Vain Despite Apparently Good
வெளிப்படையாக நன்மையாக இருப்பினும் அது வீணாவது இறைவன் பார்வையில்
பெருமைக்கு ஆசைப்பட்டு , ஆடம்பரத்திற்காக செயல்பட்டு விளம்பரதிற்க்காக
தர்மம் ,சேவை, ஜகாத் ,உதவுதல் இவைகள் அனைத்தும் செய்து அதனை இறைவனது நன்மையான கணக்கில் சேர்க்க முடியாது மாறாக அவைகள் தீமையாகி தண்டனையும் பெற்றுத் தரலாம். காரணம் அவைகள் அனைத்தும் இறைவனது அருள் நாடி
செய்யப்பட்டவையல்ல பெருமைக்காக செய்த அனைத்து நன்மைகளும் அதனால் விளைந்த
ஆதாயங்களும் இங்கேயே பலவகையில் பெற்றிருக்க இறைவன் அருள் கிடைக்காமல்
போய்விடும்.