Showing posts with label தர்மம். Show all posts
Showing posts with label தர்மம். Show all posts

Sunday, October 18, 2015

‎இப்போது‬ அவர் யோசிக்க ஆரம்பித்திருந்தார்.

ஒரு வணிக நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது தமது நிறுவனத்தின் மூலமாகச் செய்யும் சேவைகளைக்குறித்து சொல்லிக்கொண்டிருந்தார். சில கோவில்களின் கட்டிடப் பணிகளுக்கு கணிசமாக பண உதவி செய்ததாகவும் கும்பாபிஷேகம் மற்றும் அன்னதானத்திற்கு தர்மம் செய்ததாகவும் இறைவன் தாம் செய்யும் இந்த தானதர்மங்களுக்குப் பகரமாக வணிகத்தில் செழிப்பையும் குடும்பத்தில் மன நிம்மதியையும் தந்துவிட்டால் போதுமானது என்று பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டிருந்தார்.

Wednesday, December 4, 2013

அடையாள அட்டை

தர்வேஷ் முஹம்மது ( பாலஸ்தீனக் கவிஞர் )
தமிழில் : டாக்டர் அஹமது சுபைர் , பேராசிரியர் , அரபித்துறை , புதுக் கல்லூரி , சென்னை .
****************

பதிவு செய் ! எழுதிக் கொள் !
நான் ஒரு அரபி
எனது அடையாள அட்டை எண் 786
எனக்கு எட்டுக் குழந்தைகள் !
இதையும் பதிவு செய் -
கோடை கழிந்தால் ஒன்பதாவது
உனக்கு என்மீது கோபமா ?

பதிவு செய் ! எழுதிக்கொள் !
நான் ஒரு அரபி
நான் என் தோழர்களுடன்
கல் குவாரியில் வேலை செய்கிறேன்
எனது எட்டுக் குழந்தைகளுக்காக !

Friday, August 10, 2012

வெளிப்படையாக நன்மையாக இருப்பினும் அது வீணாவது இறைவன் பார்வையில்

Vain Despite Apparently Good
வெளிப்படையாக நன்மையாக இருப்பினும் அது வீணாவது இறைவன் பார்வையில்

பெருமைக்கு ஆசைப்பட்டு , ஆடம்பரத்திற்காக செயல்பட்டு விளம்பரதிற்க்காக தர்மம் ,சேவை, ஜகாத் ,உதவுதல் இவைகள் அனைத்தும் செய்து அதனை இறைவனது
நன்மையான  கணக்கில் சேர்க்க முடியாது மாறாக  அவைகள் தீமையாகி தண்டனையும் பெற்றுத் தரலாம். காரணம் அவைகள் அனைத்தும் இறைவனது அருள் நாடி
செய்யப்பட்டவையல்ல பெருமைக்காக செய்த அனைத்து நன்மைகளும் அதனால் விளைந்த ஆதாயங்களும் இங்கேயே பலவகையில் பெற்றிருக்க இறைவன் அருள் கிடைக்காமல் போய்விடும்.