Wednesday, June 1, 2016

வாய்ப்புகள் ....!

வாய்ப்புகள் ....!
நல்ல வாய்ப்பும் வசதியும் வரவேண்டுமென என்று எண்ணாதவர் ஒருவரேனும் இவ்வுலகில் இல்லையென்றே சொல்லிவிடலாம்.
பொருள்சார் சமூக கட்டமைப்பை காலங்காலமாய் கட்டிக்காத்து வரும் ஆட்சியரசியலின் வெற்றியென்றே இதைக் கூறலாம். வசதிகளைத் தேடிச்செல்லும் மனிதன் வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொள்கிறானா என்றால் சிலருக்கே அந்த வாய்ப்பு வருகிறது அதிலும் வேகுசிலரரே வந்த வாய்ப்பை பற்றிப் பிடித்து முன்னேறிச் செல்கின்றனர்.
வாய்ப்புகளைக் கோட்டை விட்டுவிட்டு அல்லல்பட்டு ஏங்கித்தவிக்கும் அநேகர்களை நாமும் அவ்வப்போது பார்க்க நேரிடுகிறது. அதுபோலவே வந்த வாய்ப்பை தக்க வைத்து முன்னேறிச் செல்கையில் தன்னை சார்ந்தோரையும் உயர்த்திவைக்கும் நல்லோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கழிந்த ஞாயிறு மாலைநேரத்து நகர் உலாவின்போது இருவரைக் காண்கிறேன். அதன் விளைவாக வந்த எண்ண ஓட்டத்தை உங்களோடு பகிர நினைத்ததால் எழுதியதே இந்த பதிவு.

இருவரும் ஒரேசாலையின் இருபக்கங்ககளின் நடந்து செல்கின்றனர். நான் வாகனத்தை செலுத்தியவாறே இருவரையும் பார்க்கிறேன், அவ்விருவரும் ஒருவருக்கொருவரையோ என்னையா கண்டிருக்க முடியாது. இருவருமே எங்களூர்காரர்கள்தான். எல்லோரையும் போலவே உகாண்டாவுக்கு பொருள்தேடி வந்தவர்கள்.
ஒருவர் ஒரே நிறுவனத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக நம்பிக்கையுடன் நல்ல நிலையில் சிறப்பாக பணிசெய்து வருகிறார். தான்மட்டுமல்லாது தனது உறவினர்களையும் அதே நிறுவனத்தில் வாய்ப்புகளை ஏற்படுத்தி வளர்த்து விடுபவர். அவர் தனக்கு வந்த வாய்ப்பை விரிவுபடுத்தி பலருக்கும் பலன் வாய்க்க ஏதுவாக இருந்திருக்கிறார். மாலைநேரத்தில் உறவினர்கள் புடைசூழ ஆரோக்யநடை பழகுகிறார். இறைவன் அவருக்கு மேலும் நல்ல பல வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கட்டும்.
மற்றொருவரும் கூட அதே காலகட்டத்தில் உகாண்டாவுக்கு வந்தவரே. ஒரு நிறுவனத்தில் நல்லவேலை பார்த்தவர்தான். ஆனால் நம்பிக்கையின்றி நடந்ததால் நல்ல வாய்ப்பை இழந்து, மானமிழந்து, மரியாதை இழந்து சொந்த ஊருக்குக்கூட போகாமல் சில்லறை வேலைகள் பார்த்து வயிறு வளர்த்து வருகிறார். வந்த வாய்ப்பை தவறவிட்டதினால் வந்த வினையை அனுபவிக்கிறார். இறைவன் அவருக்கு நல்லவழியைக் காட்டட்டும்.
வாய்ப்புகளை உருவாக்குவோம் சரியாக நமக்காகவும் சார்ந்தொருக்காகவும் நல்லமுறையில் விரிவு படுத்துவோம். நாணயமாய் நடப்போம் நாடு போற்ற வாழ்வோம்.

ராஜா வாவுபிள்ளை

No comments: