Monday, September 23, 2019

தமிழர் நாகரீகத்தை வெளிக் கொண்டு வந்த கீழடி அகழ்வாராய்ச்சி



----------------------------------------------

 கீழடி ஆய்வு

கீழடி ஆய்வு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழர் வரலாற்றின் உண்மை வெளியே வந்துவிடக்கூடாது என்று அரசியல் சக்திகள் குறிப்பாக பாஜக பல தடைகளைச் செய்தது. குறிப்பாக, கீழடியை கண்டறிந்த ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை ஆய்வில் இருந்து அகற்ற பல உள்ளடி வேலைகளைப் பார்த்து அகற்றினர். ஆனால் நீதிமன்றத்தை நாடி, தன் சொந்த செலவில் வழக்காடி அமர்நாத்தை மீண்டும் ஆய்வுப் பணியில் ஈடுபட வைக்கவேண்டும் என்ற தீர்ப்பை போராடி வாங்கியவர் கனிமொழி மதி என்னும் வழக்கறிஞர். உலகின் ஒவ்வொரு எழுச்சிப் போராட்டங்களிலும் ஆய்வுகளிலும் பெண்களின் பெயரும் உழைப்பும் இருட்டடிப்பு செய்யப்படுவது வழக்கம்தான். அனைத்து அரசியல்வாதிகளும் தோழர் சு. வெங்கடேசனை பாராட்டிய வேளையில் கனிமொழி மதியையையும் மனதாரப் பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் ஏனோ மறந்துவிட்டார்கள். கீழடி வரலாறு இருக்கும் வரை உங்கள் சட்டப்போராட்டமும் நினைவில் வரலாற்றில் இருக்கும் வழக்கறிஞர் கனிமொழி மதி
#கீழடி
#கனிமொழிமதி-
அக்கா நாச்சியாள் சுகந்தி  பதிவு..

நன்றி Thiyagarajan Gunalan


No comments: