Wednesday, March 6, 2019

தகுதியும் தேர்வும்


படிப்பெல்லாம் அறிவாகாது
அறிவே....புத்தியாகாது
புத்தியால் விஞ்ஞானி ஆகலாம்
விஞ்ஞானி ஞானியாக முடியாது.
கலங்கிய சிந்தையின் ரசாயன
மாற்றத்தில் தான் ஞான
பித்தர்கள் தங்களை மீண்டும்
புதுப்பித்துக் கொள்கிறார்கள்.



IQ என்ற இண்டலிஜென்ட்
பல வகை என்று சொன்னான்
கார்ட்னர் என்ற சைக்காலஜிஸ்ட்.
நடனம்,நாட்டியம்,நடிப்பு,இசை
ஓவியம்,சிற்பம்,கதை,கவிதை,
எழுத்து,பேச்சு என விரியும் ஆய
கலைகளின் வித்தகர் எல்லாம்
பள்ளி கல்லூரி செல்லாத புத்தியுள்ள அறிவு ஜீவிகள் தான்.

கணிதமும்,விஞ்ஞானமும் அறிவு
என்றால் தன்னை பற்றிய அறிவு
பிற மக்கள் பற்றிய அறிவு,இயற்கை
பற்றிய அறிவு,தத்துவ அறிவு,மெஞ்
ஞான அறிவு எல்லாம் ஐகியூ வின்
குழந்தைகள் தான் என்பது கார்ட்னரின் வாதமாகும்.

புத்தக படிப்பு என்பது இப்போது
பிளஸ் டூ தொட்டு கல்லூரி வரை
தொடர்வது.மேல் நிலைக்கு நீட்
அல்லது ஜீ தேவை.வில்லேஜ் ஆபீசர்
தொடங்கி மாவட்ட மாநில அரசு
அதிகாரிகள் வரை தகுதி தேர்வு
மிக அவசிய தேவை.பொது துறை
தனியார் துறை அனைத்தும் கல்வி
தகுதி ஒன்றை அடிப்படையாக
வைத்து தான் பணி நியமனம்
செய்கின்றன.இதனால் தான்
பள்ளிகளும் கல்லூரிகளும்
மாணவர்களால் நிரம்பி வழிகின்றன.

அப்படி என்றால் படிக்காத மாணவர்கள், இளைஞர்களின்
நிலை என்ன!நமது ஊரில்
சொல்வார்கள்...படிக்காதவன்
மாடு மேய்க்கத் தான் லாயக்கு
என்று....

புத்தக படிப்பு, பள்ளி,கல்லூரி
படிப்பு இல்லாத இளைய தலை
முறை,(18-35 yrs)சற்று முயன்றால் நமது நாட்டில் மிகவும் சிறப்பான,
உன்னதமான,உயர்வான
கவுரவமான அரசியல் பதவிகளை மிகவும் எளிதாக பெற முடியும்.
இந்திய அரசியல் சட்டப்படி
நமது நாட்டில் எம்எல்ஏ,எம்பி,
அமைச்சர்,முதல்வர்,பிரதமர்,
ஜனாதிபதி பதவிகளை பெற
கல்வித் தகுதி எதுவும் அவசியம்
இல்லை.
25 வயது நிரம்பி இருந்தால்,
இந்திய குடிமகன் என்ற அத்தாட்சி
யும் இருந்தால் எம்எல்ஏ,எம்பி
தேர்தலில் போட்டியிடலாம்.
30 வயதானால் ராஜய சபா
உறுப்பினர் ஆகலாம்.35 வயது
நிரம்பியவர்கள் நாட்டின்
ஜனாதிபதி ஆகலாம்.நம்மை
ஆள்பவர்களுக்கு மட்டும் எந்த
கல்வித் தகுதியும் அவசியம் இல்லை


Vavar F Habibullah

No comments: