Saturday, February 9, 2019

காலத்தைப் பற்றி


காலத்தைப் பற்றி ஐன்ஸ்டீன்1906-தான் ஆய்வை சமர்பித்தார். ஆனால் அதற்கு முன்னமே சூஃபி ஞானிகளான இறைநேசர்களிடம் சாதாரணமாகவே இருந்து .

எங்கும் விரிந்த அண்ட வெளியில் சதாசர்வகாலமும் வெற்றிடத்தில் அணுவுக்குள் அணுவின் நுண் துகள் தோன்றி மறைந்தபடி உள்ளன. ஒன்றுமே இல்லாத சூனியத்திலிருந்து திடீரென்று ஒரு துகளும், உடன் எதிர்துகளும் ஜோடியாக ஒரே இடத்தில் தோன்றி, ஒன்றுன் ஒன்று கலந்தும் பின் ஒன்றை ஒன்று வெட்டிக் கொண்டும் ஒன்றுமே இல்லாமல் ஆகிறது. இப்படி சம நிலையை காப்பாற்றிய படி உள்ளன. இந்த சமநிலையில் 'புழுத்துளை' என்று ஒருவிதமான குறுக்குவழி  அதாவது பூமியில் ஓர் இடத்தை குறுக்கு வழியில் அடைவது போல காலத்திலும் ஒரு குறுக்கு வழி உண்டு. காலத்தின் குறுக்கு வழிதான்  இந்த "புழுத்துளை" யாகும்.


இந்த புழுத்துளை வழியாக இன்னொரு காலத்திற்குள் பிரவேசிக்கலாம். அப்படி பிரவேசிக்கும் போது முன்பொரு காலத்தில் வாழ்ந்த மக்களோடு நாம் வாழலாம்.
مِّنَ اللّٰهِ ذِى الْمَعَارِجِ‏
உயர்ப்பாதைகளையுடைய அல்லாஹ்வினால் (அது சம்பவிக்கும்).

تَعْرُجُ الْمَلٰٓٮِٕكَةُ وَ الرُّوْحُ اِلَيْهِ فِىْ يَوْمٍ كَانَ مِقْدَارُهٗ خَمْسِيْنَ اَلْفَ سَنَةٍ‌‏
அந்நாளில் மலக்குகளும், ஜிப்ரயீலும் அவனிடம் போய்ச் சேருவார்கள். (அந்நாள்) ஐம்பதினாயிரம் வருடங்களுக்குச் சமமாக இருக்கும்.
(அல்குர்ஆன் : 70:3,4)

எஐமான் ஹழ்ரத் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம்(ரலி)அவர்கள் துருக்கி  மலையில் நாற்பது நாள் தவநிலையிருந்தார்கள். கண் திறந்த நாயகம் தம் சீடர்களை அழைத்து கூறினார்கள் .

"என் தகப்பனாரின் உயிர் பிரிந்துகொண்டிருக்கிறது. அவர்களுடைய இறுதிக் கணங்களில் நான் அருகில் இருக்க வேண்டும் . எனவே என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள்" என்று கூறிவிட்டு விடுவிடுவென்று மலையை விட்டு இறங்கி தன் பெற்றோர் இருந்த ஊரான மாணிக்கப்பூரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

தூரத்தில் இருக்கிறவர்களின் உணர்வுகளை நம்மால் உணர முடியும் என்று குர்ஆன் கூறுகிறது பாருங்கள்

اِذْهَبُوْا بِقَمِيْصِىْ هٰذَا فَاَلْقُوْهُ عَلٰى وَجْهِ اَبِىْ يَاْتِ بَصِيْرًا‌ وَاْتُوْنِىْ بِاَهْلِكُمْ اَجْمَعِيْنَ‏
"நீங்கள் என்னுடைய இந்தச் சட்டையைக் கொண்டு போய் என் தந்தை முகத்தில் போடுங்கள். (அதனால் உடனே) அவர் (இழந்த) பார்வையை அடைந்து விடுவார். பின்னர் நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்" என்று கூறி அனுப்பினார்.

وَلَمَّا فَصَلَتِ الْعِيْرُ قَالَ اَبُوْهُمْ اِنِّىْ لَاَجِدُ رِيْحَ يُوْسُفَ‌ لَوْلَاۤ اَنْ تُفَـنِّدُوْنِ‏
அவர்களின் ஒட்டக வாகனங்கள் (எகிப்திலிருந்து) பிரியவே, அவர்களின் தந்தை ("இதோ) யூஸுஃபுடைய வாடையை நிச்சயமாக நான் நுகர்கிறேன்; (இதனால்) என்னை நீங்கள் பைத்தியக் காரனென்று எண்ணாமலிருக்க வேண்டுமே!" என்றார்.
(அல்குர்ஆன் : 12:93,94)

நாகூர் எஜமான் நாயகம் அவர்கள் இருந்து துருக்கி நாடு. அவர்களுடைய தந்தையாருடைய உயிர் பிரிந்துக் கொண்டிருந்த ஊரோ மாணித்கப்பூர். இந்தியாவில் வடக்கு மாநிலத்தில் இருந்த அயோத்திக்கு அருகில் அமைந்த ஊர்! துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் லில் இருந்து இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு வருவதென்றாலே 4546 கிலோமீட்டர் தூரமிருந்தது!

இப்படி ஒரே இரவில் கால்நடையாய் 5000 கிலோமீட்டர் கடந்தார்கள்404 சீடர்களுடன் நாகூர் நாயகம் அவர்கள் .

பொழுது புலர்வதற்கு முன் தஹஜ்ஜுத் தொழுகை நேரத்தில் மாணிக்கப்பூருக்கு வந்து சேர்ந்தார்கள். நாயகம் அவர்கள் முன்னறிவித்தபடியே அவர்களுடைய தந்தையார் ஹழ்ரத் ஹஸன் குத்தூஸ்(ரலி) அவர்கள் மரணப்படுக்கையில் இருந்தார்கள். எஜமான் நாயகம் அருகில் இருக்க  காலைத் தொழுகைக்கான நேரம் வந்தபோது தந்தையார் இந்த உலகை விட்டுப் புரிந்தார்கள்.

இதுபோன்ற சம்பவங்கள் பிரபஞ்சத்தின் அடித்தளமான காரண- காரிய விதியையே மீறுவதுபோல இருந்தாலும் ஐன்ஸ்டீனுடைய சார்பியல் கோட்பாடு இதற்கு சாதகமாகத்தான் பேசுகிறது.

அல் குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்

قَالَ يٰۤاَيُّهَا الْمَلَؤُا اَيُّكُمْ يَاْتِيْنِىْ بِعَرْشِهَا قَبْلَ اَنْ يَّاْتُوْنِىْ مُسْلِمِيْنَ‏
(ஸுலைமான் தன் மந்திரிகளை நோக்கி) "சன்றோர்களே! அவர்கள் கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவே அவளுடைய சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?" என்று கேட்டார்.

قَالَ عِفْرِيْتٌ مِّنَ الْجِنِّ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ تَقُوْمَ مِنْ مَّقَامِكَ‌ وَاِنِّىْ عَلَيْهِ لَـقَوِىٌّ اَمِيْنٌ‏
அதற்கு ஜின்களிலுள்ள "இஃப்ரீத்" (என்னும் ஒரு வீரன்) "நீங்கள் இந்தச் சபையை முடித்துக்கொண்டு எழுந்திருப்பதற்கு முன்னதாகவே அதனை நான் கொண்டு வந்துவிடுவேன். நிச்சயமாக நான் இவ்வாறு செய்ய மிக்க சக்தியும் நம்பிக்கையும் உடையவன்" என்று கூறினான்.

قَالَ الَّذِىْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْـكِتٰبِ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ يَّرْتَدَّ اِلَيْكَ طَرْفُكَ‌ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّىْ‌ لِيَبْلُوَنِىْٓ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ‌ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖ‌ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّىْ غَنِىٌّ كَرِيْمٌ‏
(எனினும், அவர்களில்) வேத ஞானம் பெற்ற ஒருவர் (இருந்தார். அவர் ஸுலைமான் நபியை நோக்கி) "நீங்கள் கண்மூடித் திறப்பதற்குள் அதனை நான் உங்களிடம் கொண்டு வந்துவிடுவேன்" என்று கூறினார். (அவ்வாறே கொண்டு வந்து சேர்த்தார்.) அது தன் முன் (கொண்டு வந்து வைக்கப்பட்டு) இருப்பதை (ஸுலைமான்) கண்டதும், "இது நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா இல்லையா என்று என்னைச் சோதிப்பதற்காக என் இறைவன் எனக்குப் புரிந்த பேரருளாகும். எவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கின்றானோ (அதனால் என் இறைவனுக்கு யாதொரு நஷ்டமுமில்லை.) நிச்சயமாக என் இறைவன் (எவருடைய) தேவையற்றவனும், மிக்க கண்ணியமானவனாகவும் இருக்கிறான்" என்று கூறி (தன் வேலைக்காரர்களை நோக்கி,)
(அல்குர்ஆன் : 27: 38,39,40)

         மௌலவி கலீfபா
  அஹமது மீரான் சாஹிப்
        உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
          மேலப்பாளையம்
            திருநெல்வேலி

No comments: