Sunday, August 1, 2021

இறைசிந்தனை உன்னத படைப்பே !எதற்காக !

 

Noor Saffiya



💞 இறைசிந்தனை

          படைத்ததே!

நம்மை படைத்ததே!

நாம் உணர்வோமே!

நம்மை நாமே யாரென

நம்மை அறியவே!

நாம் செய்யும் செயல்

நாதர் வடிவினிலா?

நாம் இன்ஷானாகவா?

நாம் இஷ்க்_காகவா?

வந்த  நோக்கம் என்ன?

வாழ்வது    எதற்க்காக?

எதற்கென படைத்தாய்?

என்ன செய்ய நினைக்கிறாய்?

சிந்தித்தாயா,  உன்னிலே!

சந்தித்தாயா,உன்னையே!

ஆராய்ந்தாயா,உன்னிலே!

ஆராய்ந்தாயா,உன்னையே!

அகிலமும்   உன்னிலே!

அறிந்திடு    உன்னிலே!

அகமியம்     உன்னிலே!

அமைத்திடுஉன்னிலே!

ப்ரபஞ்சமும்     உன்னிலே!

ப்ரதிபலிக்கும் உன்னிலே!

படைத்தோன்   உன்னிலே!

பகுதறிந்திடு    உன்னிலே!

பாசநபியும் உன்னிலே!

பண்பும்        உன்னிலே!

பார்த்திடு     உன்னிலே!

பணிந்திடும் 🌏 உலகமே!

தேவை யாவிலும்

காத்தானே!

தேவை அறிந்தும்

காத்தானே!

தகுதி அறிந்தும்

காத்தானே!

தன்னில் தானாய்

நிலைத்தானே!

இறையச்சம் உன்னிலே!

இறைரசூல்   உன்னிலே!

மறைபோதனை உன்னிலே!

மாண்புறும் உன்னிலே!

சிற்றின்பம்  உன்னிலே!

சர்தார் செயல் உன்னிலே!

பேரின்பம் உன்னிலே!

படைத்தோன் ஜோதி

உன்னிலே!

ஒருநாள்    செல்வோம்!

ஒருநாள்  சந்திப்போம்!

ஒருநாள் சிந்திப்போம்!

ஒருநாள் சரணாவோம்!

மஹ்ஷர் எனும் நிலை

உண்டு!

மன்னர் கரம் பற்றுவதும்

உண்டு!

அர்ஷின் நிழலும்

உண்டு!

அல்லாரசூலருகிலமர்வதும்

உண்டு!

மறக்காதே மனிதா!

மறக்காதே!

மண்ணறை இருள்

மறக்காதே!

மறையினில் கலந்தால்

ஒளிருமே!

மஹ்மூதரில் நனைந்தால்

ஒளிருமே!

மண்ணறை _யிலோ

முன்கர்நகீர் கேள்வி!

மறுஉலகில் மஹ்ஷரில்

மன்னான் கேள்வி!

பேசிடுமே அங்கமே!

பயந்திடு மனிதா

பயந்திடு!

மனிதனாய் பிறந்ததே!

மன்னவன் செய்த வரம்!

உம்மத்தாய் வாழ்வதே!

உம்மிநபியின் வரம்!

புவியினிலே கேள்வி!

புதுமையாய் முளைக்கும்!

பாசநபிவழியில் இருந்திடு!

பாதுகாப்பவன் பார்த்தீபனே!

பிறந்ததின்  பலன்!

புரிந்திருப்பதே நலன்!

பயனடைவோம் நம்மிலே!

பக்குவமடைவோம்

மனதிலே!

இறைரசூல் ஒன்றே!

இடையில் இருப்பதே!

இன்முக சிரிப்பினிலே!

இன்பமாய் அமர்வதே!

இதுவே, எம் விருப்பம்!

அழகிய   *ஹக்* 

அஹ்மதரின் *ஸலவாத்*

துதித்து   நாவினில்              நனைவோம்..!

               ஆமீன் !

           யா  ரப்பே  !!

         என்  ஹுப்பே  !!

        ஸல்லல்லாஹு

         அலா முஹம்மத்

        ஸல்லல்லாஹு

    அலைஹி வஸல்லம்💞

🖋நூர்ஷஃபியா காதிரியா


No comments: