Wednesday, February 25, 2015

உதவி

உதவி:

மனிதர்களிடையே உதவும் மனப்பான்மை குறைந்து விட்டதா.

ஆம் இன்று அது கொஞ்சம் குறைந்தே காணப்படுகிறது.
யார் காரணம் கொடுப்பவனா? பெறுபவனா?

என்னை கேட்டால் பெறுபவன் என்று தான் சொல்வேன்.அத்தியாவிசிய தேவை போக இன்று பலர் ஆடம்பரங்களுக்காகவும், பொய்களை சொல்லியும் யாசகம் கேட்கிறார்கள்.
இவர்களின் இச் செயலால் உண்மையான யாசகமும் மறுக்கப்படுகிறது.

கடனை பொறுத்தவரை பலர் அதை திருப்பி செலுத்துவதில்லை.இன்று கடன் வாங்குவோரில் நிறைய பேர் சொத்து வாங்குவதற்க்கும் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவற்குமே பயன் படுத்துகிறார்கள்.

பலரின் இம்மாதியான செயல்களால் சிலரின் உண்மையான தேவைகளும் இருப்பவனால் மறுக்கப்படுகிறது.

கடனோ யாசகமோ பெற்றவன். கொடுத்தவன் கண் முன்னே அந்த பணத்தை அனாவசியமாகவும் ஆடம்பரமாகவும் செலவு செய்யும் போது.கொடுத்தவனுக்கு கோபம் வருவது இயற்கை தானே.

பலரின் தவறால் சிலர் பாதிக்கப்படுவது என்னவோ உண்மை என்றாலும்.உதவும் மனப்பான்மை குறைந்து வருவதற்கு உதவி நாடுவோரே காரணம்.

(கொடுத்து நொந்து போன என் நண்பர் ஒருவர் இன்று என்னிடம் சொல்லி வருத்தப்பட்டதை உங்களிடம் நாசூக்காக பகிர்கிறேன்)

இருப்போர் விலகி இல்லாதோர்க்கு வழி விடுங்கள்.
 *******************
 உதவி (2)

என் நண்பர் ஒருவர் நூற்றுக் கணக்கான ஏழை குடும்பங்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் பணம் உதவி செய்து வருவது வழக்கம்.

இரண்டு மாதங்களுக்கு முன் அதிலிருந்து 30 நபர்களை விலக்கி அதற்கு பதிலாக வேறு 30 நபர்களை சேர்த்தார்.

என்ன காரணம் என கேட்டேன் அதற்கு அவர் அந்த குடும்பங்களில் உள்ள கணவனோ அல்லது மகனோ தினமும் மது அருந்துகிறார்கள்.ஒரு நாள் மது அருந்த குறைந்தது 100 ரூபாய் தேவைப்படும். மாதம் ஒன்றுக்கு 3,000 ரூபாய் ஆகிறது.
நான் கொடுப்பதென்னவோ 1,000.அல்லது 2,000 ரூபாய் தான்.

குடி இருக்கும் இடத்தில் தன் பணம் சேர விருப்பம் இல்லை எனவும் கூறினார்.

எனவே ஒரு குடும்பத்தில் யாராவது குடித்து அந்த குடும்பத்திலேயே தங்கி வந்தால். அவர்களுக்கு உதவுவதை நிறுத்தியதாக கூறினார்.

எனக்கென்னவோ இது சரியென தோன்றுகிறது.
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்.

மேலும் குடி இல்லாத புது 30 குடும்பத்தை தேர்ந்தெடுக்க அவர் மிகவும் சிரமப்பட்டாராம்.குடி அவ்வளவு மேலோங்கி இருக்கிறது.

குடி குடியை கெடுக்கும் என்பது இது தானோ.

குலம் வாழ குடி நிறுத்துங்கள்.
***********************
 உதவி (3)

சிலர் தன் தேவைகளுக்காக அடிக்கடி கடனுதவி கேட்டு பெறுவது வழக்கம்.இவ்வாறு கடன் பெற்றவர் அதை திருப்பி அடைத்து விடுவதும் உண்டு.

ஏதோ ஒரு காரணத்திற்காக கடன் கொடுப்பவர் இன்று முடியாது என கூறினால்.
பல முறை அவரிடம் கடனுதவி பெற்று பலன் அடைந்ததை மறந்து விட்டு இந்த முறை இல்லை என்று கூறியதற்காக அவரை முறைத்து கொண்டு குறை கூறுவது எந்த வகையில் நியாயம்.

இம் மாதிரியான கடன்களும் அதனால் பிரச்சினைகளும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அடிக்கடி நடை பெறுவதுண்டு.

இந்த காலத்தில் வட்டி இல்லா கடன் கொடுப்பவர்கள் மிக மிக அறிது.அதில் இவ்வாரான ஒரு சூழ்நிலையை கடன் பெற்றவர் கடன் கொடுத்தவருக்கு ஏற்படுத்தினால் இனி யாருக்கும் கடனே கொடுக்கக் கூடாது எனும் என்னத்தை தானே ஏற்படுத்தும்.

கடனுதவி பெற்றவர்கள் நன்றியுடன் நடக்காவிட்டாலும்.
கொடுத்தவரை மனம் நோக செய்ய கூடாதல்லவா.

கடன் பெற்றவரின் நன் நடத்தையே.
கடன் கொடுப்போரை மேலும் பலருக்கு கடன் கொடுக்க ஊக்குவிக்கும்.

கடன்கள் முறையானதாக இல்லையெனில் அது அன்பை மட்டும் முறிக்காது அடுத்தவர்க்கு உதவுவதையும் தடுக்கும்.

கடன் என்பது நல்லுதவி
அதை அழித்து விடாதீர்கள்.
***********************
 உதவி (4)

பொதுவாக பண உதவி கேட்பவர்கள் பணம் படைத்த எல்லோரிடமும் கேட்பதில்லை.யார் கொடுப்பார்களே அவர்களையே நாடுவார்கள்.

பணம் படைத்த எல்லோரும் உதவி விடுவதுமில்லை.பணம் கொடுத்து உதவுவது ஒன்றும் சாதாரண விசயமுமில்லை.

பணம் படைத்தவர்கள் பலர் இருப்பார்கள்.
ஆனால் மிக அவசிய தேவைகளுக்காக கூட பலரும் சிலரிடம் பணம் நாடி செல்ல மாட்டார்கள். ஏனெனில் அவர்களிடம் பாடாய் பட்டாலும் பணம் மட்டும் கிட்டாது.

உதவும் மனப்பான்மை எல்லோரிடமும் இருப்பதில்லை.அதற்காக அவசியம் அறியாமல் உதவுபவன் அறிவாளியுமில்லை.

கண்ணியமானவர்க்கு கண்டிப்பாக உதவுங்கள்.

உதவிகள் உரியவர்க்கு போய் சேர வேண்டும்.

உதவா பணம் ஒதவாது.
************************
உதவி (5)

உதவுவோரை விட உதவி நாடுவோரே அதிகம்.

பலரின் தேவைகளை ஒரு சிலர் பூர்த்தி செய்து விட முடியாது.
அவரவர் தேவை அவசரம் அவசியம் கருதியே உதவுவப்பட வேண்டும்.

நாம் கேட்கும் நேரமெல்லாம் அடுத்தவர் உதவ வேண்டும் என எதிர் பார்ப்பது தவறு.

சிலர் எலலாம் இருந்தும் அதாவது நகை சொத்து போன்றவை இருந்தும்.
அதை பயன் படுத்தாமல் கல்யாணம் காது குத்து மற்றும் விஷேசங்களுக்காக அடுத்தவர் உதவியையே நாடுவார்கள்.

கேட்டு பார்ப்போம் வந்த வரை லாபம் தானே என சிலர் அடுத்தவரின் உதவும் தன்மையை தவறாக பயன் படுத்துவதுண்டு.

எனவே உதவுவோரே உதவும் முன் அவரவர் அவசியம் கருதி மட்டுமே உதவுங்கள்.
வெறுமனே விசாரிக்காமல் உதவி விட்டு பின்னர் வருத்தப்பட்டு இனி எவருக்கும் உதவவே கூடாது எனும் நிலைக்கு வராதீர்கள்.

உதவி நாடுவோர் உங்களிடம் எதுவும் இல்லாத நிலையில் அவசரம் மற்றும் அவசியம் கருதி மட்டுமே
அடுத்தவரின் உதவியை நாடுங்கள்.உங்கள் கண்ணியங்களை பேனிக்கொள்ளுங்கள்.

கொடுக்கலும் வாங்கலும் என்றும் தொடர வேண்டுமானால்.

உதவிகள் முறைப்படுத்தப்பட வேண்டும்.

உதவுவோரே உஷாராவீர்.

(உதவி எனும் தலைப்பிலான இந்த பதிவுகள் யாரையும் தனிப்பட் முறையில் குறிப்பிடுவன அல்ல பொதுவான பதிவே)


கட்டுரை ஆக்கம் Jaffarullah Jafar
 அன்புடன் வாழ்த்துகள் ஜபருல்லா ஜபார் அவர்களுக்கு 


 


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails