவர்கள் செல்வம் அவர்களின் உடன்பிறந்த ஒரே சகோதரர்
முரசொலி செல்வம் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் மகள் செல்வியை மணந்துள்ளார். பெங்களூரில் ஒளிபரப்பாகும் சன் குழுமத்தை சேர்ந்த கன்னட மொழியிலான உதயா தொலைக்காட்சியை நிர்வகித்து வருகிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முரசொலி செல்வம் எழுதிய ' முரசொலி சில நினைவலைகள் ' என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், முரசொலி சில நினைவலைகள் ' என்ற நூலை முதல்வர் வெளியிட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து, திமுக முப்பெரும் விழாவில் சிறப்பாக பணியாற்றிய திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார்.
கலைஞர் மருமகன் முரசொலி செல்வம் அவர்கள் எனக்கு நெருங்கிய நண்பர் .
கல்லூரியில் முதல் ஆண்டிலிருந்து (புதுக் கல்லூரி, லயோலாகல்லூரி,சட்டக்கல்லூரி) சட்டப் படிப்பு வரை தொடர்ந்து என்னோடு படித்தவர்
வெளியில் விளம்பரப்படுத்திக் கொள்ளாத உளியாய் முரசொலி செல்வம் பல ஆண்டுகளாய் செயல்படுகின்றார்
வைகோவை சட்டக்கல்லூரி மாணவர் தேர்வுக்கு போட்டியிடச் சொன்னவரே செல்வமென்று வைகோவே சொல்கின்றார்
செல்வத்துடன் நெருங்கிய பழக்கம் உள்ளவர்களுக்கு அவரது திறமைத் தெரியும்.யாரையும் பகைக்காமல் சாதனைகள் செய்யும் ஆற்றல் பெற்றவர்
கலைஞரின் நேரம் போதாமையால் தினமும் தம்பிக்கு எழுதும் கடிதமும் கட்டுரையும் கடைசி நேரத்தில் வரும் .அதில் ஒரு அடித்தல் ,திருத்தல் இருக்காது ..இதைக் காண வியக்காதவர்கள் யாருமில்லை
கலைஞரை ஆசிரியர் என்று முரசொலி அலுவலகத்தில் அழைப்பார்கள்
நான் முரசொலி அலுவலகம் செல்வதுண்டு .
கலைஞர் வீட்டுக்கு பலமுறை நான் சென்றிருக்கின்றேன் .லயோலாவில் நான் படிக்கும் காலத்தில் நாங்கள் சிலர் அவர் முன் அவரது வீட்டில் அமர்ந்திருக்கும்போது எங்கள் ஆலோசனையை கேட்டதும் வியப்பாக இருந்தது
எனது மகன் திருமணதிற்கு கலைஞரை அழைத்தபோது அவரது மருமகன் சொன்னது மயிலாடுதுறை கழக அனுமதியோடு வரவேண்டும் அத்துடன் கழக நண்பர்கள் அதிகம் வருவார்கள் திருமணம் பெரிய செலவு செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகுமென்றார் .
அதனால் அவர் மருமகன் செல்வம் தனது நண்பர்களுடன் திருமணதிற்கு வந்தார்
கலைஞர் அவர்களோடு அவரது இல்லத்தில் கலைஞருடன் படம் பிடித்துக்கொள்ள அவரது மருமகனிடன் விருப்பம் தெரிவித்தேன் .அவர் சென்னை வரச்சொல்லி தெரிவித்தார் .ஆனால் எனக்கு உடல்நலம் சரியில்லாமல் போகமுடியவில்ல .அது எனக்கு பெரிய இழப்பாகப் போனது
முன்பு 'காஞ்சித் தலைவன்' படப்பிடிப்புக்கு சென்றோம் .
MGR அவர்கள் நடித்துக் கொண்டிருந்தார் .அவர் எங்களை வெளியே இருக்கச் சொன்னார் .நாங்கள் வெளியே நிற்பதை பார்த்த கலைஞர் 'ஏன் வெளியே நிற்கிறீர்கள் உள்ளே வாருங்கள்' என்று அழைத்துப் போனார் .வெளியே நின்றவர்கள் நானும் முரசொலி செல்வமும் . MGR அவர்கள் சிரித்த முகத்துடன் எங்களைப் பார்த்த பின்பு தனது நடிப்பை தொடர்ந்தார்.
செல்வி அவர்கள் மிகவும் பாசமாக எனது மனைவியுடன் இருப்பார். எனது மனைவியும் முரசொலி அலுவகம் வந்து பார்த்து மகிழ்தார்
#அனுபவங்கள்
-----------------------------
நண்பர் திரு.முரசொலி செல்வம் அவர்கள் பேத்தியின் திருமண வாழ்த்து.
பாடுபவர்-தேரிழந்தூர் தாஜூதீன் அவர்கள்.ம்மது அலிMohamed Ali
நீடூர் முகம்மது அலி பாசமிகு நண்பர் திரு செல்வம் அவர்களின் பேத்தி அவர்களின் திருமண வாழ்த்து பாடல்
பாடுபவர் தாஜுதீன் அவர்கள்
நீடூர் முகம்மது அலி
No comments:
Post a Comment