Saturday, October 31, 2015

ஒற்றை வரியில் எல்லாம்...

 by Yasar Arafat
ஒற்றை வரியில் எல்லாம்...

உன் வியர்வையின் நெடி
மணம் கமழும் என் மனம் மகிழும்;
பாத்திரம் கழுவியக் கையோடு எனை
அணைக்கும் உன் ஸ்பரிசம் அது சுகம்!

அடுப்படி மசாலா வாசத்தோடு உன் சரீரம்
ஆனாலும் கட்டியணைக்கும்போது
உள்ளம் தோறும் மெய்சிலிர்க்கும்;

இதுதான் கடைசியென
எத்துனை முறை ஊட்டுவாய்;
இன்னும் உணவு இருக்கு..
நீ உண்ணு என
காலியான பாத்திரத்தோடு
எப்படிதான் மனம்வந்து சொல்லுவாய்;

உச்சக்கட்டக் கோபத்திலும்
சாப்பாட்டை கொண்டுவந்து நீட்டுவாய்;
தவறிழைத்த நானே முரண்டுப்பிடித்தாலும்
சமாதானாத்திற்கு நீயே வருவாய்;

யார் இந்த துலுக்கன்? ? - புவன் கிருஷ்னண்




யார் இந்த துலுக்கன்? ? - புவன் கிருஷ்னண்

ஒரு இந்து சகோதரனின் மனம் திறந்த பதிவு!!!

நாம் நம்முடைய நெருங்கிய இஸ்லாமிய நண்பரையே ” டேய் துலுக்க பையா ” என்றுதான் அழைக்கிறோம். துலுக்கன் என்று கூறி அவர்களை கிண்டல் செய்வதாக நினைக்கிறோம்.

இந்த பெயர் காரணத்தை நான் பிறகு கூறுகிறேன். உங்களில் எத்தனை பேருக்கு இஸ்லாமிய நண்பர்கள் உள்ளனர். எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்களை தெரியும்.

என் அனுபவத்தில் அந்த இளம் வயதில் அவர்கள் கடைபிடிக்கும் ஒழுக்க நெறிகள் நம்மில் ஒரு சிலர் கூட கடைபிடிப்பதில்லை.

Thursday, October 29, 2015

நீங்கள் துபாயில் வசிப்பவரா? உங்களை மகிழ்ச்சி படுத்த காவல்துறை உதவும்!.


துபாயில் வசிப்பவர்கள் சோகமாக இருந்தால், உடனடியாக ஓடோடி வந்து காரணத்தைக் கேட்கிறது போலீஸ். உலகின் மிக மகிழ்ச்சி யான நகரம் என்ற பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடிப்பதற்காகவே இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது அந்நாட்டு அரசு.

ஓர் எளிமையான ஆய்வு மூலம் மக்கள் சோகமாக இருக்கிறார்களா மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என கணக்கெடுக்கப்படுகிறது. இந்த கணக்கெடுப்பில் பங்கேற்பவர்கள் முகச்சுளிப்புடன் இருக்கும் குறியீடு, சிரிக்கும் குறியீடு, உணர்ச்சிகளைக் காட்டாத முகபாவ குறியீடு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்.

மகிழ்ச்சியாக இல்லை என்று பதிவு செய்பவர்களை காவல் துறை தொடர்பு கொண்டு, அதற்கான காரணத்தை விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, October 28, 2015

யார் இந்த அப்துல் சத்தார் எதி?


” நான் எதி. நான் பாகிஸ்தான்காரன்.நான் இந்தியாவை வெறுக்கவில்லை…இரண்டு நாடுகளுக்கு இடையிலான அமைதியை நான் ஆதரிக்கிறேன் ” என்று சொல்பவர்.

“எதி நிறுவனம் எந்த அரசின் நிதி உதவியையும் ஒப்புக்கொள்ளாது. தனிமனிதர்களின் ஆதரவுகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளும்;அவர்கள் பாகிஸ்தானியராக இருக்கலாம் அல்லது எந்த நாட்டினராகவும் இருக்கலாம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நன்றி” என்று தம்நிலை விளக்கம் தருபவர்.

எதி ப்ரிட்டிஷ் இந்தியாவில் குஜராத்தில் உள்ள பண்ட்வா என்ற இடத்தில் 1928-இல் பிறந்தவர். இவருடைய தாயார் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு அதனாலேயே இறந்ததனால் ஏற்பட்ட துயரமே இவரை மாற்றுத் திறனாளிகள்,மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் முதலியோரை ஆதரிப்பவராக ஆக்கியது. இளமையில் அன்றாடம் தாயார் தரும் இரண்டு பைசாக்களில் ஒன்றைத் தன் உணவுச் செலவுக்கும் மற்றொன்றை ஏழை எளியோரின் உணவுச் செலவுக்கும் செலவிட்டவர்.மிகவும் துயரமான சூழ்நிலையில் பாக்கிஸ்தானுக்குத் துரத்தியடிக்கப்பட்டவர்.

Monday, October 26, 2015

துளி நீரும் நீ! பெருங் கடலும் நீ!!

மதுரையில் பிறந்த
மதுரம் நீ.
அதன் சாரம்,
புதுகையில் இருந்து
ஊற்றெடுத்தது- என்பதே
உன் பூர்வீகம்.

தமிழ்த்தாயின்
மனம் பெரிது-
உன் மனம் போல.
எனவே,
உர்தூ குடும்பத்து
உதயத்தை,
தமிழ்த்தாய்
தனதாக்கிக் கொண்டாள்.

வைகைக் கரையில் தொடக்கம்
வையகக் கரையெங்கும் தமிழ் முழக்கம்.

ஆதாரம்….!

உலகில் உயிர்களின் ஆதாரம்
பிராணன்
உலகில் பிராணவாயுவின் ஆதாரம்
இயற்க்கை

உலகில் இயற்கையின் ஆதாரம்
உயிர்கள்
உலகில் உயிர்களின் ஆதாரம்
வாழ்க்கை

உலகில் வாழ்கையின் ஆதாரம்
மனிதம்
உலகில் மனிதத்தின் ஆதாரம்
அன்பு

உலகில் அன்பின் ஆதாரம்
அமைதி
உலகில் அமைதியின் ஆதாரம்
அஹிம்சை

உலகில் அஹிம்சையின் ஆதாரம்
சகோதரத்துவம்
உலகில் சகோதரத்துவத்தின் ஆதாரம்
சமாதானம்

உலகில் சமாதானத்தின் ஆதாரம்
இறையச்சம்
அண்ட சராசரங்களின் ஆதாரம்
மகாபெரியோன் இறையோனே !!

ராஜா வாவுபிள்ளை

முகநூலும் எழுகின்ற உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாக இருக்கிறது

முகநூல் திண்ணை..11
--------------------------

கணவருக்கு வேறு ஊருக்கு மாற்றல் வந்து விட்டது..கூடவே பதவி உயர்வு..

ஆனால் அவளுக்கு ஏனோ அவ்வளவு மகிழ்ச்சியில்லை..ஆனால் எதையும் அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை..

புது ஊருக்குப் போன ஒரே மாதத்தில் அவளுக்கு உடலெல்லாம் எரிச்சல்,தோல் அரிப்பு ..

சூடு, அலர்ஜி என்று கணவர் ஆறுதல் சொல்லி மருந்து வாங்கி கொடுத்தாலும் நாளுக்கு நாள் எரிச்சலும் ,அரிப்பும் அதிகமாகிப் போனது...

வேறு வழியின்றி ஒரு தோல் மருத்துவரை சந்தித்த போது

"தோலெல்லாம் அரிக்குது சமயத்துல துணியெல்லாம் கூட ஈரமாகுது.." அவள் டாக்டரிடம் சொன்னாள்..

அவளுடைய பேச்சில் ஒரு வித கோபமும் ,விரக்தியும் கலந்து கிடப்பதை கண்டு கொண்ட டாக்டர் கேட்டார்.

"என்னம்மா பிரச்சினை..எதையாவது மனதில அடக்கி வச்சிருக்கியா வெளியில சொல்ல முடியாததா..?

அதற்கு மேல் அவளால் மறைக்க முடியவில்லை..

" ஆமாம் டாக்டர் இவருக்கு வேறு ஊருக்கு மாற்றலானதில் எனக்கு கொஞ்சமும் விருப்பமில்லை..12 வருடமாக பழகிய ஊரை விட்டு போக மனமில்லை.கோபம் கோபமாக வந்தது..என்னுடைய இயலாமையினால் அழுகை வந்தது.. எதையும் என்னால் வெளியில் காட்டிக் கொள்ள முடியவில்லை..அடக்கிக் கொண்டு இருக்கிறேன்."கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது..

"அந்த அடக்கப் பட்ட உணர்வுகள் தான் உடம்பில் எரிச்சலாகவும் பிறகு வியர்வையில் ஈர உறுத்தலாகவும் மாறி மாறி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது..இதை இப்படியே விட்டு விட்டால் அது உங்களை பெரிய மனநோயாளியாக்கி விடும் " என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்

இது ஒரு உண்மை சம்பவம்...

Sunday, October 25, 2015

தேவைக்கு பொருள் தேடுவது

"நீ ஏழையாக பிறந்தால் அது உன் தவறில்லை, ஏழையாக மறைந்தால் அது உன் தவறு" - பில் கேட்ஸ்

அடிக்கடி வலைதளங்களில் பார்க்கும் வாசகம்.. இது சரியா? பணத்தையே பிரதான குறிக்கோலாக கொண்டு ஒருவன் வாழலாமா?

அவன் செல்வத்தைத் திரட்டி, அதைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என அவன் எண்ணிக்கொன்டிருக்கிறான். அவ்வாறன்று, நிச்சயமாக அவன் "ஹூதமா" வில் வீசப்படுவான். "ஹூதமா" என்றால் என்னவென உமக்கு அறிவித்தது எது.? (அது) உள்ளங்களைச் சென்றடையும் மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பாகும். (அல்-குர்ஆன் 104:2-7)

செல்வத்தைப் பெருக்கும் ஆசை!

செல்வத்தைப் பெருக்கும் ஆசை!
செல்வத்தின் மீதுள்ள ஆசை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது!

“பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு” (அல்-குர்ஆன் 3:14)

கப்ருகளை சந்திக்கும் வரை செல்வத்தை பெருக்கும் ஆசையில் இருக்கும் மனிதன்!

“செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது- நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அவ்வாறல்ல – மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள். பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்” (அல்-குர்ஆன் 102:1-8)

கலைத்தீபம் கண்ட கலைமகள்!

சாந்தமருதூராம் கிழக்கு மண்ணில்
ஆய்ந்து கலை செய்யும் அறிவையாள் ஹிதாயா -
வாய்மையின்
அந்தி வானத்து அழகு நிலவாம்
இந்த மண்ணில் இவள் பெருமை !

உள்ளத்து ணர்வுக்குள் உறங்காப் படைப்புக்குள்
தெள்ளத் தெளிவாம் செகத்திடை மாந்தர்க்கு-
வெள்ளையாய்
தாள் பதிக்கும் தகைசேர் இலக்கியங்கள்
கொள்கை கொள்ளுமாம் குணம்.

Wednesday, October 21, 2015

முதுமை அடையும் பெற்றோரும் பிள்ளைகளின் அரவணைப்பும்


-இம்தியாஸ் யூசுப் ஸலபி-
எம்மை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய எமது பெற்றோர் வயதுக்குச் செல்லும்போது அல்லது முதுமையை அடையும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் அவர்களது நிலமைகளையும் நாம் அறிந்துகொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

குழந்தையாக, சிறுவர்களாக வாலிபர்களாக நாம் இருக்கும்போது நமது பிரச்சினைகளையும் நிலவரங்களையும் நன்கு கவனித்து, நம்மை வளர்த்து ஆளாக்கியவர்கள் எமது பெற்றோர்கள். ஒவ்வொரு பருவத்திலும் ஒரு வகையான பிரச்சினையை நாம் சந்திக்கின்றோம். அது போலவே பெற்றோரும் முதுமையிலும் பிரச்சினைகளை சந்திக்கின்றார்கள். அவர்களது பிரச்சினைகளையும் மனோ நிலைகளையும் பிள்ளைகள் அறிந்து அன்புடன் நடாத்த வேண்டிய கடமைப்பாடு உள்ளது.

Tuesday, October 20, 2015

குரூர மனச் சிந்தனையாளர்கள்



ஒரு மனிதனை எப்படியெல்லாம் நாம் துன்புறுத்தலாம்? சொற்களால், வார்த்தைகளால், செய்கைகளால், எமது நடத்தைகள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாவற்றாலும் ஒரு மனிதனை இலகுவாகத் துன்புறுத்தி விடலாம். ஆனால் அத் துன்புறுத்தல்களை எல்லோராலும் இலகுவில் தாங்கிக் கொள்ளமுடியாது. துன்புறுத்தலுக்குள்ளாகும் மனிதனின் உணர்வுகளும், உடலும் ஒரே நேரத்தில் சீண்டப்படுகின்றன. அவற்றின் விளைவுகள் பாரதூரமானவை. நீச்சலை அறியாதவன் ஒருவனை நடுக் கடலில் தள்ளிவிடுவதைப் போல குரூரமானவை அவை. ஆனால் அதைச் செய்பவனும் இன்னுமொரு சக மனிதனே. துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுபவனைப் போன்றே குருதியும், நரம்புகளும், அவயவங்களும் கொண்டவனே துன்புறுத்துபவனும். அவனுக்கு மட்டும் அம் மனநிலை எப்படி வாய்க்கிறது? அதிகாரமும், ஆணவமும், பழி வாங்கலுமே இவ்வாறான துன்புறுத்தலுக்கு ஒரு மனிதனைத் தூண்டுகின்றன. இவ்வாறான துன்புறுத்தல்களை ‘சித்திரவதை’ எனப் பொதுப் பெயர் கொண்டு அழைக்கலாம்.

Sunday, October 18, 2015

அதிகாலையில் முகத்தில் உரசும் இதமான குளிர் காற்று...


அதிகாலையில் முகத்தில் உரசும் இதமான குளிர் காற்று...

குழந்தையின் சிணுங்கல்கள்

பிள்ளைகளின் புத்தக சுமைகள்..

குக்கரின் விசில் சத்தம்..

ஆட்டோக்களில் குழந்தைகளின் நெரிசல்கள்..

சாலைகளில் காலை நேர டிராபிக்..

பைக்கில் சாலையில் மழையின் தாலாட்டு...

மௌனம்

மௌனம்
உலகில் மிக மிக அழகானது.
சுற்றுச் சூழலில் உணர்த்தப்படும் ஒவ்வாமை உணர்வுகளை ஜீரணிக்க முடியாமலும், வலுக்கட்டாயமாக ஏற்படுத்தப்படும் அழுத்தத்தினால் உண்டாகும் அஜீரணத்தை வார்த்தை எதுவும் பிரயோகப்படுத்த முடியாதவாறு பலவந்தமாய் வாய்க்கு பூட்டு போட்டு அடைத்து விடுகிற நெருக்கடியினாலும், அடிமனதில் சுழலும் வெப்பக்காற்று, பக்கத்தில் நின்று சுவாசிப்போரின் நாசிகளால் கூட உணற முடியாத வகையில் வித்தை காட்டி அமைதிச் சூழலை ஏற்படுத்தி வைத்து விடுகிறது.

முன்னேற்றம்...!

ஏழை எழியவரின்
முன்னேற்றம்
வீழ்ந்து போகின்றது எழாமலே ...

பணம் படைத்தவனின்
முன்னேற்றம்
மேலும் ஏறுகிறது விழாமலே ...

அரசியல் விற்பன்னர்களின்
முன்னேற்றம்
முந்தி நிற்கிறது பந்தியினிலே...

ஹிஜ்ரீ பிறந்த வரலாறு



ஹிஜ்ரீ ஆண்டு தெரியுமா? முஸ்லிம்களின் திருமண அழைப்பிதழ்களில் பார்த்திருக்கலாம். நோன்பு காலங்களில் ஸஹர் நேரம், நோன்பு துறக்கும் நேரம் அடங்கிய அட்டவணைகள் பள்ளிவாசல்களில் வினியோகிப்பார்களே அதில் இருக்கும். மாபெரும் இஸ்லாமியப் பேரணி, முஸ்லிம் மணமக்களைப் பல்லாண்டு வாழ்த்தி, ஹஜ்ஜிலிருந்து திரும்பியவர்களுக்கு என்று வாழ்த்து அச்சிட்டு ஊர்ப்பக்கம் போஸ்டர்கள் ஒட்டியிருப்பார்கள் அதிலும் “ஹி“ புள்ளி ஆண்டு எண் என்று இருக்கும். பெரிய எழுத்திலான ஆங்கில ஆண்டு விபரங்களுடன் அதைவிடச் சிறிய அளவில் ஹிஜ்ரீ விபரங்களும் குறிப்பிட்டிருப்பார்கள்.
நம்மில் மிகப் பெரும்பாலானவர்கள் அதைப் படித்துவிட்டு, ஹிஜ்ரீ விபரங்களை மட்டும் காஃபி ஃபில்டரில் கவனமாய் வடிகட்டிவிட்டு நிகழவிருக்கும் விசேஷத்தின் ஆங்கில ஆண்டு, மாதம், நாள் ஆகியனவற்றை மனதில், டைரியில், காலண்டரில், சுவற்றில், செல்ஃபோனில் இப்படி எங்காவது குறித்து வைத்துக் கொள்வோம்.

சாட்டை!


"சாமிதான்டா எல்லார்க்கும் மூளை தந்தான்....
சப்பான்காரன் மூளைக்கு வேலை தந்தான்......" என்றொரு பாடலைக் கேட்டிருப்பீர்கள் இல்லையா?

தொப்புளைப் பார்த்தவுடன், சுற்றிலும் பம்பரம் சுழற்றத்தான் இங்குள்ள மழுங்கிய மூளைகளுக்கு தோன்றியது.

ஜப்பான் மூளைக்கு என்ன தோன்றியிருக்கிறது தெரியுமா?

மூப்பு முதிர்ந்தவுடன் முட்டிக்கொண்டு வருவதை நம்மால் உணரமுடியாது. அதற்கான உணர்வுகள் வயோதிகம் காரணமாக குறைந்துவிடுவது அல்லது முற்றிலும் உணர்வுகளற்றுப் போவதே காரணம்.

மேற்சொன்ன காரணத்தால் தன்னையறியாமல் சிறுநீர் அல்லது மலம் வெளியாகிவிடும். இதனால் முதியவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாவார்கள். அதேபோல் சிறுவர்களுக்கும், படுக்கையிலுள்ள நோயாளிகள் இன்னும் பிறர் உதவி தேவைப்படுவோர் என அனைவருக்குமே இதுவொரு பெரும் பிரச்சனைதான்.

சாதனைப் பெண்மணி ஃபஜிலா

சர்வதேச அளவில் சாதனைகள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் ஒரு தமிழ்ப் பெண்மணி. அவர் ஃபஜிலா ஆசாத்!  பல நாடுகளுக்கும் சென்று இளைஞர்களுக்கு  தன்னம்பிக்கை வகுப்புகளை நடத்திக்கொண்டிருக்கிறார் அவர்.

மிருதுவான கவிஞராக, அழுத்தமான கட்டுரை யாளராக, தேர்ந்த நகை வடிவமைப்பாளராக, வசீகரிக்கும் பேச்சாளராக, அனுபவம்மிக்க மனநல ஆலோசகராக இப்படி பல்வேறு பரிணாமங்களுடன் திகழ்ந்துகொண்டிருக்கும் தன்னம்பிக்கைப் பெண்மணி ஃபஜிலா ஆசாத் அண்மையில் சென்னைக்கு வந்திருந்தார். அவரை "இனிய உதயம்' வாசகர்கள் சார்பில் சந்தித்தோம்.

உலக அளவில் சாதனை செய்துவரும் உங்களின் வேர் எது? விலாசம் எது?

ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரைதான் என் தாய்பூமி. இதுதான் நான் வேரூன்றி முளைத்த இடம். என் அப்பா பெயர் உசைன் அப்துல்காதர். முற்போக்கு சிந்தனையாளர். பண்பாளர். அவர்தான் என் ரோல்மாடல். அம்மா, சித்தி சுபைதாவோ வைதீகக் கோட்பாடுகளில் ஊறியவர். என்னோடு பிறந்தவர்கள் ஐந்து பேர். நான்தான் மூத்தவள். குடும்பத்தினரின் அன்பு நீரூற்றில் நனைந்தபடியே வளர்ந்தவள் நான். பள்ளிப் படிப்பில் சுட்டி. பள்ளி, கல்லூரிகளில் படித்தபோது, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் நான் பலமுறை மாநில அளவில் முதலிடம் பிடித்திருக்கிறேன். ஹமீதியா மெட்ரிக் பள்ளி தமிழ் ஆசிரியை நூர்ஜகான் என் தமிழார்வத்துக்குத் தாய்ப்பால் ஊட்டினார். ஆசிரியை சௌதாவும் என்னை உற்சாகப்படுத்தினார். அதனால் எனது பள்ளி நாட்கள் வண்ணமயமாய் நகர்ந்தன.

‎இப்போது‬ அவர் யோசிக்க ஆரம்பித்திருந்தார்.

ஒரு வணிக நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது தமது நிறுவனத்தின் மூலமாகச் செய்யும் சேவைகளைக்குறித்து சொல்லிக்கொண்டிருந்தார். சில கோவில்களின் கட்டிடப் பணிகளுக்கு கணிசமாக பண உதவி செய்ததாகவும் கும்பாபிஷேகம் மற்றும் அன்னதானத்திற்கு தர்மம் செய்ததாகவும் இறைவன் தாம் செய்யும் இந்த தானதர்மங்களுக்குப் பகரமாக வணிகத்தில் செழிப்பையும் குடும்பத்தில் மன நிம்மதியையும் தந்துவிட்டால் போதுமானது என்று பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டிருந்தார்.

Monday, October 12, 2015

சமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள்

டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்

  நமது நாடு பல நூற்றாண்டுகளாகவே பல சமயத்தவர், இனத்தவர், மொழியினர், பண்பாட்டு மரபினர் வாழும் பன்மைச் சமூக நாடாக திகழ்ந்து வருகிறது. பன்மைச் சமூகச் சூழலில் இணக்கம் இருந்தால் மட்டுமே அமைதியும், மகிழ்ச்சியும் கிட்டும். நல்லிணக்கமே நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் வலுவான அடித்தளமாகும்.

  சமூக நல்லிணக்கம் மலர, வெற்று வார்த்தைகளும், போலிப் பேச்சுகளும், கண் துடைப்பு நடவடிக்கைகளும் எவ்வகையிலும் உதவ மாட்டா. மனித நேயம், நீதி, நியாயம், தர்மம், அஹிம்சை ஆகியவற்றின் கொள்கைகளும், செயல்பாடுகளுமே சமூக நல்லிணக்கம் உருவாக வழி வகுக்கும்.


 1.மனித நேயத்துடன் வாழ்க !

  சமூக நல்லிணக்கத்திற்குத் தடையாக இருப்பது கொள்கை வேறுபாடுகள் அல்ல. சமூகங்களுக்கிடையில் காணப்படும் ஆதிக்க மனப்பான்மை, வெறுப்பு, பகைமை, மாச்சரியம், பொறாமை, அவநம்பிக்கை, சந்தேகம் ஆகியவையாகும். இவற்றைப் போக்கும் அருமருந்து மனிதநேயமே. மொழியால், இனத்தால், சமயத்தால் வேறுபட்டிருப்பினும் நாம் அனைவரும் மனிதர்கள். ஒரே வகையான உடலமைப்பு, உடல் செயல்பாட்டு முறை, உளவியல் போக்கு கொண்டவர்கள். நமது தேவைகளும், உணர்வுகளும், ஆசைகளும், நிராசைகளும் ஒரே மாதிரியானவை. எனவே, தனக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்புவோம் என்று எண்ணிச் செயல்பட்டாலே நல்லிணக்கம் நம்மைத் தேடிவரும்.

  ஒன்றே குலம், ஒருவனே தேவன் – திருமூலர்

  யாதும் ஊரே, யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றன்

  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் – வள்ளுவம்

  மனிதர்கள் அனைவரும் ஒரே குலத்தில் இருந்து பிறந்தவர்கள் ஒரு தாய் தந்தையரின் வழித்தோன்றல்கள் குர்ஆன் – பைபிள்

   உலகம் ஒரு குடும்பம் வசுதைவ குடும்பகம் என்ற கோட்பாடுகளைச் செயல்படுத்தினால் மனித நேயம் உருவாகும்.

Sunday, October 4, 2015

ஹாங்காங் டைம்.

குறிப்பு: ஹாங்காங் டைம்...
-----------------------------
1992 - ம் ஆண்டில்
ஹாங்காங்கில் உள்ள
திரி ஸ்டார் உணவு விடுதிக்கு (இந்தியன் ஸ்டைல்)
அஸிஸ்டெண்ட் குக்காக பணி எடுக்கச் சென்றேன்.
மலேசியாவில் இருக்கிற
என் தம்பி இதற்கு ஆவணங்கள் செய்து
வழியை சுழுவாக்கி,
நம்பிக்கை தந்து வழி அனுப்பிவைத்தான்!

'பனானா லீஃப்ஸ் கறி ஹவூஸ்' என்கிற அந்த ஹோட்டல்
சீன நடிகர் ஒருவருக்கு சொந்தமானது!
அங்கே பத்துக்கும் மேற்பட்ட
இந்தியர்கள் பணியில் இருந்தார்கள்!
பெரும்பாலும் இவர்கள் மலேசியா வாழ் தமிழர்கள்!

புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (10 )

உலகில் வாழ பொருள் தேவை
மறு உலகிற்கு அருள் தேவை.

உடல், பொருள், உயிர் அனைத்தையும்
இழந்து, இந்த அருள் ஒன்றை மட்டும் பெற
துடிப்பவர்களே ஹாஜிகள். இது ஒன்றையே தங்கள் வாழ்வின் லட்சியமாக கொண்டு
வாழ்பவர்கள் அவர்கள்.பூர்ணமாக வாழ்வை ரசித்தவா்களுக்கு, ஹஜ் பயணம் கூட ஒரு மரண பயணத்திற்கான பயிற்ச்சி தான்... அவர்கள் அந்த பயணத்திற்காக தேர்வு செய்யும் உடைகளே, அந்த எண்ணத்தை பறைசாற்றுகிறது எனலாம். அந்த நாட்களில் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை எவருக்கும் இருந்ததில்லை. தங்கள் வாழ்ககையின் கடைசி பயணமாகவே, ஹாஜிகள் இந்த பயணத்தை கருதுகிறார்கள்.....

புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (9)

மக்காவுக்கு வந்து சேரும் இந்திய ஹாஜிகளை கவனிக்கும் பொறுப்பு சவூதி அரசால் அங்கீகரிக்கப்பட்ட, பித்தியேக ஏஜன்ஸிகளையே சேரும். இந்திய ஹஜ் குழு வோ அல்லது தமிழ்நாடு ஹஜ் குழுவோ அவர்களின் உரிமைகளில் தலையிட முடியாது. அங்குள்ள சட்டங்கள் மிகவும் கடுமையானவை. இந்திய தூதரக அதிகாரி கள், சிலவற்றில் பாராமுகமாக நடந்து கொள் வார்கள். ஆனால் இப்போது நிலை அவ்வாறு இல்லை.

இந்திய ஹாஜிகளின் எந்த தேவைகளையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்காக அல்லும் பகலும் சேவை செய்வது ஒன்றையே தன் முழு குறிக்கோளாகக் கொண்டு, மிகச் சிறந்த பணியை ஆற்றி வருபவர் தமிழகத்தை சார்ந்த அதிலும் குறிப்பாக, குமரி மாவட்டத்தை சார்ந்த துடிப்பான இளம் IFS அதிகாரி, திரு.முபாரக் IFS அவர்கள். முபாரக் அவர்கள், இந்திய கான்சல் ஜெனரலாக - ஜித்தாவில் பணியாற்றி வருகிறார்.

இது ஒரு ஓவியம் என்றால் நம்புவீர்களா...???


இது ஒரு ஓவியம் என்றால் நம்புவீர்களா...??? இது ‪#‎நான்_வரைந்ததல்ல‬ சமீபத்தில் என் நட்பில் இணைந்த சகோதரர்
                                                                    Arafath Aik
Arafath Aik வின் ஓவியம். அவர் ஒரு பள்ளியின் ஓவிய ஆசிரியர். இது போன்ற ஓவியங்கள் வரைய தனக்கு 18-20 மணி நேரங்கள் ஆகும் என்கிறார்.

உண்மையில் இலக்கில்லாமல் வரைந்து கொண்டிருந்த நான் அவரை பார்த்து தான் ரியாலிஸ்டிக் ஓவியங்கள் வரைய வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது. எனக்கு அவர் அளவுக்கு பர்ஃபெக்‌ஷன் வரவில்லை. என்னால் இது போன்ற ஓவியங்களுக்கு 7-8 மணி நேரங்கள் மட்டுமே செலவளிக்க முடிகிறது...!

அவரின் மற்ற ஓவியங்கள் கமெண்ட்டில் தருகிறேன். பார்த்தால் பிரமித்து போவீர்கள். ஓவிய ரசனை உள்ளவர்கள் அவரை நட்பில் இணைத்துக் கொண்டு மனம்திறந்து பாராட்டுங்கள் சகோஸ்...!



                                       Suhaina Mazhar

Saturday, October 3, 2015

பண்டாரிகளின் மேலான கவனத்திற்கு ...

 J Banu Haroon
அவ்வப்போது சின்ன சின்ன தேவைகளுக்கும் அருமையான சமையல் ஆட்கள் (பண்டாரிகள் )கிடைப்பார்கள் .பெண்களுக்கான கஷ்டமான வேலைகள் இங்கெல்லாம் குறைவே !..

அக்கடாவென்று அவர்கள் கொடுத்த லிஸ்டில் உள்ள சாமான்களை வாங்கிப்போட்டுவிட்டு ...குளித்து ரெடியாகி விடலாம் ! நிம்மதியாக சாப்பிடுவதற்கும் ,விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதற்கும் ....நிறைய டைம் எடுத்துக்கொள்ளலாம் .

பரோட்டா ,கோழி சம்மா செய்வதற்கு கூப்பிட்டனுப்பிய பண்டாரி கொடுத்த லிஸ்டில் 10பாட்டில் ஸ்பிரின் ட் ,அல்லது செவென் அப் என்றிருந்தது .
'எதுக்கு தம்பி இதெல்லாம் ?..'
'வாங்கி வைங்க ...அது இல்லாட்டி நமக்கு சரிப்படாது !...'
'ஒ !..எத்தனை பேர் கையாள் வருவாங்க ?'..என்றேன் .
'மொத்தம் அஞ்சு பேர் ! '...சொல்லிவிட்டு போய்விட்டார் .

Friday, October 2, 2015

புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (8)

 Vavar F Habibullah

இந்த முறை, இந்தியாவில் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற் கொண்டனர். இந்திய ஹஜ் கமிட்டி இவர்களை தேர்வு செய்து அனுப்புகிறது என்றாலும், பணக்கார ஹாஜிகளுக்கென்றே செயல்படும் சில ஹஜ் டிராவல் நிறுவனங்கள் இந்த சேவையை முழு அளவில் வியாபார நோக்கிலேயே நடத்து கின்றன. ஹாஜிகள் கொடுக்கும் பணத்தை வைத்தே அவரகளின் ஹஜ் CATEGORY நிரணயம் செய்யப்படுகிறது. A கிளாசில் தொடங்கி, E கிளாஸ் வரை தரவாரியாக ஹாஜிகள் பாகுபடுத்த படுகின்றனர். இதை சவூதி அரசு வகைப் படுத்துகிறது.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, இந்திய ஹஜ் கமிட்டியின் ஒரு கிளையாகவே செயல் படுகிறது. தமிழக ஹாஜிகளை தேர்வு செய்து அவர்களை விமானநிலையம் அழைத்து வந்து வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சிகளை மக்கள் வியக்கும் வண்ணம் நிகழ்த்தி அந்த படங்களை பத்திரிகைகளில் வெளியிட்டு மகிழ்வதோடு அதன் திருப்பணி நிறைவு பெறுகிறது.

மாட்டுக் கறியும் மட்டோக்கியும் பின்னே ஞானும் ...!

 ராஜா வாவுபிள்ளை

உகாண்டாவுக்கு வந்த புதிதில் 1980 ல் கம்பாலாவில் இந்திய தூதரகதில் பணிபுரிந்த இந்தியர்களை தவிர்த்து இங்கே இருந்த இந்தியர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

இந்தியர்கள் அனைவரும் இங்குள்ள குஜராத்தி கோவிலில் விடுமுறை நாளான ஞாயிறன்று கூடுவது வழக்கம். மதியம் 'தாழி' எனும் குஜராத்தி மரக்கறி சாப்பாடும் பரிமாறப்படும். 10 அல்லது 15 இந்தியர்கள் ஒற்றுமையாய் கூடி அந்த வாரத்தில் நடந்த காரண காரியங்களை பகிர்ந்து எந்தவிதமான பாகுபாடும் இல்லாமலே பழக்கவழக்கங்கள் இருந்து வந்தது.

ஹோட்டல்கள் இருந்தாலும் இந்திய உணவு விடுதிகள் எதுவும் இல்லாததால் குஜராத்தி கோவில் அப்போது அங்கு வாழ்ந்த இந்தியர்களுக்கு நல்ல ஒரு கூடுமிடமாக வே இருந்தது.

புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (7)


Vavar F Habibullah
கேரளாவை சார்ந்த ஒரு பெரிய பிஸினஸ் மேன், உம்ரா மற்றும் ஹஜ் விசாவில் மக்கா வந்தார். சாதாரண மெடிக்கல் செக்கப்புக்காக என்னை பார்க்க மருத்துவமனை வந்தார். அவர் சொன்னார்...,

"டாக்டர் சார்... நான் ஒரு டயபடிஸ் பேஷியண்ட், ஆனால் அதிசயம் பாருங்கோ, மக்காவில் கால் வைத்ததுமே டயபடிஸ் இருந்த இடம் தெரியாம மறைந்து போய் விடுகிறது."

பேசிக் கொண்டிருந்தவர், திடீரென்று வயிற் றை பிடித்துக் கொண்டு அலறினார். அது ஒரு 'அக்யூட் அப்டாமன்' கேஸ் போல் தோன்றவே உடனடியாக ICU வில் அட்மிட் பண்ணி, தேவையான சிகிச்சையைத் தொடர்ந்தோம்.
சற்று 'ஸ்டபிலைஸ்' ஆன பிறகு அல்- நூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தேன்.
அவருடன் தங்கி இருந்து, அவரை கவனிக்க எவரும் இல்லை. வந்தவர்கள் அவர்கள் பணிகளை கவனிக்க சென்று விட்டனர். அவர் தந்த தகவலின் பேரில், அவருக்கு தெரிந்த உறவினர் ஒருவரை, ரியாதில் இருந்து வரவ ழைக்க ஏற்பாடு செய்தோம். இரவில் வெகு நேரம் கழித்து வந்த அவரை, மருத்துவமனை யில் நோயாளியுடன் இருந்து, அவரை கவனிக்க ஏற்பாடுகள் செய்து கொடுத்தோம்.

தாத்ரி சம்பவம் எதிரொலி: கிராமத்தை விட்டு வெளியேற தயாராகும் முஸ்லிம்கள்

ஆர்.ஷபிமுன்னா

இக்லாக்கின் உறவினர்கள் | படம்: பிடிஐ

பக்ரீத்தில் பசு மாடு பலி கொடுத்ததாக இக்லாக் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என இக்லாக்கின் தாய் அஸ்கரி கோரியுள்ளார். இத்துடன் அங்குள்ள முஸ்லிம் குடும்பங்கள் அக்கிராமத்தை விட்டு வெளியேற ஆலோசித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

டெல்லியில் இருந்து சுமார் 56 கி.மீ தொலைவில் உள்ள பிசோதா கிராமம், உபி மாநிலம் தாத்ரி தாலுக்காவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட பக்ரீத் பண்டிகைக்காக பசு மாடு பலி கொடுத்து அதன் இறைச்சியை உண்டதாக கிளம்பிய வதந்தியில், 52 வயது இக்லாக் அடித்துக் கொல்லப்பட்டார்.

புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (6)

 Vavar F Habibullah
மக்கா நகரில், நான் அறியாத இடங்கள் எதுவும் இல்லை. என்னை போலவே மக்கா நகரின் தொன்மையை பற்றி, வரலாறு பற்றி அறிந்து கொள்ள ஆவல் கொண்டவர்கள் மிகவும் அதிகம். ஆனால் வரலாற்று சின்னங்கள் பல அழிக்கப் பட்டு விட்டன என்ற முரண்பாடான தகவல்கள் நம்மை அதிர்ச்சி கொள்ள வைக்கின்றன.
ஜியாத் FORTRESS தான் முழுமையாக தகர்க் கப்பட்டு, அங்கே கம்பீரமான மக்கா ராயல் கிளாக் டவர் எழும்பி இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
முதல் கலீபா அபூபக்கர் சித்திக் வாழ்ந்த வீடு தான், ஹில்டன் ஹோட்டலாக உருமாறி விட்டது என்று சொல்கிறார்கள்.

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களுடன் ஒரு நேர் கானல் .. - நேர் கானல் : கிண்ணியா பாயிஸா அலி

'இலக்கிய வழிப் பயணத்தில் இன்னும் தன்னை இளையவளாகத் தான் கருதிக் கொண்டிருக்கின்றார்''

எனதுகவிதைகளில்,யாரும் இலக்கணக் குற்றங்களை தேடிக் கொண்டிருக்கத் தேவையில்லை.
ஏனெனில் !நான் இலக்கண ஏடுகளை எட்டிப் பார்த்ததுமில்லை தமிழ் மொழியை கற்றவளும் அல்ல. அதனால்தலைக்கனங் கொண்டு மார் தட்டிப் பேசுவதுமில்லைஎன்று கூறுகின்றார்

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

அவர்களுடன் ஒரு நேர் கானல் ..


நேர் கானல் : கிண்ணியா பாயிஸா அலி


....................................................................................................... தென்றலே கவிபாடும் தென்கிழக்கு மண்ணின் கிராமம் ஒன்றின் தெருக்கோடியில் நின்று கொண்டு கூழான் கல்லொன்றை கூலிக்கெடுத்தாவது விழிகளை மூடிக் கொண்டு வீசினால் விர்ரென்று விரைந்தேகும் அக் கல் விழும் இடம் ஒரு கவிஞனின் வீடாக இருக்கும் இல்லாவிட்டால் ஒரு எழுத்தாளனின் தலையாக இருக்கும்.
கன்னித் தமிழின் கழுத்துக்கு கனகமணி மாலையிட்டு விண்ணுலகம் விரைந்திட்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்த அடிகளார்.அவர் அன்புச் சீடன் ஆசுகவி புலவர்மணி ஆ.மூ.சரிபுதீன் போன்ற ஆன்றோர்களும் ;வாடிநிற்கும் பயிராய்,வாழ்வோடிந்த உயிராய்,வரண்டு போன நதியாய் கிடந்த ஈழத்து இலக்கியத்தை வளப்படுத்தி வாகை சூடிய சான்றோர்களும் பிறந்து சரித்திரம் படைத்த மண் தென் கிழக்கு மண்.அம் மண்ணில்
வைரக்கற்களோடு வைரக்கல்லாக தன்னையும் பதித்துக் கொண்ட பெண் படைப்பாளி தான்இந்தஅன்பான

சகோதரி கலைமகள் ஹிதாயா றிஸ்வி..ஆம்

Thursday, October 1, 2015

கள்ளம்கபட மற்ற மனதாக குழந்தைகள் போல நடந்து கொள்வார்கள்.

 சரியான இளிச்சவாயெனா இருக்கியேப்பா.!?

நாம் அன்றாடம் எத்தனையோ வித்தியாசமான குணமுடைய நபர்களை சந்திக்கிறோம்.அதில் ஒன்றுமறியாத வெகுளித்தனமான வெளுத்ததெல்லாம் பாலென நினைக்கும் நபர்களும் அடங்கும். இப்படிப்பட்ட வெகுளித்தனமான நபர்கள் எதையும் யோசிக்காமல் யாரையும் எளிதில் நம்பி விடுவார்கள்.எது போலி எது நிஜம் என்று தெரியாமல் ஏமாந்தும் போய்விடுவார்கள். புறத்தோற்றத்தை வைத்து மரியாதைக்குரியவர்கள் என நினைத்து விடுவார்கள்.கள்ளம்கபட மற்ற மனதாக குழந்தைகள் போல நடந்து கொள்வார்கள். இத்தகைய ஒன்றும் அறியாத அப்பாவிகளுக்கு சமுதாயம் சூட்டியுள்ள பட்டம்தான் இழிச்சவாயென் என்பதாகும்.

புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (5)

Vavar F Habibullah
 தற்போது மக்காவில் நடந்த உயிரிழப்பு பற்றி பல்வேறு செய்திகள் உலா வருகின்றன.
சாதாரணமாக இந்த உயிரிழப்புகள் மக்காவில், மதினாவில், அரபாத்தில், அல்லது முஸ்தலிபா போன்ற வணக்கஸ்தலங்களில், நிகழ்ந்ததாக வரலாறு இல்லை.
இந்த முறைமட்டும், கிரேன் விழுந்து (human error) இறந்தவர்கள் தவிர; ஒருமுறை ஈரானிய தீவிரவாதிகளாலும், மக்காவில் உயிர்ப்பலி நிகழ்நததுண்டு. வன்முறை சம்பவங்கள் மசூதிகளிலும், சர்ச்சுகளிலும், யூத திருத்தலங்களிலும் நடைபெறுவது என்பது புதிய செய்தி அல்ல. யூத, முஸ்லிம், மற்றும் கிருத்துவர்களுக்கும் சொந்தமான ஜெருசலேமிலும் வன்முறை வெடிப்பது என்பது மிகவும் சகஜமான ஒன்று தான். கடவுளின் சந்நிதானங்களிலேயே, உயிர்ப்பலிகளும் தொய்வின்றி தொடர்கின்றன.மக்காவில் நிகழ்ந்த உயிரிழப்புக்கு காரணங்கள் வேறு...

அச்சே தின் ஆயேகா?


நல்ல காலம் பொறக்குது..!
நல்ல காலம் பொறக்குது..!

“அச்சே தின் ஆயேகா”
“அச்சே தின் ஆயேகா”

குடுகுடுப்பைக் காரராய்
தாடி வைத்த மோடிஜீ
நாடி ஜோதிட
நற்குறி சொன்னார்.

அய்யகோ….!
“அச்சே தின்” அல்ல
அச்சம் தினம் அல்லவா
ஆகி விட்டது?

என் வீட்டு அடுக்களையில்
என்னவெலாம் சமைக்க வேண்டும்?