மனம் மகிழுங்கள்!
46 - அறியாத மனசு - மகிழ்வே பரிசு!
- நூருத்தீன்
- நூருத்தீன்
'மனம் மகிழ வேண்டும் என்று கடந்த நாற்பத்து சொச்சம் வாரங்களாய் என்னென்னவோ படித்து விட்டோம்; உரையாடிக் கொண்டோம். இறுதியில் மனம் என்றால் என்ன; எப்படியிருக்கும் என்ற கேள்வி அப்படியே இருக்கிறது. அதற்கு ரத்தம், சதை, தோல் உண்டா; அதன் உணர்வுகளுக்கு நிறம் உண்டா என்றெல்லாம் யோசித்தால், இல்லை என்று சொல்வதா; தெரியாது என்பதா?
· நாம் மனதால் நினைப்பதை எப்படிக் கவர்ந்து இழுக்கிறோம்?
· நாம் பயப்படுவது எப்படி நம்மை வந்தடைகிறது?
· மனம், ஆழ்மனம் என்பதையெல்லாம் எங்கு காண்பது?
· என் மனம் உற்சாகமாயிருக்கிறது; எனது உடல் ஆரோக்கியமாய் இருக்கிறது என்று நம்பும்போது நம்மிடம் ஏற்படும் மாற்றங்கள் எப்படி நிகழ்கின்றன? அதனுடைய பலனை எப்படி விவரிப்பது?
· நம்முடைய சிந்தனைகள் எப்படி நம்முடைய வாழக்கையை அமைக்க உதவுகின்றன; அல்லது மாற்றி அமைக்கின்றன?
· CTScan-ஆல் செய்ய இல்லாவிட்டால் போகட்டும். நமது சிந்தனைகளை ஐஃபோனாவது படம்பிடித்துக் காண்பிக்குமா?
இப்படி விடாமல் சுற்றிவளைத்து எப்படிக் கேள்வி கேட்டாலும் தர்க்க ரீதியாய்ப் பார்க்கப் போனால் அதற்கு விளக்கங்கள் குறைவு; அல்லது இல்லை.
ஒரு விஷயத்தை உணர்வதும் அது எப்படிச் செயல்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்வதும் இரு வேறு விஷயங்கள். மனமும் அதன் உணர்வுகளும் எப்படிச் செயல்படுகின்றன என்பது நமக்குத் தெரியாது! அறிவியல் அதைத் தெளிவுபடுத்தவில்லை. சொல்லப்போனால் அறிவியல் எதையுமே தெளிவுபடுத்தாது. அதன் வேலையெல்லாம் ஏதாவது ஒரு காரணம் கண்டுபிடித்துச் சொல்லவேண்டும்; அவ்வளவுதான்!
உள்ளுணர்வு என்கிறார்கள்; மனதிற்குக் காந்தசக்தி உண்டு, ஈர்ப்பு விசை இருக்கிறது என்கிறார்கள்.. இதையெல்லாம் ஏதோ ஒருவிதமாய்ப் பொத்தாம் பொதுவாய் உணர்ந்து கொள்கிறோம்; மண்டையையும் ஆட்டிக் கொள்கிறோமே தவிர அவற்றையெல்லாம் எப்படிப் புரிந்து கொள்வது?