Monday, August 30, 2021
Sunday, August 29, 2021
விழாவில் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஜுல்பி பாடிய அரபிப் பாடல் இது ...
#மெளலானா_ஜுல்ஃபிகார்_அலி_ஜலாலி ....
திருவிதாங்கோடு
ஜமாத்தின் தலைமை இமாம்.
அலீ ( ரலி ) அவர்களின் பெயரை
வைத்திருக்கும் ஜுல்பி எங்க ஊரு
பிள்ளை.
கோட்டாறு
செய்யிதினா இப்ராஹீம் அரபிக் கல்லூரியில் பட்டம்
பெற்றவர்.
மிகச் சிறந்த பேச்சாளர்.
அழகான முறையில் திருமறை ஓதுவதோடு மட்டுமல்லாமல்
நபிப்புகழ் பைத்துகளையும் இனிய குரலில் பாடுவார்.
என்மீது மிகுந்த பிரியம் உள்ள
ஜுல்பி
கூப்பிட்டக் குரலுக்கு ஓடிவரக் கூடியவர்.
நமது முற்றம் விழாவுக்கும் அழைத்தேன்.
வந்தார்
... மனம் குளிர வைத்தார்.
ஜுல்பிகார்
பல்லாண்டு நலத்தோடு வளத்தோடு வாழ வல்ல இறைவன்
அருள் புரிய துஆக்கள் ...
விழாவில் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஜுல்பி பாடிய அரபிப் பாடல் இது ...
Abu Haashima
Saturday, August 28, 2021
இசைமணி யூசுஃப் மாமாவோடு ஒரு நாள்
இசைமணி
யூசுஃப் மாமாவோடு ஒரு நாள்
===================================
நாகூர்
தர்கா ஆஸ்தான சங்கீத வித்வான்
எஸ்.எம்.ஏ.காதர்
மாமாவின் மகனார், என் நண்பர்
நூர்சாதிக் ஃபோன் செய்தார். இசைமணி
யூசுஃப் மாமாவைப் பார்க்கப் போகலாமா என்று.
என் உடல்நிலை கருதி நான் கடந்த
பல மாதங்களாக எங்குமே செல்லவில்லை. ஏனெனில்
எனக்குத் துணைக்கு ஒரு ஆள் வேண்டும்!
அது பெரும்பாலும் மனைவிதான்.
ஆனாலும்
போய்விட வேண்டியதுதான் என்ற ஒரு உந்துதல்
ஏற்பட்டது. யுகபாரதியிடம் சொன்னேன். அவரும் போகலாம் என்றார்.
அவர் வீட்டுக்கு என்னை வந்துவிடச் சொன்னார்.
நான் என் பேரனைக் கூட்டிக்கொண்டு, என் மனைவி சம்மதத்துடன்தான், முதலி ஒரு கேப் எடுத்து யுகபாரதி வீட்டுக்குச் சென்றேன். அங்கே அவனை விட்டுவிட்டு
Friday, August 20, 2021
Wednesday, August 18, 2021
Tuesday, August 17, 2021
Sunday, August 15, 2021
Saturday, August 14, 2021
Friday, August 13, 2021
அண்ணல் பெருமான் என் இல்லம் வந்தால் அவர்களை எப்படி வரவேற்பேன்
அண்ணல்
பெருமான் என் இல்லம் வந்தால்
அவர்களை எப்படி வரவேற்பேன்
அண்ணல்
பெருமான்
என் இல்லம் வந்தால்
அவர்களை
எப்படி வரவேற்பேன்?
அஸ்ஸலாமு
அலைக்கும்
முகமன்
கூறி
ஆரத்தழுவ
விரைவேனா?
Thursday, August 12, 2021
இறை சிந்தனை
உன்னில் ஸுஹுதாய்
உனதாக்கிய
ரப்பே!
மன்னானே;
காதிலே
மெல்லிய
சப்தங்கள்
மனதின்
பயமாக்கி
மாநபி வழி தேடிய நாள்!
மகிழ்வு
என்பதிலே
மேன்மை
உறவுகள்
மாண்போடு
உன்னத
மதித்த
நாளானதே!
மகிழ்வு
பூக்களின்
முத்தங்களின் ஓசை!
Sunday, August 8, 2021
ஏழை வரி (ஜக்காத்) பற்றி பெண் சூஃபி ஞானி செய்யிது ஆசியா உம்மா சொன்னது இதுதான்
ஏழை வரி (ஜக்காத்) பற்றி
பெண் சூஃபி ஞானி செய்யிது
ஆசியா உம்மா சொன்னது இதுதான்
Sufi Saint-Poet Sayyid Asiya Ummal is in the league of
Karaikal Ammaiyar and Andal. An excerpt from her writing on zakat (poor tax).
By இப்போது-
Sayyid Asiya Umma (1868 to 1948) is a woman Sufi Saint and
poet from Kilakarai in Tamil Nadu.
தமிழின்
பக்தி இலக்கிய மரபில் காரைக்கால்
அம்மையார் (6ஆம் நூற்றாண்டு), ஆண்டாள்
(7ஆம் நூற்றாண்டு) வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர் சூஃபி ஞானி செய்யிது
ஆசியா உம்மா. இன்றைய ராமநாதபுரம்
மாவட்டம் கீழக்கரையில் 1868இல் பிறந்தவர். 1948ஆம்
ஆண்டு கீழக்கரையில் இறையடி சேர்ந்தவர். இவருடைய
படைப்புகளில் முக்கியமானது “மெஞ்ஞான தீப ரத்தினம்.”
கவிதையாகவும் உரைநடையாகவும் ஆசியா உம்மா தான்
பெற்ற ஆன்மிக அறிவைப் பகிர்ந்து
கொண்டுள்ளார். உரைநடை வடிவிலான பகுதிக்கு
“தரீகுஸ் ஸாலிஹீன்” என்று பெயர். அதில்
ஜக்காத் (ஏழை வரி) பற்றி
செய்யிது ஆசியா உம்மா சொல்லியிருப்பதை
அப்படியே கீழே பதிவு செய்துள்ளோம்.
ஜக்காத்தை இறைவனுக்குச் சரணாகதி அடைவதுடன் ஒப்பிடுகிற
அந்தக் கடைசி வரிகள் இந்த
சூஃபி கவிஞரது பரந்துபட்ட மெய்ஞான
அறிவுக்கு ஓர் அடையாளம்.
ஒசக்கம்மா
ஒசக்கம்மா
பக்தி இலக்கிய மரபில் காரைக்கால்
அம்மையார், ஆண்டாள் வரிசையில் தமிழுக்குக்
கிடைத்த பெரும் வரம் செய்யிது
ஆசியா உம்மா.
By பீர் முகமது
அவங்க எப்பவுமே “ஹல்வத்”தில இருப்பாங்களாம்
என்று சொன்னார் ஷர்மிளா. “ஹல்வத்” என்றால் என்ன
என்று கேட்டேன். “தனிமையில் இருப்பதை, இறைநினைவோடு இருப்பதை அப்படிச் சொல்வோம்” என்றார். அவங்க ஓதுவதும் தொழுவதுமாக
இருப்பாங்க என்று சொன்னார் அகமது
மரியம். கடல் மணல்ல உச்சிவெயில்
சூட்டில தலய வச்சு ஸுஜூதுல
(மண்டியிட்டு நிலத்தில் முகம் பதித்து இறைவனைத்
தொழும் நிலை) நிறையநேரம் இருப்பாங்களாம்.
இத சேர்மன் யூசுஃப் சாஹிப்பே
பார்த்திருக்காங்க என்றார் இ.சு.மு.அ.பஷீர்
அகமது. சதாசர்வ காலமும் இறைவனை
நினைத்து உருகி உருகிப் பாடியிருக்கிறார்
பஷீர் அகமதுவின் பாட்டியும் இறைநேசச் செல்வியுமான செய்யிது ஆசியா உம்மா. ராமநாதபுரம்
மாவட்டம் கீழக்கரையில் 1865ஆம் ஆண்டில் பிறந்து
1948இல் மறைந்திருக்கிறார் சூஃபி ஞானியான இவர்.
இவர் எழுதியுள்ள செய்யுள்களும் உரைநடையும் “மெஞ்ஞான தீப ரத்தினம்”
என்ற பெயரில் நூல் வடிவில்
வெளியாகியிருக்கிறது. செய்யிது ஆசியா உம்மாவின் மகன்
இ.சு.மு.அப்துல் காதிர் சாஹிப்
மரைக்காயரின் மனைவி இ.சு.மு.ரஹ்மத்பீவி உம்மா
இந்த நூலைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்.
வள்ளல் சீதக்காதியின் வழிவந்த ஹபீப் அரசரின்
பரம்பரையைச் சேர்ந்தவர் செய்யிது ஆசியா உம்மா. இந்தத்
தகவலை இஸ்லாமியக் கலைக் களஞ்சியத்தின் ஆசிரியரான
எம்.ஆர்.எம்.அப்துர்ரஹீம்
உறுதிப்படுத்தியுள்ளார். வீட்டின் மேல் மாடியில் பெரும்பாலும்
தவம் செய்வதும் பாடல்களை எழுதுவதுமாக இருந்ததால் இவருக்கு “மேல்வீட்டு உம்மா” என்றும் “ஒசக்கம்மா”
என்றும் ஊரில் பெயர் இருந்தது.
Saturday, August 7, 2021
Monday, August 2, 2021
வெளிநாட்டு பயணிகள்
வெளிநாட்டு
பயணிகள்
திருவனந்தபுரம்
வந்திறங்கியதும்
கவனிக்க
வேண்டிய விஷயங்கள் ...
இறைவனின்
கிருபையால்
ஆகாயத்தில்
பறந்த விமானம்
மெதுவாக
தரை இறங்குகிறது ....
நிறைய கனவுகளை சுமந்து
குடும்பங்களை
நேரில் கண்டு
கைக்குலுக்க
துடிக்கும் பயணிகளுக்கு
கொரோனா
தடை விதித்துள்ளது ....
விமான இருக்கைக்கு மேலுள்ள சிற்றறைகளில் வைத்த தோள்ப்பைகள் பயண கச்சாத்துகள் அடங்கிய கைப்பைகள் இவைகளை எடுத்துக் கொண்டு வரிசையாக திருவனந்தபுரம் விமான நிலையத்துக்குள் நுழைகிறோம் ....
விளையாட்டில் தான் மதம், இனம், மொழி, நிறம் எதுவுமில்லா பூரணமான மனிதம் தழைக்கிறது.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ்.
உயரம் தாண்டும் போட்டியின் இறுதிப்போட்டி..
இத்தாலியின்
தாம்பெரி மற்றும் கத்தார் நாட்டின்
பார்ஸிம் இருவருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி
பதக்கத்துக்கான கடும் போட்டி.. இருவருமே
2.37 மீட்டர்கள் தாண்டுகிறார்கள்.. இருவருக்கும் மீண்டும் 3 வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டன.. அதிலும் அந்த 2.37 மீட்டருக்கு
மேல் இருவரும் தாவ முடியவில்லை.. இறுதியாக
இருவருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு
கொடுக்கப்படுகிறது.. ஆனால் அதில் கால்
அடிபட்டு இருப்பதால் என்னால் கலந்து கொள்ள
இயலாது என்று அறிவிக்கிறார் இத்தாலியின்
தாம்பெரி.. இவர் வர இயலாத
சூழலில், நடுவர்களால் கத்தார் நாட்டின் பார்ஸிம்க்கு
நேரடியாக தங்கம் அறிவிக்க முடியும்..
ஆனால்,
அவர் நடுவரிடம், இப்பொழுது இறுதி வாய்ப்பை நானும்
வேண்டாம் என்று சொன்னால் தங்கப்
பதக்கத்தை இருவருக்கும் பகிர்ந்து அளிக்க முடியுமா என்று
கேட்கிறார்.. அளிக்க முடியும், அதற்கு
வாய்ப்பிருக்கிறது என்று நடுவர் சொன்ன
அடுத்த நொடி எதையும் யோசிக்காமல்
இறுதி வாய்ப்பு எனக்கு வேண்டாம், இருவருக்கும்
தங்கத்தை பகிர்ந்து அளியுங்கள் என்று அறிவிக்கிறார் கத்தார்
நாட்டின் பார்ஸிம்..
அவர் அப்படி அறிவித்ததும் இத்தாலி
நாட்டின் தாம்பெரியின் மகிழ்ச்சியையும், அவர் குதித்து பார்ஸிம்மை
கட்டி அரவணைப்பதையும் பாருங்கள்..
விளையாட்டில்
தான் மதம், இனம், மொழி,
நிறம் எதுவுமில்லா பூரணமான மனிதம் தழைக்கிறது..
அதெற்கெல்லாம் உதாரணமாக இன்று திகழ்ந்த கத்தார்
நாட்டின் பார்ஸிம் உலக வரலாற்றில் என்றும்
நிலைத்திருப்பார்..
#Olympics
நன்றி: Kumaran Karuppiah
Sunday, August 1, 2021
இறைசிந்தனை உன்னத படைப்பே !எதற்காக !
💞 இறைசிந்தனை
படைத்ததே!
நம்மை படைத்ததே!
நாம் உணர்வோமே!
நம்மை நாமே யாரென
நம்மை அறியவே!
நாம் செய்யும் செயல்
நாதர் வடிவினிலா?
நாம் இன்ஷானாகவா?
நாம் இஷ்க்_காகவா?
வந்த நோக்கம் என்ன?