Thursday, June 16, 2016

இந்த முகநூலில் ஒரு பிரச்சினை என்னன்னா...

சுஹைனா மஜ்ஹர்
இந்த முகநூலில் ஒரு பிரச்சினை என்னன்னா...
நாம் தவ்ஹீதை தாக்கி ஏதேனும் பதிவிட்டால் உடனே தர்ஹாவாதிகள் நெருங்கி வருவார்கள்.
தர்ஹாவாதிகளை தாக்கி ஏதேனும் பதிவிட்டால் உடனே தவ்ஹீதுஇயக்கவாதிகள் நெருங்கி வருவார்கள்.
அத்தகையோரிடமிருந்து நிறைய ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் வரும். பல நேரங்களில் என் அனுபவத்தில் உணர்ந்தது இது.
ஆனா நான் எந்த வாதியுமல்ல வியாதியுமல்ல. பிறந்ததில் இருந்தே தப்லீக்குடைய பாசறையில் வளர்ந்தவள். 35 வருடங்களாக தீன்பணியாற்றி வரும் பழுத்த தப்லீக்வாதி என் தந்தை. தீனுக்காக சொந்த காசில் பல நாடுகள் சுற்றி நிறைய தியாகங்கள் செய்தவர். இப்பவும் அவர் அப்படித்தான். அதனால் சின்ன வயதில் இருந்தே ஹலால் ஹராம் பேணுதலுடன் வளர்க்கப்பட்டேன். மார்க்க சட்டதிட்டங்கள் ஓரளவுக்கு அறிந்திருக்கும் காரணமும் அது தான். அல்ஹம்துலில்லாஹ்.

இங்குள்ள பல பேரை போல முகநூல் வந்து தீனை கற்றுக் கொண்டவள் அல்ல நான். எந்த இயக்கமும் எழுச்சி பெறாத காலகட்டத்திலேயே ஹக் எது, பாதில் எது, ஷிர்க் எது, குஃப்ர் எது என்ற அறிவு இருந்தது. ஒரு போதும் இறைவனுக்கு இணை வைத்ததில்லை.
ஆனால் நான் தப்லீக்வாதியல்ல. என் தந்தை தான் தப்லீக். என் கணவருக்கு தப்லீக்கில் அவ்வளவு ஆர்வம் இல்லாததால் எனக்கும் அதில் ஈடுபாடு இல்லை. அவர்களின் சில கொள்கை கோட்பாடுகளில் எனக்கு உடன்பாடு கிடையாது. எனினும் தப்லீக் உட்பட எந்த இயக்கத்தையும் முழுமையாக நான் எதிர்ப்பதில்லை.
பிடிக்காத கொள்கைகளை நீக்கி விட்டு எல்லாரிடமும் இருக்கும் நல்ல விஷயங்களை மனமுவந்து ஏற்றுக் கொண்டிருக்கிறேன் பலமுறை. தவ்ஹீத் இயக்கம் என்றால் விஷமாக வெறுக்கும் என் பெற்றோரிடம் எத்தனையோ முறை அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களை சொல்லி வாதாடி இருக்கிறேன். சண்டை கூட போட்டிருக்கிறேன். அதே போல என்னை வம்புக்கிழுத்தால் முகநூலில் தப்லீக்கை எப்போதும் ஆதரிப்பேன். தர்ஹாவாதிகளிடமும் இணக்கமாகவே இருந்து வருகிறேன்.
நான் ஹனபி மத்ஹபை பின்பற்றுபவள். (இது பற்றி கமெண்ட்டில் விவாதம் வேண்டாம் ப்ளீஸ். நீங்கள் விவாதம் செய்வதால் என்னை மாற்றிக் கொள்ள போவதில்லை.) ஆனாலும் என் பெற்றோரிடம் மத்ஹபில் இருக்கும் சில குழப்பங்களுக்காகவும் பல முறை வாதம் செய்ததுண்டு.
விவாதங்கள், சண்டைகள், நட்பில் விரிசல்கள் இவற்றின் காரணமாகவே நான் முகநூலில் முடிந்தவரை மார்க்கம் பேசுவதில்லை. அதே போல எந்த இயக்கவாதியின் வம்புக்கும் போவதில்லை. இயக்க பதிவுகளில் பின்னூட்டம், வாதம் ஏதும் செய்வதில்லை. பெரும்பாலும் பிடிக்காவிட்டால் கடந்து சென்று விடுவேன். ஆனாலும் என்னிடம் வந்து மோதினால் பதில் கொடுக்காமல் ஓய்வதுமில்லை.
இது குழப்பமான காலம். என் தீன் மிகவும் பலகீனமானது. என்னிடம் இன்ஃபிராதி அமல்கள் மிகவும் குறைவு. இந்நிலையில் எனக்கு நான் ஆராய்ந்த விதத்தில் எது சரியென்று படுகிறதோ அதை பின்பற்றுகிறேன். தெரியாத விஷயங்களை ஹனபி மத்ஹபில் இருந்து எடுத்துக் கொள்கிறேன்.
அதனால் யாரும் அவரவர் சார்ந்த கொள்கைக்கு ஆதரவாக என் கருத்தை முன் வைப்பேன் என்று எதிர்பார்க்காதீங்க ப்ளீஸ். ஏன் இந்த பதிவு என்று உங்களில் எல்லாருக்கும் புரியாது. ஆனாலும் காரணம் இருப்பதால் தான் பதிந்தேன். இது என் நிலைப்பாடு. நான் இப்படித்தான் இருப்பேன். என்னை யாரும் மாற்ற முயல வேண்டாம். ஏனெனில் நான் கொஞ்சம் திமிர் பிடித்தவள்... :)
யாரும் எந்த இயக்கத்தைக் கொண்டும் சுவர்க்கம் செல்ல முடியாது. அவரவர் தனிப்பட்ட தொழுகை, இபாதத், அமல்கள், சுன்னத்தான தோற்றம், செயல்கள், ஹலால் ஹராம் பேணுதல்களை வைத்து மட்டுமே எல்லாவற்றுக்கும் மேலாக இறைபொருத்தத்தால் மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும். நம்மை சுவர்க்கவாதியாக ஆக்க அல்லாஹ் போதுமானவன்...!

சுஹைனா மஜ்ஹர்

No comments: