Tuesday, February 17, 2015

கட்டஞ்சாயாவும் சிகரெட்டும் பின்னே ஞானும்..!! -நிஷா மன்சூர்


கொஞ்சம் ரிலாக்சா நடந்துட்டு வரலாம்னு காதர்பேட்டை பள்ளில மஃரிப் தொழுதுட்டு அப்படியே ராயபுரம் பக்கம் போனேன்.

இன்பாக்ஸ்லதான் இந்த நைஜீரியாக் காரனுங்க தொந்தரவுன்னா இந்த திருப்பூர்லயும் காலுவாளுன்னு கத்திக்கிட்டு அவனுங்களோட ஒரே தொந்தரவாத்தான் இருக்கு.

சரி ஒரு டீ சாப்டலாம்னு பக்கத்துல இருந்த பேக்கரிக்குள்ள நுழைஞ்சேன்.
"மாஷே ஒரு கட்டஞ்சாயா' ந்னு பறஞ்சுட்டு உக்காந்தா ஒரே புகைமூட்டமா இருந்துச்சு,
ஏழுபேர் உக்காந்துருக்கற கடைல ஆறுபேர் கைலயும் சிகரெட் புகைஞ்சுட்டிருந்துச்சு.
நமக்கு இது ஆவாதுன்னு கடைக்கு வெளீல நின்னுட்டு டீயைக் குடிக்கப்போனா
உள்ள தம்மடிச்சுட்டிருந்த ஒரு மகராசன் போனப்பேசிட்டே வெளீல வந்தான்.
ஒரு கெடைல நிக்கறானா கருமம் புடிச்சவன்,
டீயையும் குடுச்சுட்டு
போனையும் பேசிட்டு
சிகரெட்டையும் ஊதிட்டு
இங்கிட்டும் அங்கிட்டும் குதியாட்டம் போடறான்.
ஆனா ஒரு விஷயத்துல மட்டும் தம்பி ரொம்போத் தெளிவா இருந்தான்.
அது,
சிகரெட் புகையை கரெக்ட்டா என்னைப் பாத்து ஊதற விஷயம்தான்.

பாதி டீயைக் குடிச்சுட்டு காசு கொடுக்க வந்தப்ப
அந்த மகராசனும் போனை வெச்சுட்டு காசுகொடுக்க வந்தான்.
அப்போ நான்,
"ஏட்டா எனக்கு ஒரு கட்டஞ்சாயாவோட சேத்து இவரோட சிகரெட்டுக்கும் காசு எடுத்துக்கோங்க.."
என்றேன்.

"சார் சார் ஏன் சார்,
நான் கொடுத்துடறேன் சார்,
நீங்க...." என்று இழுத்தபடியே தயங்கிப் பார்த்த அந்தப்பையனிடம் சொன்னேன்,
"சிகரெட் என்னமோ நீதான் குடிச்ச,
ஆனா எல்லாப்புகையையும் நான்தான் குடிச்சேன்.நியாயமாப் பாத்தா உன் சிகரெட்டுக்கு நான்தான் காசு தரணும் "என்று.

கொஞ்சம் மானஸ்தன் போலிருக்கு,
"சாரி சார்,
எக்ஸ்ட்ரீம்லி சாரி சார்" என்று உண்மையாகவே வருந்தினான்...!!

நிஷா மன்சூர்

No comments: