Sunday, September 29, 2019

உள்ளங்கையில்_உலகம் / .Abu Haashima


அண்ணல் எம்பெருமானார்
#ரஸூலே_கரீம்_ஸல்லல்லாஹு #அலைஹி_வஸல்லம் அவர்களின்
#மிஃராஜ் பயணத்தின்போது
நடந்த ஒரு சம்பவம் ஆச்சர்யமானது.

ஒட்டு மொத்த உலகத்தையும்
அண்ணல் நபிகளாரின்
உள்ளங்கை அளவுக்கு ஆக்கி
அதில் நடைபெறுகின்ற அனைத்தையும் அவர்களுக்குக் காட்டித் தந்தான் ஆற்றல்மிக்க
#அல்லாஹ் !
உலகமே அண்ணலாரின்
உள்ளங்கையில் வசப்பட்டது.


அப்படியும் ஆகுமா என்று
ஆச்சர்யப்பட்டவர்கள் உண்டு.
அது ...
#மெஞ்ஞான_அதிசயம் என்பார்கள் அறிஞர்கள்.

இன்று
எல்லோருடைய உள்ளங்கையிலும்
உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது
என்பது
#விஞ்ஞான_அதிசயம் .

.Abu Haashima

No comments: