Monday, August 2, 2021

வெளிநாட்டு பயணிகள்

 Abdul Gafoor


வெளிநாட்டு பயணிகள்

திருவனந்தபுரம் வந்திறங்கியதும்

கவனிக்க வேண்டிய விஷயங்கள்  ...

இறைவனின் கிருபையால்

ஆகாயத்தில் பறந்த விமானம்

மெதுவாக தரை இறங்குகிறது  ....

நிறைய கனவுகளை சுமந்து

குடும்பங்களை நேரில் கண்டு

கைக்குலுக்க துடிக்கும் பயணிகளுக்கு

கொரோனா தடை விதித்துள்ளது  ....

விமான இருக்கைக்கு மேலுள்ள சிற்றறைகளில் வைத்த தோள்ப்பைகள் பயண கச்சாத்துகள் அடங்கிய கைப்பைகள் இவைகளை எடுத்துக் கொண்டு வரிசையாக திருவனந்தபுரம் விமான நிலையத்துக்குள் நுழைகிறோம்  ....

அங்கே நிற்கும் அலுவலர்கள் நமது கவச உடைகளை விலக்கச் சொல்லி நம்மை சிறிய பரிசோதனை செய்கிறார்கள்  ....

அடுத்ததாக அருகேயுள்ள மேசை முன் நிற்கும் அலுவலர் நம்மிடம் நமது உடல்நிலை குறிப்புகளை கேட்கிற வேளையில் நாம் எந்த அறிகுறியும் இல்லை என்று சொன்னதும் நம்மை உள்ளே அனுமதிக்கிறார்  ....

அடுத்த கட்டமாக

குடியுரிமை பகுதி இங்கே

கடவுச்சீட்டு

விமானமேறிய அட்டை (Boarding Pass)

இவைகளை கொடுக்க வேண்டும்  ....

நாம் எங்கிருந்து பயணித்தோம் எந்த நாடுகளில் தங்கி வருகிறோம் என்கிற கேள்விகளுக்கு சரியான பதில் உரைத்த பின்னர் முகக்கவசத்தை விலக்கச் சொல்லி நாம்தானா என்று உறுதி செய்து கடவுச்சீட்டில் இந்தியா வந்திறங்கிய முத்திரை குத்தப்பட்டு பாஸ்போர்ட் போர்டிங் பாஸ் நம்மிடம் திருப்பி தரப்படுகிறது  ....

அடுத்ததாக சிறிது தூரத்தில்

மீண்டும் பாஸ்போர்ட் போர்டிங் அட்டை சரிபார்க்கப்படுகிறது  ....

இதையடுத்து

நுண்கதிர் (Scanning) சுழல் உருளைக்குள் நமது உடமைகளை வைத்து அடுத்த பக்கத்துக்கு தள்ள வேண்டும் ....

இங்கே அலுவலருக்கு நம்மீது சந்தேகங்கள் எழுந்தால் அது சார்ந்த கேள்விகள் கேட்கப்படும்  ....

தோள்ப்பைகள் கைப்பைகள் இவைகளை எடுத்துக் கொண்டு விமானத்திலிருந்து பெட்டிகள் இறங்கி வந்து கொண்டிருக்கும் நீண்ட சுழற்சி உருள் பகுதிக்கு வர வேண்டும்  ....

நமது பெட்டிகளை நாம் கண்டெடுத்து தள்ளு வண்டியில் வைத்து உருட்டி வெளியேறும் வரிசைக்கு வர வேண்டும்  ....

இந்த பகுதியில் சந்தேகிக்கும் பெரிய பெட்டிகள் திறக்கச் சொல்லப்படும்  ....

இல்லையேல் நேராக வெளியே செல்லும் வாசலுக்கு நமது பெட்டிகள் வைத்த வண்டியை தள்ளிக் கொண்டு வர வேண்டும்  ....

இந்த முக்கியமான பகுதியில்

புதிய கொரோனா பரிசோதனைகள்

ஆரம்பமாகிறது என்பதால் பயணிகள் நிறுத்தி வைக்கப்படுகிறார்கள்  ....

இங்கே

ஏர் சுவைதா சான்றிதழ்

கொரோனா எதிர்மறை சான்றிதழ்

வீட்டுக்கு நம்மை அழைத்துச்

செல்லுகிற வாகன விவரங்கள்

இந்தியா வந்து சேர்ந்து

நாம் செல்லும் முகவரி சான்றிதழ்

(Short Visit Regiteration E Pass)

ஆகியன பரிசோதிக்கப்படும்  ....

இந்த மேசையில் நம்மிடம் சிறிய சீட்டு தந்து நம்மை கோவிட் பரிசோதனை செய்யச் சொல்வார்கள்  ....

அடுத்த மேசையில் நமது

பாஸ்போர்ட்

நாம் பணியாற்றும் நாட்டில் செலுத்திய தடுப்பூசி வெள்ளை அட்டை இவைகளை கேட்டு வாங்கி சரிபார்க்கிறார்கள்  ....

தடுப்பூசி செலுத்தவில்லையெனில்

இல்லை என்று பதில் சொன்னால் போதுமானது தடங்கல்கள் ஏதுமில்லை  ....

இந்த அறைக்குள்

மருத்துவ பயிற்சியாளர் ஒருவர்

நமது மூக்கில் குழலை சற்று ஆழமாக நுழைத்து சளியை வெளியே இழுத்து குழலில் அடைக்கிறார் நமது பெயர் எழுதபட்ட குழல்தானா என்று நாம் கவனிப்பது நன்று  ....

இலவசமாக செய்த

பரிசோதனை முடிவை அறிய அங்கே ஒட்டப்பட்டிருக்கும் அலைபேசி எண்ணை நாம் குறிப்பெடுக்க வேண்டும்  ....

எதிர்மறை (Negative) முடிவு என்றால் நமக்கு தகவல் வராது

நேர்மறை (Possitive) என்று முடிவு வந்தால் நம்மை அழுத்துச் செல்ல நாகர்கோயில் மாநகராட்சிக்கு தகவல் சொல்லப்படும்  ....

அடுத்து பரபரப்பு இல்லாமல் மெதுவாக நமது பெட்டிகள் வைத்த தள்ளு வண்டி மற்றும் பயண கச்சாத்துகள் சரியாக இருக்கிறதா என்று நிதானமாக பார்த்து எடுத்து வெளியே வர வேண்டும்  ...

காவல் அதிகாரிகள் சில முகங்களை கண்டதும் பேசாமல் விட்டு விடுவார்கள் அதேவேளையில் சந்தேக முகங்களை கண்டதும் நீ எங்கே செல்கிறாய் வண்டி எண் என்ன மற்றும் ஓட்டுநர் யார் என்று கேட்பார்கள் ஞாபகமாக நாம் சொல்ல வேண்டும்  ....

இனி நமது வாகனங்களில் நாம் அமர்ந்து நம்முடைய இல்லங்கள் நோக்கி மகிழ்வோடு பயணிக்கலாம்  ....

வல்ல இறைவன்

கொரோனா வைரஸை

மறையச் செய்து

பணிகளையும் பயணங்களையும்

ஆரோக்கியத்தையும் நிம்மதியையும்

சிறப்பாக்கி தந்தருள்வானாக  ....

அழகிய குறிப்பு

மும்பை விமான நிலையத்திலும்

ஏகதேசம் இது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று எண்ணுகிறேன் ஆனால் கோவிட் பரிசோதனைக்கு 600 ரூபாய் பெற்றுக் கொள்ளப்படும்  ....

உகாண்டாவிலிருந்து பயணிப்போர் தற்போது கத்தார் விமான நிலையம் வந்திறங்கி தற்காலிக இருப்பில் இருந்து மற்றொரு விமானத்தில் மும்பை () திபுரம் பயணிக்க வேண்டும்  ....

Short Visit Regiteration E Pass

மேற்சொன்ன இரண்டு சான்றிதழையும்

நம்மை அழைக்க வருகிற வாகன உரிமையாளருக்கு () இணையதள பதிவாளருக்கு நமது பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட் விவரங்களை மூன்று நாட்கள் முன்னதாக அனுப்ப வேண்டும் ....



அப்துல் கபூர்

02.08.2021  ....

No comments: