Friday, February 11, 2011

'லாஇலாஹா இல்லல்லாஹ்' - தனித்தவன், இணையற்றவன்.


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
55:1    الرَّحْمَٰنُ
55:1. அளவற்ற அருளாளன்,
55:2   عَلَّمَ الْقُرْآنَ
55:2. இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.
55:3   خَلَقَ الْإِنسَانَ
55:3. அவனே மனிதனைப் படைத்தான்.
55:4   عَلَّمَهُ الْبَيَانَ
55:4. அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.
55:5   الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ

'லாஇலாஹா இல்லல்லாஹ்' தனித்தவன், இணையற்றவன்.
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
(அல்குர்ஆன் -112:1 சூரத் அல் இக்லாஸ் )

மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; தான், அவனைத் தவிர வேறு நாயனில்லை. அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன்- சூரத்  அல் -பகராஹ்  2:163)

1.சர்வ புகழும் அல்லாஹ்வுக்கே சர்வ உலகங்களையும் (படைத்து) பரிபாலித்து இரட்சிப்பவன் 2.அளவற்ற அருவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். 3.தீர்ப்பு நாளின் எஜமானன். 4.உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; இன்னும் உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். 5.நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக. 6.நீ எவர்களின் மீது அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி(யில் நடத்துவாயாக!) 7.(உனது)  கோபத்திற்குள்ளானவர்களும் வழி தவறியவர்களும் சென்ற வழியல்ல.

'உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்'
   என்ற வசனத்தின் மூலம் இறைவன் தன்னையே வணங்கும்படியும் தன்னிடமே உதவி வேண்டும்படியும் வணக்கத்திற்கு  தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதும் இலாபத்தையோ நஷ்டத்தையோ உண்டாக்கும் சக்தி அவனுக்கே அல்லாமல் வேறு யாருக்கும் இல்லையென்று நம்புவதும் இஸ்லாத்தின் கொள்கையாகும்.

‘(உலகின்) எந்தப் பொருளும் அவனுக்கு ஒப்பானதாய் இல்லை., அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கிறான்’ (42:11)

(நபியே!) என்அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவேஇருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால்விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னையேநம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
(அல்குர்ஆன் 2: 186)







No comments: