இறைவனிடம் கை ஏந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவது இல்லை
பொறுமையுடன் கேட்டு பாருங்கள்
அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை''
''இல்லை என்ற சொல்லும் மனம் இல்லாதவன்
ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன்
இன்னல் பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
எண்ணங்களை இதயங்களை பார்க்கின்றவன்
இறைவனிடம் கை ஏந்துங்கள்.........''
''தேடும் நேயர் நெஞ்சினில் குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
வாடும் இதயம் வளர்வதற்கு வழிவகுப்பவன்
வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்
அலை முழங்கும் கடல் அமைத்து அழுகு பார்ப்பவன்
அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்
தலை வணங்கி கேட்பவருக்கு தந்து மகிழ்பவன்
தரணி யெங்கும் நிறைந்து இருக்கும் மகா வல்லவன்''
'ஆசையுடன் கேட்பவருக்கு அள்ளித்தருபவன்
அள்ளல் துன்பம் துயரங்களை கிள்ளி எறிபவன்
பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
பாவங்களை பார்வையினால் மாய்கின்றவன்
அள்ளல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாவின் பேற் அருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறை அனைத்து சொல்லிக் காட்டுங்கள்
அன்புனோர்க்கு தருக என்று அழுது கேளுங்கள்...
இறைவனிடம் கையெந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.......''
'இறைவனிடம் கை ஏந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவது இல்லை
பொறுமையுடன் கேட்டு பாருங்கள்
அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை''
இறைவனிடம் கை ஏந்துங்கள்.... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத நாகூர் E M ஹனீஃபா அவர்கள் பாடிய பாடல்
பாடல் இயற்றியவர் : கிளியனூர் கவிஜர் சலாம் அவர்கள்.
No comments:
Post a Comment