Friday, September 27, 2019

ஹம்னா_மர்யம் I F S....

Colachel Azheem


சவூதி அரேபியா ஜித்தா இந்திய தூதரகத்தில் கன்சுலேட் அதிகாரியாக பதவியேற்க உள்ளார் ஹம்னா மர்யம்..
கோழிக்கோடு சேர்ந்த பிரபலமான குழந்தை மருத்துவர்களான டாக்டர் டி.பி.அஷ்ரப் மற்றும் டாக்டர்.ஜவ்ஹறா மருத்துவ தம்பதியர் மகள் ஹம்னா.
பள்ளிப்படிப்பு முழுவதும் கோழிக்கோட்டிலும், கல்லூரி படிப்பு டெல்லி பல்கலை கழகத்திலும் படித்த ஹம்னா கோழிக்கோடு ஃபரூக் கல்லூரியில் ஆங்கிலத்துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்..

இஞ்சினியரிங் படிப்பிலோ அல்லது பெற்றோரைப் போல மருத்துவர் ஆவதிலோ விருப்பம் இல்லாமல் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவது சிறு வயது முதலே ஹம்னாவின் கனவாக இருந்தது..
ஃபரூக் கல்லூரியில் பணியாற்றி வரும்போதே சிவில் சர்வீஸ் தேர்வெழுதிய ஹம்னா 2017 ல் 28 வது ரேங்குடன் தேர்ச்சி பெற்றார்..


இந்திய முஸ்லிம் சமூகத்தின் இரண்டாவது பெண் ஐஎஃப்எஸ் அதிகாரி எனும் பெருமையுடன் தற்போது பாரிஸ் இந்திய தூதரகத்தில் பணியாற்றி வரும் ஹம்னா பதவி உயர்வுடன் இட மாறுதலில் ஜித்தா இந்திய தூதரக கன்சுலேட் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்..

இவரது கணவர் முஸம்மில் கான் தெலுங்கானா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பதவி வகித்து வருகிறார்..

Colachel Azheem

No comments: