Wednesday, February 27, 2019

நைஜீரியாவின் பிரதமர்தான் என் மிகப்பெரிய எதிரி

நான் ஒரு தமிழ்க் கவிஞன், என் எழுத்துக்கள் இணையம் முழுவதும் ஆங்காங்கே இறைந்து கிடக்கின்றன என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் நண்பர்கள் அறிமுகம் ஆகும்போது இணையத்தில் உங்கள் கவிதைகளை எங்கே வாசிக்கலாம் என்று கேட்டால், என் பெயரை கூகிளில் இட்டுத் தேடுங்கள் என்று என்னால் சொல்ல முடியாது. காரணம் நைஜீரியாவின் பிரதமர் புகாரி.

வெகுகாலம் தொடர்பு விட்டுப்போன பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், உறவுகள் என்று எவரும் புகாரி என்று என் பெயரை இட்டுக் கூகுளில் தேடி என்னைக் கண்டுபிடிக்கவே முடியாது. என்றால் இந்த நைஜீரியா புகாரி எனக்கு எத்தனைப் பெரிய எதிரி?

Sunday, February 24, 2019

அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தது ஏன்? -

அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு. நேரலை.
BBC News தமிழ்https://www.facebook.com/BBCnewsTamil/ 

"இன்று நான் பேரானந்தம் அடைந்தேன்"-.கவிஞர் புகாரி

கவிஞர் புகாரி
2 hrs ·
ஒரு படமும் ஒரு காணொளியும் இன்று நிகழ்ந்து முடிந்த விருது விழாவைச் சொல்லும். அதில் நான் பெற்ற விருதினைச் சொல்லும். பின் விரிவாக இதுபற்றி நான் எழுதுவேன். மேலும் புகைப்படங்கள் இடுவேன்.

இன்று நான் பேரானந்தம் அடைந்தேன்.

விருது கிடைத்தது எனக்கல்ல. என் கவிதைகளுக்குத்தான் என்று சொல்வேன். ஏனெனில் நான் கவிதைகள் எழுதுவதில்லை. என் கவிதைகள்தான் என்னை இழுத்து வைத்துத் தன்னை எழுதிக்கொள்கின்றன.

விருது எனக்கல்ல, என் கவிதைகளை ஒவ்வொன்றாய் அடுக்கிவைத்து அதன்மேல் என்னை ஏற்றிவிட்டார்கள், தங்கப்பதக்கம் தந்து பாராட்டினார்கள்.

வெகு சிலரையே என்னால் விருது விழாவிற்கு அழைக்க முடிந்தது. காரணம் இடப்பற்றாக் குறைதான்.

ஆகவே தமிழ்நாட்டு உறவுகளை மட்டுமே அழைத்திருந்தேன். அதிலும் கடுமையாகத் தேர்வு செய்து அழைக்கவேண்டியதாகிவிட்டது. அழைக்கப்படாத அன்பு உறவுகள் அனைவரும் அன்புடன் என்னை மனிக்க வேண்டும்.

அழைத்தவர்களுள் ஓரிருவரைத் தவிர (தவிர்க்கமுடியாக் காரணத்தால்) மற்ற அனைவரும் வந்து அன்பைப் பொழிந்தனர். என் இதயத்தை பலமடங்காய்ப் பெருக்கச் செய்தனர்.

Saturday, February 23, 2019

Master.Dr.Nagore Rumi - Tips for a happy and successful marriage life

Mr. A S Mohamed Rafee [Nagore Rumi] & Mrs. Naziha Rafee are beautiful souls who share a divine bonding with each other. Dr. Nagore Rumi shared with us, his pleasant experiences of his wife serving him a cup of tea alarmed by her intuition even at mid-nights. He explains in his book that when the vibrations of the husband and the wife are in sync, we don't need a verbal communication. He explained that his wife has served him tea going by her intuition not just once but thousands of times.

On one occasion, Master.Dr.Rumi told proudly that his wife is the secret of his success. On 28th of August, 2016 (Sun), "The Happy Zen" team was delighted to present them the "Best Couple Award" for their unconditional love towards each other.




Below are some tips given by this lovely couple for those who wish to have a happy and successful marriage life.

Friday, February 22, 2019

ஆத்மாவைத் தேடி


dr.Vavar F Habibullah
ஆத்மா எங்கே இருக்கிறது!
மரணம் நிகழ்ந்த பின் உடல்
அழிந்து விடும். மனம் என்ற
கருவி செயல்பட ஒத்துழைப்பு
தரும் மூளையும் மக்கி விடும்.

உடல், மனம், ஆத்மா
என்ற மூன்றும் கலந்தவன்
தான் மனிதன் என்றால்...
உடல் தெரிகிறது
மனம் புரிகிறது
ஆனால் ஆன்மா என்பது
மனித உடலில் கலந்த
மாயையா....இல்லை
மனித உடலை தாண்டி
மனிதனோடு உலவி
அவனை வேவு பார்க்கும்
வேற்று கிரக சாட்சியா!

"The Saint Of Nagore is the Divine Light of South East Asia"

"The Saint Of Nagore is the Divine Light of South East Asia"
( நாகூரின் ஞானக்கோமான் தென்கிழக்கு ஆசியாவின் தெய்வீக ஜோதி )

நாகூரில் வாழ்ந்த நம் இறைநேசர் ஆன்மீகம் போதித்ததோடு மட்டும் நின்று விடவில்லை:-

ஆன்மீகம் தவிர்த்து அவர்கள் தீர்த்து வைத்த சமூகப் பிரச்சினைகள் ஏராளம்.

அந்நிய நாட்டு சக்திகள் சோழமண்டல கடற்கரையோரங்களிலும், தென்மாவட்ட கடற்கரையோரங்களிலும்,
கேரளக் கடற்கரையோரங்களிலும் அத்துமீறி ஆக்கிரமிப்பு நடத்தியபோதெல்லாம்,

அரணாக இருந்து
தென்னிந்திய மக்களின் பாதுகாப்புக்கு வழிவகுத்தவர்,
நாகூர் இறைநேசர்
என்பது பெரும்பாலோருக்கு போய் எட்டாதச் செய்தி.

மதநல்லிணக்கத்திற்கு அவர்கள் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்கள் எனலாம்.

மக்களின் நல்வாழ்வுக்காக தங்களின் வாழ்வை அர்ப்பணித்தார்கள்.

இன்னும்
சொல்லப்போனால் போர்த்துகீசியர்கள்
தமிழக மண்ணில் அழுத்தமாக காலூன்ற முடியாமல் போனதற்கு, அவர்கள் காட்டிய கடும் எதிர்ப்பு
ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

Monday, February 18, 2019

இது தான் இஸ்லாம்!

 இது தான் இஸ்லாம்!.

இஸ்லாம் தீவிரவாத மார்க்கமும் இல்லை!,     முஸ்லிம்கள் பயங்கரவாதிகளும் இல்லை!. 📍

உன்மையில், காஷ்மீர் குண்டு வெடிப்புக்கும் அழகிய இஸ்லாத்தை பின்பற்றும் உன்மையான முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காதூ!!.


இடம் : மஸ்ஜிதுல் ஹரம், மக்கா, சவுதி அரேபியா!.

Sunday, February 17, 2019

Most valuable lesson for parents and children


மீன் விற்கும் ஒரு பெண்ணும், பூ விற்கும் ஒரு பெண்ணும், நல்ல தோழிகள். ஒருநாள் இரவு, பூ விற்கும் பெண்ணின் வீட்டில், மீன் விற்கும் பெண் தங்க நேர்ந்தது. 'இரவு நன்கு தூங்கினாயா?' எனப் பூ விற்கும் பெண், மறுநாள் காலையில் கேட்க, 'அதை ஏன் கேக்குற போ... நேத்துப் பூரா எனக்குத் தூக்கமே வரலை...' என, சொன்னாள் மீனம்மா.

'அப்படியா... ஏண்டி?'

'உன் வீட்டில இருந்த பூவோட வாசம், என்னை என்னென்னமோ செய்துடுச்சு. நெடி தாங்கலை; அதனால, தூக்கம் வரலை...' என்றாளாம் மீனம்மா.

நிறமெனத் தெரிவதெல்லாம்



நிறமெனத் தெரிவதெல்லாம்

 நாள்தோறும் முகநூலில் வாட்ஸப்பில் இதர சமூக ஊடகங்களில் பல்வேறு காணொளிப் பதிவுகள் வந்து சேர்கின்றன. அவற்றில் பத்து விழுக்காடாவது பார்க்கிறேனா என்பதே ஐயம்தான். சொல்லிடுகைகளின் நிலையும் அஃதே.

 பெருவணிக அலுவலங்களில் பிரதி மாதமும் ‘விழுத்தொண்டு ஆற்றினார்’ ஒருவரைத் தேர்ந்து ”இம்மாதத்தின் சிறந்த பணியாளர்” எனப் பாராட்டுகிறார்கள் அல்லவா? அதுபோல், சென்ற மாதம் நான் கண்ட சிறந்த காணொளி இதுவே என்று ஒன்றனைத் தேர்ந்து முன் வைக்கலாம். முதல் மூன்று இடங்கள் பெறும் காணொளிகள் என்றும் தேர்ந்தெடுக்கலாம். தேவை எனில், ஆறுதல் பரிசு பெறும் காணொளிகள் என்று இன்னும் மூன்றைச் சேர்த்துக் கொள்ளவும். மாதத்துக்கு ஐநூறு அறுநூறு காணொளிகள் பார்க்கும் திறன் படைத்தவரா நீங்கள்? சிலிகான் உலகின் சித்த புருஷரே! என்னை மன்னியும். தங்கள் துய்யச் சேவடிகள் படத்தகும் இடம் இதுவன்று.

 13-ஜனவரி-2019-ல் நான் கண்டு முகநூலில் பகிர்ந்த காணொளி ஒன்று இன்னமும் நினைக்குந் தோறும் நெஞ்சை நெகிழச் செய்கிறது. தனது அறுபத்தாறாவது பிறந்த நாளில் தன் மகளிடமிருந்து தந்தை ஒருவர் கிஃப்ட் பெறுகிறார். எங்கும் இயல்பாக நிகழக் கூடியதுதான். ஆனால், இங்கே அந்தத் தந்தையும் வித்தியாசமானவர். அவர் பெற்ற அன்பளிப்பும் வித்தியாசமானது.

Dr.Panithuli shankar BBA,MBA,Ph'D - Dubai - டாக்டர் பனித்துளி சங்கர்

Dr.Panithuli shankar BBA,MBA,Ph'D - Dubai - டாக்டர் பனித்துளி சங்கர் பட்டமளிப்பு விழா - துபாய்
Dubai, MBA, Panithulisankar BBA, Ph'D.Doctor Panithuli Shankar, கவிஞர் பனித்துளிசங்கர், டாக்டர் பனித்துளி சங்கர்
நேசிக்க தெரிந்த மனம் ஒருநாள் மறக்கவும் செய்யும் ஆனால் சுவாசிக்க மறக்குமோ ? நான் உங்களின் நட்பை நேசிக்கவில்லை சுவாசிக்கிறேன் .

 நிழலாகிப்போன நிஜங்கள் இதயத்தில் சுவடுகளாக... அதை ஸ்பரிசிக்கும்போது-ஏனோ சொல்ல முடியாத வலியுடன் ஒரு சுகம்!

என்றும் அன்புடன்
பனித்துளி சங்கர் ...

shankarp071@gmail.com
http://shankarinopenbookcom.blogspot.com/

Thursday, February 14, 2019

சூபி தத்துவங்கள்

சூபி தத்துவங்கள்
-----------

வாழ்க்கையே ஒரு நதியின் பிரவாகம் போன்றது.மலையில் பிறந்த நதி கடலில் சென்று முடிவது போல கருவறையில் பிறந்த வாழ்வு கல்லறையில் முடிகிறது.இடையிடையே எத்தனையோ மேடு பள்ளங்கள், ஆரவாரங்கள், மோதல்கள்.அத்தனை ரணங்களையும் போராட்டங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்.வாழ்க்கையை அதன் போக்கில் அப்படியே ஏற்றுக்கொள். எதையும்  திணிக்காதே.எதையும் மறுக்காதே.இயல்பை இயல்பு என உணர்ந்து அந்த இயல்போடு ஏற்றுக் கொள்.

**

I am a great admirer of Prophet Muhammad: Ram Jethmalani

Ram Jethmalani who is an eminent Indian lawyer and politician says, he is a great admirer of the prophet of Islam, and is a student of holy Qur’an.While speaking about secularism at Algebra, The Arts and Ideas Club, he said that there is so much of misunderstanding and total unawareness today among different communities about what India’s constitution is.He said that people in India seem to forget that India is a secular state, and secularism means the subordination of religion to reason.

Wednesday, February 13, 2019

சுதந்திரமும் பாதுகாப்பும்

அப்துர் ரஹ்மான் /அவர்களின் வாழ்கை வரலாற்றை விளக்குகிறார்

#முன்னோர்கள் # B.S.அப்துர் ரஹ்மான்  /அவர்களின் வாழ்கை வரலாற்றை விளக்குகிறார்/ #இதாயதுல்லாஹ் / காங்கிரஸ் கட்சி/  #செய்தி தொடர்பாளர்

ஜமால் முஹம்மது சாஹிப் அவர்களின் வரலாற்றை

ஜமால் முஹம்மது சாஹிப் அவர்களின் வரலாற்றை விளக்குகிறார் ஜமால் முஹம்மது (சாஹிப் அவர்களின் பேரன்)

Tuesday, February 12, 2019

What is islam in tamil

Vaiko crying | காந்தியை பற்றி பேசும் போது கண்ணீர் விட்ட வைகோ

Mozhiyum Manithanum | இஸ்லாம் மதமும் தமிழும் | Suba Veerapandian

இஸ்லாமும் தமிழிலக்கியமும்

முனைவர்.பீ.மு. அஜ்மல்கான்
இஸ்லாமியத் தமிழிலக்கியங்கள் என்பன இஸ்லாமிய மார்க்கக் கருத்துக்களை உள்ளடக்கமாகக் கொண்டெழுந்த தமிழ்மொழி இலக்கியங்களே. ஒரு மொழியில் ஒரு சமயத்தைச் சார்ந்த இலக்கியங்கள் தோன்றுவதற்கு அடித்தளமாக இருப்பது மொழிக்கும் சமயத்திற்குமுள்ள உறவு நிலையே. இவ்வுறவு நிலை பலப்படுத்தப்பட்ட பின்னரே எந்தவொரு மொழியிலும் ஒரு குறிப்பிட்ட சமய இலக்கியங்கள் தோன்றுவதற்கான சூழல் அதிகரிக்கும். இவ்வகையில் இன்றைக்குத் தமிழிலக்கிய உலகில் சுட்டிக்காட்டத்தக்க எல்லைப் பரப்பினைப் பெற்றுச் சிறக்கும் இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் தோற்ற வளர்ச்சிக்கு, இஸ்லாம் தமிழகத்துடன் கொண்ட தொன்மை உறவே காரணமாக இருந்திருக்கும். இத்தொன்மை உறவினையும் அதன் பயனாய் மலர்ந்த முதல் இஸ்லாமியத் தமிழிலக்கியத்தையும் ஏனைய பிற இஸ்லாமிய இலக்கியங்களையும் சுட்டிக்காட்டுவதே இங்கு நோக்கமாகும்.

தமிழுக்கும் இஸ்லாத்திற்கும் இணைப்பு ஏற்படுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பினை அரபு நாட்டவர்கள் பெற்றிருந்தனர். எனவே இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்றிற்கான அடித்தளமாக இருந்தது அரபு நாட்டவர்களின் தமிழக வருகை எனலாம். இவ்வருகைநிலை இஸ்லாம் இவ்வுலகில் பரவுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்திருக்கிறது. பெருமானார் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் தோன்றுவதற்கு வெகு காலத்துக்கு முன்பே அரபு நாட்டிற்கும் தமிழகத்திற்குமிடையே வியாபாரத் தொடர்புகள் இருந்திருக்கின்றன. இத்தொடர்பு பெருமானார்(சல்) அவர்கள் காலத்திலும் தொடர்ந்து, நீடித்தது, பின் வலுப்பெற்றது. அரபு, தமிழக மக்களது தொடர்பிற்கான அகச்சான்றுகள் பலவும் வரலாற்றிலும், இலக்கியத்திலும் விரவிக் கிடக்கின்றன.

Monday, February 11, 2019

seasonsali: When the time arrives It all arrives

seasonsali: When the time arrives It all arrives: Semmal Manavai Mustafa . After being a teacher for Indian Medical Graduates (SRMC) (SSSMC) and Indian Engineering Graduates (Biomedic...

தமிழுக்கான எனது ஆழ் பயணம் துவங்கிவிட்டது

Semmal Manavai Mustafa

உறவுகள் அற்ற
தவ வாழ்வின் அருமையை
அறிந்துணரும் காலம்
வந்துவிட்டது
.
அரேபியாவில்
மருத்துவக்கல்லூரி ஆசிரியர் பணி
.
ஒரு ரூபாய் மன்றம்
விரைவில் உலகின் மிகப்பெரிய
தமிழாய்வு நிதி உதவி நிறுவனமாக
மலரும்

ரஜினிகாந்தின் செயல் பாராட்டுக்குரியது...

தனது மகளின் மறுமணத்தை ஊரறிய நிகழ்த்திய நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினர் பாராட்டுக்குரியவர்கள்..
என்னதான் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் திகழ்ந்தாலும் ஒரு தந்தை எனும் நிலையில் ஐந்து வயது குழந்தையுடன் மகள் விதவையாக வீட்டில் இருப்பதை மனச்சுமையாக தான் உணர்ந்திருப்பார்..
பெரும்பாலும் மறுமணம், விதவைத்திருமணம் இரு வீட்டாரும் மட்டுமே கலந்து கொள்ள நடைபெறும் சூழலில் தனது மகளின் மறுமணத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் திரையுலக, அரசியல் பிரபலங்கள் அனைவரையும் அழைத்து பகிரங்கமாக நடத்திய செயல் சமுதாயத்துக்கு ஒரு படிப்பினை தரும் நிகழ்வு கூட...
இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்தும், முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்தும் விதவைகள் மறுமணத்தை மற்ற சமூகத்தவரும் பின்பற்றி கணவர் மரணமடைந்ததாலோ அல்லது விவாகரத்து பெற்றோ தங்கள் வீடுகளில் அடைந்து கிடக்கும் பெண் பிள்ளைகளுக்கு விடியல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது... Colachel Azheem

ஆறு சுவைகளும் அதன் மருத்துவ குணமும்

  ’உன் நண்பன் யார் என்று சொல்.. நீ யாரென்று சொல்கிறேன்’ என்பது பழைய மொழி. நீ எதை விரும்பிச் சாப்பிடுகிறேன் என்று சொல்.. நீ யாரென்று சொல்கிறேன் என்பது ஆரோக்கியப் புதுமொழி. நாம் உண்ணும் உணவைப் பொறுத்து நம் மனதையும் உடல் நலத்தையும் ஓரளவு அனுமானிக்க முடியும். ”எனக்கு இனிப்பு பிடிக்கவே பிடிக்காதுப்பா..கசப்பா..? ஐய்யோ! நான் அந்த பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டேன்,” எனும் நம் விருப்பு வெறுப்புக்கள் எல்லாம் நம் உடலை எந்த நோயினை நோக்கி நகர்த்துகின்றன என்பதை நம் நாட்டு பாரம்பரிய மருத்துவ முறைகள் மிக உறுதியாகச் சொல்லியிருக்கின்றன.

Namma Ooru Hero - 20 Jan, 2019 | Sun TVநம்ம ஊரு ஹீரோ

Sunday, February 10, 2019

*காலங்கள் திரும்ப கிடைக்காது*


இரண்டு  நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்,. ஒருவர் சொன்னார், "கேரளாவில் ஒரு இடம் இருக்கிறது; அது ஒரு டீ எஸ்டேட்; அங்கு செல்போன் வேலை செய்யாது; நாம் அங்கே போய்விட்டால் வெளி உலகை விட்டு முற்றிலும் துண்டிக்க படுவோம்;
இங்கே இருக்கும் டென்ஷன் எல்லாம் குறைக்க, அங்கே போய் ஒரு மூன்று நாள் இருக்கலாம் போல இருக்கிறது". வெளி உலக தொடர்பே அற்று நிம்மதியாக இருக்கலாம் என்றார்.

Saturday, February 9, 2019

சகோதரத்துவம் நிலைக்க செய்யும்னா ஆயிரம் முறை சொல்வேன்!

அழகான விடியல்! ஜன்னல் கண்ணாடிகளுக்குள் நின்று மைனஸ் டிகிரி குளிரில் ரெண்டு ஸ்வெட்டர்கள் அணிந்து விடிகாலை வசந்தத்தை சவுண்ட் இல்லாத ஊமைப்படம் போல பார்த்தே பழகிய கண்களுக்கு புதிய அனுபவம்! சொந்த ஊரு! வாசலில் கைலி பனியனுடன் மெல்லிய சிலு சிலு காற்று! மரங்களின் கிளைகளில் குருவிகளின் கீச் கீச் சங்கீதம்!

பஜ்ர் தொழுகை முடிந்து இரண்டு பள்ளிகளிலிருந்து இரண்டு திசைகளிலும் இருந்து வரும் பயான் சப்தங்கள்! மனைவி தந்த அருமையான டீ! தூரத்துல எதோ ஒரு கோயில்ல நடக்கும்
அர்சசனையின் ஒலி! என் நாடு என் மக்கள்! ஆயிரம் வேற்றுமைகள் இருந்தாலும் ஒற்றுமையா இருக்க முயன்று கொண்டே இருக்கும் மனிதர்கள்!
அதை கெடுக்க முயன்று கொண்டே இருக்கும் அரசியல்வாதிகள்!

இஸ்லாம் அங்கீகரிக்கும் நாகரீகம் 70 views 3 2 SHARE SAVE

இந்தியாவின் முதன்மை மாணவர் அஷ்ரஃப் கெஸ்ரானி!

ஆக்கம்: அபூ ஸாலிஹா

குஜராத் மாநிலத்திலுள்ள வதோத்ரா நகரத்தைச் சேர்ந்த அஷ்ரஃப் கெஸ்ரானி தேசிய அளவிலான நீட் தேர்வில் (NEET-PG), நாட்டிலேயே முதலிடத்தை வென்றுள்ளார். இந்த முஸ்லிம் இளைஞர், எந்த ஒரு நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்திலும் இணைந்து பயிலாமல், வீட்டிலிருந்தபடியே தயார் செய்து, நீட் தேர்வின் உயர் சிறப்புத் தகுதியான All India Rank-1 (AIR-1)யுடன் தேர்வாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.

காலத்தைப் பற்றி


காலத்தைப் பற்றி ஐன்ஸ்டீன்1906-தான் ஆய்வை சமர்பித்தார். ஆனால் அதற்கு முன்னமே சூஃபி ஞானிகளான இறைநேசர்களிடம் சாதாரணமாகவே இருந்து .

எங்கும் விரிந்த அண்ட வெளியில் சதாசர்வகாலமும் வெற்றிடத்தில் அணுவுக்குள் அணுவின் நுண் துகள் தோன்றி மறைந்தபடி உள்ளன. ஒன்றுமே இல்லாத சூனியத்திலிருந்து திடீரென்று ஒரு துகளும், உடன் எதிர்துகளும் ஜோடியாக ஒரே இடத்தில் தோன்றி, ஒன்றுன் ஒன்று கலந்தும் பின் ஒன்றை ஒன்று வெட்டிக் கொண்டும் ஒன்றுமே இல்லாமல் ஆகிறது. இப்படி சம நிலையை காப்பாற்றிய படி உள்ளன. இந்த சமநிலையில் 'புழுத்துளை' என்று ஒருவிதமான குறுக்குவழி  அதாவது பூமியில் ஓர் இடத்தை குறுக்கு வழியில் அடைவது போல காலத்திலும் ஒரு குறுக்கு வழி உண்டு. காலத்தின் குறுக்கு வழிதான்  இந்த "புழுத்துளை" யாகும்.

THE RICHEST MAN ON EARTH | Palam kalyanasundaram | BIG SHORT FILM

இசுலாமியர்கள் பற்றி ஹிந்து பண்டிதர் பேச்சு..


யாகோபு சித்தரின் யாகோபு சுண்ணகாண்டம் என்னும் நூலின் கடவுள் வணக்கப் பாடல்.
"ஆனந்தமாய் நிறைந்த அல்லா பாதம்
அடுத்துநின்ற அடுத்துநின்ற சித்தநபிமார்கள்
பாதம்போற்றி தானந்த மகமதுவை தொழுது
போற்றி தாட்டிகமாய் சுண்ணமென்ற காண்டம்
தன்னை வானந்த மாகவே அறுநூறாக
வகயாகப் பாடினேன் வண்மையாகக்
கோனந்த மெய்ப்பொருளா மின்னூல்தன்னை
குறிப்பாகப் பாடினேன் கூர்ந்து பாரே" -யாக்கோபு என்ற இராமதேவர்

இவர் நாகப்பட்டினத்தைத் தாம் வாழ்விடமாகக் கொண்ட சித்தர்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:05, 9 சனவரி 2013 (UTC)

Friday, February 8, 2019

அறியாமைக் காலத்தின் மீள் வரவு!

ஆக்கம்: இப்னு பஷீர் -

உலகளவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவில் குறைந்து வருகிறது என்ற அதிர்ச்சித் தகவலைத் தெரிவிக்கின்றன அண்மைய புள்ளிவிபரங்கள். இதில் சர்வதேச அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் இருக்கும் சீனாவில் 1௦௦ ஆண் குழந்தைகளுக்கு 87 பெண் குழந்தைகள். இந்தியாவில் 1௦௦ ஆண் குழந்தைகளுக்கு 89 பெண் குழந்தைகள்.

மனிதர்கள் (அந்நாஸ்)

ஆக்கம்: சபீர்

காவல் நிலையத்திலோ – வழக்
காடு மன்றத்திலோ
சட்டாம் பிள்ளையிடமோ – கடுங்
கட்டப் பஞ்சாயத்திலோ…

பாதுகாவல் தேடுவது
போதுமான தாகிடுமோ?
மானுடத்தைப் படைத்தவன் – அந்த
மாபெரும் இறையிடம்தேடு !

அவனன்றோ ஆக்குபவன் – துயர்
அனைத்தும் நீக்குபவன்;
மனிதகுலம் மீட்சியுற – நல்
மார்க்கம் தந்த மன்னனவன் !

ஆன்மிகப் பயிற்சி: ஏழு வழிகள்

==ரமீஸ் பிலாலி==


                       ஆன்மிகப் பயிற்சி: ஏழு வழிகள்

கபீர் ஹெல்மின்ஸ்கி

 பாரசீக மகாகவியும் சூஃபி ஞானியுமான மௌலானா ரூமி அவர்களின் வழியே தொடரும் சூஃபி மரபு “மௌலவியா தரீக்கா” எனப்படுகிறது. அதன் ஒரு கிளை அமெரிக்காவில் நீண்டுள்ளது. அமெரிக்காவின் முதல் மௌலவியா ஷைஃகு (ஆன்மிகப் பள்ளியில் அங்கீகரிக்கப்பட்ட குரு) என்னும் நற்சான்றுக்குரியவர் கபீர் எட்மண்ட் ஹெல்மின்ஸ்கி. “த்ரெஷோல்டு சொசைட்டி” என்னும் ஆன்மிக ஆய்வகம் மற்றும் பதிப்பகத்தின் நிறுவனர். பல சூஃபி நூற்களின் ஆசிரியர். அவர் எழுதியதொரு சிறு ஆன்மிகக் குறிப்பு இது. அமெரிக்காவில் அவர் கற்பிக்கும் மௌலவியா தரீக்காவின் தியானப் பயிற்சிகள் பற்றியதொரு அறிமுகத்தை நல்குகிறது.

ஆட்டு ஈரல் வறுவல் | Mutton Liver Fry | செம்ம ருசி

ஜும்மா உரை உகாண்டா இமாம்

....

மலக்குகள் நமது வருகை குறித்து எழுதும் புத்தகத்தை மூடி வைப்பதற்கு முன்னர் நாம் ஜும்மா தொழ பள்ளிக்குள் நுழைந்தால் நன்மைகள் உண்டு என்றாலும் ஜும்மா உரையை கவனமாக செவிமடுத்தால் கூடுதல் நன்மைகளை நமக்கு அல்லாஹ் வழங்குவான் என்பதையும் நாறிவோம் ....

சில இமாம்களின் ஜும்மா பிரசங்கம் நம்மை கேட்கவிடாமல் தூங்க வைக்கும் சிலரது ஜும்மா பிரசங்கம் நம்மை கேட்பதற்கு ஏங்க வைக்கும் ....

when heart fails, it cries and says....I am too tired

Vavar F Habibullah

சொந்தக் கருத்து
(சில உண்மைகள்)

நமது நாட்டில்
பொதுவாகவே
(எவ்வளவு பெரிய
பதவியாக இருந்தாலும்)
ரிடைர்மெண்ட் ஆனவர்களை
சமூகம் மதிப்பதில்லை.

80 வயதை தாண்டியவர்கள்
முதுமையின் காரணமாக பல
நோய்களின் பிடியில் சிக்கி
தவிப்பது, நிலை குலைவது
என்பது இயற்கை நியதி.
இதயம்,மூளை,சிறுநீரக
குறைபாடுகள் இந்த வயதில்
நிகழ்வது நார்மல் தான்.

Indian author and poet 'Salma' in Varaverpparai 1/2 | News7 Tamil

Thursday, February 7, 2019

பேரன்பு எங்களுக்கான படம் இல்ல" A SPECIAL Review Of Peranbu | Real Life Amudhavan's Request To Ram

பேரன்பு பேரன்பு

பேரன்பு படத்தை சிலாகித்து கொண்டாடிய பேரன்புகாரர்களுக்கு இந்த வீடியோவை டெடிகேட் செய்கிறேன்…. (கமெண்ட் பாக்ஸில்) இதில் வரும் அப்பா போல நான் சிறப்புக் குழந்தைகளோடு இருந்ததில்லை.. பழகியதில்லை… ஆனால் இவரைப்போல அப்பாக்களை.. பலமடங்கு அம்மாக்களை நான் பார்த்திருக்கிறேன்.. வீடியோவில் அப்பாவும், மகனும் பேசும் வார்த்தைகள் படம் பார்க்கும்போது நான் உணர்ந்தவை.. வரிக்கு வரி உடன்பட முடிந்ததால் பகிர்கிறேன்..
மற்றபடி…

பேரன்பில் என்னதான் பிரச்னை?
மேலும் படிக்க Priya Thambi

YouTubenidurali/videos?view

https://www.youtube.com/user/nidurali/videos?view_

mohamedali jinnah 
mohamedali jinnah  Creator since 05-2007 1,735 subscribers
Rocket icon
Here’s how your channel did this month
+179
SUBSCRIBERS
+44,467
VIEWS
+164,940
MINUTES WATCHED
Emoji icon
And here is how your community responded
+206
LIKES
+19
COMMENTS
+19
POSTS
+326

Monday, February 4, 2019

பிராத்தனை

தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்...


   பொதுவாக தந்தைகளின்  இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்குரியது.

இதனால்தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

Sunday, February 3, 2019

இஸ்திமா நிகழ்வின் வெளி வரா புகைப்படம்

*திருச்சி இனாம்குளத்தூர் இஸ்திமா நிகழ்வின்  வெளி வரா புகைப்படம்*

*நாசாவிலிருந்து   எடுக்கப்பட்டது*

*சௌதியிலிருந்து நண்பர் அனுப்பியதை நம் தள நண்பர் திண்டுக்கல் சுல்தாப்பா பகிர்ந்துள்ளார்*

Friday, February 1, 2019

வரிகள்


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரிகள் ஒரு அரசாங்கத்தின் நிர்வாகத்தின் நிதி ஆதாரத்திற்கான முக்கியமான அங்கமாகும். வரிவிதிப்பு என்பது நவீன பொது நிதியின் மத்திய பகுதியாகும். அதன் முக்கியத்துவம், அனைத்து வருவாய்களுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், இந்த வரிவிதிப்பினால் ஏற்படும் சிக்கல்கள்களிலும் சுமைகளிலும் கூட தெரியவரும் [1]. வரிவிதிப்பின் முக்கிய நோக்கம் நிதி ஆதாரத்தை உயர்த்துவதாகும். மாநிலத்தில் மக்களின் நலனை காக்கவும் அதன் கடமைகளை நிறைவேற்றவும் வரி விதிப்பில் உயரிய குறிக்கோள் அவசியம். சில சமூக குறிக்கோள்களை அடைவதற்கு ஒரு கருவியாக வரிவிதிப்பு பயன்படுத்தப்படுகிறது, அதாவது செல்வத்தை மறுவிநியோகம் செய்வதன் வழியாகவும், அதன் மூலம் சமத்துவமின்மையை குறைக்கவும் பயன்படுகிறது. நவீன அரசாங்கத்தில் வரிவிதிப்பு என்பது நிர்வாகம் மற்றும் சமூக சேவைகளின் மீதான அதிகரித்துவரும் செலவினங்களை சந்திக்க வேண்டிய வருவாயை உயர்த்துவதற்கு மட்டுமல்லாமல், வருமானம் மற்றும் செல்வ வளத்தின் சமத்துவமின்மையை குறைப்பதற்கும் தேவையானதாகும். நுகர்வோர் நுகர்வு மற்றும் பணவீக்கத்தை உயர்த்துவதற்கு பணம் செலுத்துவதற்கு வரி விதிக்கப்பட வேண்டும்.[2]. வரி என்பது நிதி சார்ந்த கட்டணம் அல்லது மற்ற வகையில் வசூலிக்கப்படும் கட்டணங்கள், சட்டரீதியான நிறுவனங்களிடமிருந்து அரசால் அல்லது அரசுக்கு சமமானவர்களால் வசூலிக்கப்படுவதாகும். வரிகளை மாநில அரசாலும் அல்லது ஒரு துணை நிறுவனத்தாலும் சுமத்த முடியும். வரிகளில் நேரடி வரி அல்லது மறைமுக வரி என இரண்டு வகைகள் உள்ளது, வரி என்பது தனிநபர் அல்லது சொத்து மீது விதிக்கப்படும். அரசை ஆதரிக்க நிதி சுமை சட்டரீதியான அமைப்புகளால் வசூலிக்கப்படுவதாகும் [3]. வரி என்பது கட்டாயமாக செலுத்தும் கட்டணமோ அல்லது நன்கொடையோ அல்ல, ஆனால் அது ஒரு சட்டரீதியான பங்களிப்பிற்கு உட்பட்டது, மேலும் இது சட்டரீதியான அமைப்புகளால் வசூலிக்கப்படும் (அரசால் விதிக்கப்பட்டவைகள்) பங்களிப்புகள் ஆகும்[4].