Sunday, October 25, 2015

தேவைக்கு பொருள் தேடுவது

"நீ ஏழையாக பிறந்தால் அது உன் தவறில்லை, ஏழையாக மறைந்தால் அது உன் தவறு" - பில் கேட்ஸ்

அடிக்கடி வலைதளங்களில் பார்க்கும் வாசகம்.. இது சரியா? பணத்தையே பிரதான குறிக்கோலாக கொண்டு ஒருவன் வாழலாமா?

அவன் செல்வத்தைத் திரட்டி, அதைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என அவன் எண்ணிக்கொன்டிருக்கிறான். அவ்வாறன்று, நிச்சயமாக அவன் "ஹூதமா" வில் வீசப்படுவான். "ஹூதமா" என்றால் என்னவென உமக்கு அறிவித்தது எது.? (அது) உள்ளங்களைச் சென்றடையும் மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பாகும். (அல்-குர்ஆன் 104:2-7)

அப்போது இயேசு சுற்றிலும் பார்த்து, “பணக்காரர்கள் கடவுளுடைய அரசாங்கத்திற்குள் போவது எவ்வளவு கடினம்!” என்று சீடர்களிடம் சொன்னார். இதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இயேசு மீண்டும் அவர்களிடம், “பிள்ளைகளே, கடவுளுடைய அரசாங்கத்திற்குள் நுழைவது எவ்வளவு கடினம்! கடவுளுடைய அரசாங்கத்திற்குள் ஒரு செல்வந்தன் நுழைவதைவிட ஊசியின் காதுக்குள் ஓர் ஒட்டகம் நுழைவது சுலபம்” என்றார். (மாற்கு 10:23-25)

நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க் காம போகத்துக்காக அநியாயஞ்செய்து பொருட்களை சேர்க்க விரும்புகிறார்கள். என்னால் இன்று இன்ன லாபம் அடையப் பட்டது, இன்ன திறமை இனி எய்துவேன், என்னிடம் இந்த செல்வம் உள்ளது, இனி இன்ன பொருளை பெறுவேன். “இது போன்ற பகைவரைக் கொன்று விட்டேன்; இனி மற்றவர்களைக் கொல்வேன்; நான் ஆள்வோன்; நான் போகி; நான் சித்தன்; நான் பலவான்; நான் சுக புருஷன்.” - (கீதை 16 :12-14.)

கருத்து :
தேவைக்கு பொருள் தேடுவது கூடாது என்பது இதன் பொருளல்ல. கிடைக்கும் செல்வதை கொண்டு விரைவில் நன்மை செய்து விடவேண்டும், நன்மைகளுக்கு செலவிடாமல் சேர்த்து வைத்து கொள்ளுதல், தீமை செய்து அதன் மூலம் சம்பாதிப்பதோ, பொருளை முறையற்ற அல்லது சுக போகங்களுக்கு செலவு செய்வத்தோ வீண் விரையம் செய்வத்தோ கூடாது என்பதுதான் அனைத்து வேதங்களின் கட்டளை.


Ref :
http://suvanathendral.com/portal/?p=476
http://bhagavadgitatamilscriptandaudio.blogspot.hk/…/16.html
http://www.sangatham.com/bhagavad_gita/gita-chapter-16
http://www.christianbiblereference.org/faq_money.htm
http://www.tamil-bible.com/lookup.php…

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான்

No comments: