Tuesday, December 21, 2021

வாழ்க்கை துணையின்றி வாழ்தல் காய்க்காத மரம்

 


திருமண வயதை இன்னும் தள்ளிப்போடுவது உயர்வல்ல !

இந்தியாவின் தட்ப வெட்ப காலநிலை காரணமாக  ஒரு பெண் பூபெய்தும் பருவம் பனிரெண்டு வயதிலேயே தொடங்கிவிடுகின்றது .இது குளிர் நாட்டின் தட்ப வெட்ப காலநிலை காரணமாக பெண்கள் பூபெய்தும் காலம் சிறிது மாற்றமாக தள்ளியே வருகின்றது .இதே நிலைதான் குழந்தைகள் பிறக்கும் நிலையிலும் .தடையின்றி செயல்பட்டால் இந்தியாவில் அதிகமாகவே மக்கட்பேறும் அதிகமாகும் அது அதிக குளிர்உள்ள நாடுகளில் அவர்களால் முடிவதில்லை .அங்கு குழந்தைகள் பிறப்பது குறைவுதான்

பூபெய்தும் காலத்திற்கும் திருமண காலத்திற்கும் மிகவும் தாமதமானால் மக்கள் தவறான தூண்டுதற்க்கு அவர்கள் மனோநிலை மாறிவிடும் ,அதனால் மக்களுக்கு ஒழுக்கம் கெட்டுவிடும்

மனிதனின் காதல் காமம் இச்சை இவைபோன்றவை வயதைப் பொறுத்து வருவதில்லை.

  திருமணமும் வயதை காரணம்காட்டி நடைபெறுவதில்லை .பெரிய அறிஞர்கள் தீர்க்கதரிசிகள் தன்னைவிட மூத்த பெண்களையும் தன்னைவிட மிகவும் குறைந்த வயது பெண்களை திருமணம் செய்து சிறப்பாக வாழ்ந்து காட்டியதனை நாம் அறிவோம் .இதே நிலை பெண்களும் செய்துள்ளார்கள்   

பசிக்கும்போது உணவு கிடைக்காதபோது   அவன் தவறான வழியில் உந்தப்படுவான். விரும்பியபோது கிடைத்துவிட அவன் தன்னிலையில் திருப்தி அடைந்துவிடுவான் .

மனிதனுக்கு ஏதாவது ஒரு  உந்துசக்தி அல்லது வேலை கிடைக்க வேண்டும் .அதற்கு அரசு முயலவேண்டும் .இல்லையெனில் மாற்று கடைசிவழி  திருமணம்தான் .அதனை ஏன் வயது வரம்பு தடையாகி கட்டுப்படுத்துகிண்றீர்கள். திருமணம் செய்துக் கொள்பவன் பொறுப்பு உடையவனாகின்றான்

எனக்கு திருமணம் நடக்கும்போது என் வயது இருபத்து மூன்று

என் மனைவிக்கு அப்போது வயது பதினெட்டு

நான் இளநிலை இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே திருமணம் செய்வித்தார்கள்

திருமணம் முடிந்ததால் என் படிப்பு தட்டுப்படவில்லை

திருமணம் முடிந்துதான் இளங்கலை  மற்றும் சட்டத்தையும் படித்தும் முடித்தேன்

இத்தனையும் அறிந்து வாழ்க்கைத் துணையின்றி வாழ்தல் முறையோ !

வாழ்க்கை துணையின்றி வாழ்தல்

காய்க்காத மரம்

பூக்காத செடி

வாசனையில்லா மலர்

பெண் பூப்பெய்தினால் திருமணம் செய்விக்க தகுதியானாள்

மரம் பூவைத் தர காயாகி பழமாகின்றது

பழத்தின் விதை மரத்தை உருவாக்குகின்றது

செடியின் பூ மகரந்த சேர்க்கை உருவாக வழி தருகின்றது

அனைத்தும் அடுத்ததை உருவாக்க உலகம் செழிக்கின்றது

வாழ்க்கைத் துணையும் உலகத்தில் அவசியமாகின்றது

வாழ்க்கைத் துணையின்றி தவித்தல் கொடுமை

வாழ்க்கைத் துணை வாழ்வில் பிடிப்பை தருகின்றது

வாழ்க்கைத் துனையோடு வாழ்வாங்கு வாழ்வோம்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும். -குறள் 50:

(மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் வாழ்வோரில் உயர்ந்தோராக வைக்கப்படுவான்.)

#‎வாழ்க்கைத்துணை

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

''வாலிபர்களே உங்களில் யார் (உடல் மற்றும் ஏனைய) சக்தி பெறுவாரோ அவர் திருமணம் முடித்துக் கொள்ளட்டும். நிச்சயமாக அது (திருமணம்) கற்பைக் காத்துக் கொள்வதற்கும், பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுவதற்கும் (போதுமானது).....''

நூல்: புகாரி 5065, முஸ்லிம் 1400 )

வாழ்க்கையை கொடுத்தவன் இறைவன்

இணை இணையாக படைத்தவனும் இறைவன்

"நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? மேலும், உங்களை இணை இணையாக (ஜோடி ஜோடியாக)ப் படைத்தோம். உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்; அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்; மேலும், பகலை உங்கள் வாழ்வாதாரங்களைத் தேடிக் கொள்ளும் காலம் ஆக்கினோம். உங்களுக்கு மேல், பலமான ஏழு வானங்களை உண்டாக்கினோம்; ஒளி வீசும் விளக்கை (சூரியனை)யும் அங்கு வைத்தோம். அன்றியும், கார் மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்; அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் வெளிப்படுத்துவதற்காகவும், கிளைகளுடன் அடர்ந்த சோலைகளை வெளிப்படுத்துவதற்காகவும்!' (அல்-குர்ஆன் 78: 6-16)

 Mohamed Ali

No comments: