Thursday, August 12, 2021

இறை சிந்தனை

 உன்னில் ஸுஹுதாய்

உனதாக்கிய ரப்பே!

மன்னானே; காதிலே

மெல்லிய சப்தங்கள்

மனதின் பயமாக்கி

மாநபி வழி தேடிய நாள்!

மகிழ்வு என்பதிலே

மேன்மை உறவுகள்

மாண்போடு உன்னத

மதித்த நாளானதே!

மகிழ்வு பூக்களின்

முத்தங்களின் ஓசை!

மட்டுமே இயற்கை

முஹப்பத்தான நாள்!

முன்னோன் படைப்பு

முழுவதும் சுதந்திர நாள்!

துறவினில் காணா

சித்தமான நாள்!

துறந்த உறவினரை

சிந்தித்து மதித்த நாள்!

சித்திக்க சிந்திக்க

சீராக்க தந்த நாள்!

இரவில் நீங்கா இறை

சந்தம் தெரிந்த நாள்!

இறக்கை விரித்தே வரும்

இறை நேசர் ரசித்த நாள்!

இரவை பகலாய்  இறையே

இயல்பாக்கிய நாள்!

இமை கொட்டாது விழி

இணைக்கும் பாலமான நாள்!

இரவு முடிய  விடிந்தால்

இறை தந்த விடியல் ஓர்

இதய பரிசு 🎁 நாள்!

இதயம் கனிந்து  ஒவ்வொரு

இரவும் இரசூலில் பேசும் நாள்!

இலக்கை அடைந்திட

இஸ்திஃஃபாரான நாள்!

இதுவும் நமக்கு தந்த

படிப்பினை நாள்!

போதும்; யா ரசூலே!

புண்ணியம் எதுவென!

படைப்பின் புனிதமும்

புரிந்தது; எதுவென!

படைப்பாளியின் ஸிர்ரும்

பற்பல அறிந்தது; எதுவென!

பாசநபி சொல் செயல்

ப்ரகாசமும்; எதுவென!

பொருளாதார நிலைகள்

படித்தர நிலையும்

பகிர்ந்தது; எதுவென!

கல்வி நிலையின் தரம்

முறைகளும்; எதுவென!

நீர்,நில வளம் காக்கும்

முறைகளும்; எதுவென!

புரிந்தோம்! அறிந்தோம்!

தெரிந்தோம்! தெளிந்தோம்!

இதயங்கள் கூடி கேட்கிறோம்!

இறைவா! நீயே வரமாய்

வாழ்த்தும் அருள் மழை!

இன்னல் இல்லா இன்ப

இனிய வருட பிறப்பாக்கிடு!

உதய பொழுதினிலே

உன்னில் வணக்கங்கள்

உன்னதமாய் செய்திட

உரிமையாய் கேட்கிறோம்

உரித்து பிரித்து தூராக்கி

உளமார காத்திடு!

கொரோனா எனும் விஷகிருமி

கொடூரமாக்கி மக்கள்

கனவும் நினைவும் மாற்றி!

மனதில் பீதியாக்கும் நிலை!

மாற்றிடும் பொலிவாய்!

வருகின்றாய்! வருகையே!

வெற்றி வாகை சூடிடவே!

வந்தாய் ! வள்ளலாசியுடனே!

வாகாய் வல்லோனருளோடு!

ஹஜ்ஜின் பிறை 🌙 முடிய!

ஹக்கே புது பிறப்பாய்!

முஹர்ரம் எனும் புனிதம்!

முழு மாற்ற உச்சமாய்!

மேலோன் படைப்புகள் அச்சத்தை!

மணமாக்கி கச்சிதமாய்!

முழு நம்பிக்கை நாளாய்!

அர்ஷின் ஆட்சியாளனே!

ஆரம்ப வருடமாக்கி!

அதை உன்  நாளாக்கி!

அனைவரையும் நீயே!

இப் புனித ஆண்டினை!

இறையோடு கலக்க!

இரசூலில் நனைக்க!

இயல்பான வாழ்வளிக்க!

உயிர் பிச்சை அளித்து!

உலகில் ஆள வைத்தே!

உன்னில் மனம் சங்கமித்தே!

உலகை ஆள ஆரோக்ய!

வாழ்வோடு காத்தாயே!

வல்லோனே; எல்லா!

புகழும் துதியுமே!

பேரின்ப பெரியோனே!

இவ் வருட பிறப்பு!

இவ்வுலகை காக்கும்!

இனிய ஆளுமையுடனே!

இவ்வுலகின் தேவைகள்!

இயல்பாய் கிடைத்தே!

இதய மகிழ்வுனிலே!

இறைரசூல் ஹுப்போடு!

இறுதி வரை காப்பாய்!

காப்பாய்; யா ரப்பே!

கருணைபுரிந்திடுவாய்!

கிருபை பார்வையோடு!

கல்பினை பரிசுத்தமாக்கி!

பாவக்கரை நீக்கிடவே!

புதுவருட இறுதியிலே!

பாசமாய் கேட்ட இஸ்திஃஃபாரோடு!

புத்தம் புது 🌹 மணமாக்கி!

பாரில் புதுமையாக்கி!

படைப்பின் புனிதமாக்கி!

பாசநபி நேச ப்ரியமாக்கி!

பார்ப்பவர்; பேசுபவர்கள்!

புகழும் பாக்யமாக்குவாய்!

தன்னை அறியும் தவம்

தரணியின் பாக்யமாய்!

தந்து ரட்சித்துகொண்டே;

தரஜா கூட்டிடுகொண்டே;

தருவாய் ; என்னுள் ஆள்வாய்!

      அஹ்மதரின் ஸலவாத்

          துதித்து நாவினில்

                நனைவோம்!

                     آمــين.آَمِيـٍـِنْ آَمِيـٍـِنْ  

                     يَآ رَبَّ آلٌعَآ لَمِِيِنْ  !🌹

                    يارحمة اللعالمين !🌹

                 🤲🤲🤲🤲🤲

                   💞 يامُحَمَّدٍ 💞

🖋நூர்ஷஃபியா காதிரியா

No comments: