Tuesday, February 3, 2015

”உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்ட” / ரபீக்

”உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்ட”
----------------------------------------------------------------

”உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்ட” இப்படியொரு சொலவடை நம்ம ஊருப்பக்கம் பேசிக்கிட்டுருப்பத கேட்டிருப்போமுல்ல, இப்ப அதை அமெரிக்காவும், அதன் பேச்சைக் கேட்ட சவூதி, வெனிசூலா போன்ற எண்ணெய் ஏற்றுமதி நாடுகளெல்லாம் சொல்லிப் புலம்பப் போறத வெகு சீக்க்ரம் கேட்கப்போறோம்...

இப்போது, ஒருவழியாக உலகின் மிகப் பெரிய எண்ணெய் இறக்குமதி நாடான சீனாவை தம் பக்கம் சாய்த்து வெற்றி கண்டிருக்கிறது ரஷ்யா. மேற்குலகம் ரஷ்யாவை புறந்தள்ளி அந்நியப்படுத்தியும், பொருளாதாரத்தில் நசிக்கியும் சதிவேலை நடத்திக் கொண்டிருந்த வேளையில், சீனாவுடனான உறவினை பலப்படுத்தி அடக்க விலையில் எண்ணெய் விற்று தமது எதிர்காலத்தின் திட்டத்திற்கு வலுசேர்த்துக் கொண்டிருந்தது ரஷ்யா.
2014ம் ஆண்டில் சீனாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில், 36 சதவீதத்தினை ரஷ்யா கொடுத்திருக்கிறது . இதனால் உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவிற்கு 8% இழப்பினையும், வெனிசூலாவிற்கு 11% இழப்பினையும் பரிசாகக் கொடுத்தது சீனா.
இச்சூழ்நிலையில்தான் ரஷ்யாவின் வயிற்றிலடிப்பதற்காக, மேற்சொன்ன எண்ணெய் ஏற்றுமதி நாடுகளைப் பணிய வைத்து விலை குறைப்பு நாடகத்தை அமெரிக்கா அரங்கேற்றி வந்தது. (அமெரிக்கா செய்த இந்த சூழ்ச்சிகளுக்கு / இந்த நாடகத்திற்கு நம்நாட்டில் வேறு வண்ணம் பூசப்பட்டது நகையான ஒன்று.)

ஆனால் ’ஊரு இரண்டுபட்டல் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பது போல உக்ரைன் உடனான உரசல் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் போன்ற பின்னடைவுகளை மிக சாதுர்யமாக கையாண்டு சீனாவுக்கும் ரஷ்யாவிற்குமிடையிலான இயற்கை எரிவாயு திட்டத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு ஒப்பந்தத்தை 2014ம் ஆண்டு மே மாதாம் சீனாவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தத்தின் படி 2018ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஆண்டொன்றுக்கு 38 பில்லியன் கன மீட்டர் அளவிலான இயற்கை எரிவாயுவை சீனாவிற்கு ரஷ்யா ஏற்றுமதி செய்யும். பிறகு இது படிப்படியாக ஆண்டொன்றுக்கு 60 பில்லியன் கன மீட்டர் அளவிற்கு இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யப்படும். இதில் சிறப்பம்சம் என்னவெனில், ஐரோப்பா கொடுத்தும் வாங்கும் விலையை விட ‘தரை’ ரேட்டுக்கு சீனா பேரம் பேசி முடித்திருக்கிறது. அதாவது ஒரு மில்லியன் BTu அளவிலான எரிவாயு 9 முதல் 10 அமெரிக்க டாலருக்கு முடிவு செய்திருக்கிறது. பக்கத்திலிருக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கே கூட இந்த அளவுக்கு கொடுத்ததே இல்லையாம்.

ரஷ்ய நிறுவனங்களுக்கு உதவும் பொருட்டு, சீனா முன்பணம் கொடுத்து இறக்குமதி செய்கிறது. அதுமாத்திரமல்லாமல், சில நிறுவனங்களுக்கு சீனா தன் வங்கி மூலம் கடனுதவி செய்கிறது.

இதன் காரணமாக மிகவும் குறைந்த விலைக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு பரிவத்தனைக்கு இரு வல்லரசுகளும் பரஸ்பரம் ஒத்துழைக்கின்றது. இன்னும் ஒருபடி மேலே போய் சில பெரிய நிறுவனங்களில் கனிசமான பங்குகளை வாங்கி வைத்திருக்கிறது.

இதன் மூலம் மேற்கின் பொருளாதாரத்தடை விலக்கக் கோரல் மற்றும் சர்வதேச நிதியங்களை நாடவேண்டியதில்லை என்ற புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது சீனா.
இனியும் அமெரிக்காவின் யோசனையக் கேட்பதா மறுப்பதா என்று OPEC நாடுகள் குழப்பத்திலிருப்பது தெளிவாய் கேட்கிறது.

உலகம் இப்படிப் போய்க்கொண்டிருக்கையில், நாம் Selfie படமெடுத்துக்கொண்டு ‘உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவதில்” Busy ஆக இருக்கிறோம்.

                                                          ஆக்கம் Rafeeq Friend

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails