உலகில் பலர் இஸ்லாத்தில் இணைந்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாத்தின் அருமையான தத்துவம் அவர்களை இஸ்லாத்தில் இணைய வைக்கின்றது.
இஸ்லாம் வளர்கின்றது . உண்மைதான். வெறும் வளர்ச்சி மட்டும் போதாது . கடந்த காலத்தில் இஸ்லாம் ஸ்பெயினில் காணாத வளர்ச்சியா!
கி.பி 712 லிருந்து கி.பி 1492 வரை ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி. 780 ஆண்டுகள் அந்த மண்ணில் நீதி மிக்கதொரு ஆட்சி நிலைத்திருந்தது.
இஸ்லாமிய ஆட்சியில் இஸ்பெயினில் 780 ஆண்டுகள் இருந்தன! இப்பொழுது மாறிப்போனது! வளர்ச்சியுடன் அறிவையும் பயன்படுத்தக் கூ டிய ஆற்றலும் பெற்றிருக்க வேண்டும்

( "ஒரு முஸ்லிம் என்பவன் மார்க்கத்தில் மட்டுமே சிறந்தவனாக இருக்க வேண்டுமா? உலக
அரங்கில் முன்னுக்கு நிற்பவனாக அவன் இருக்கக் கூடாதா?
ஏன்?
உலக அரங்கில் பல மதத்தவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுள் முஸ்லிம்களின்
சாதனைகள் என்ன? எத்தனை புதிய கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறார்கள்.
எத்தனை பேர் ஆய்வாளர்களாக இருக்கிறார்கள்? எத்தனை பேர் அறிவியல்,
பொருளாதாரம், விண்வெளி ஆராச்சி போன்ற பல துறைகளிலும் நோபல் பரிசுகளைப்
பெற்றவர்களாக இருக்கிறார்கள் அல்லது பெறுகின்ற தகுதியுடையவர்களாக
இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எந்தெந்த நாடுகளில் அதிகம் இருக்கிறார்கள்.
உலக அரங்கில் ஒரு முஸ்லிமின் முகம் எது?")
உலகில் ஒரு மதிப்பீட்டின்படி 1.476.233.470 முஸ்லிம்கள் உள்ளனர்
ஆசியாவில் ஒரு பில்லியன், ஆப்பிரிக்காவில் 400 மில்லியன்,
அமெரிக்க, ஐரோப்பாவில் 44 மில்லியன் மற்றும் ஆறு மில்லியன்.
நம்மைப் போன்ற முஸ்லிம்கள் விநோதமாக ,அதிசியமாக மற்றும் அதிர்ச்சியுடனும் பார்க்கும் பார்வை!>>>
ஏன் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா போன்ற முஸ்லீம் நாடுகள் மட்டுமே மேற்கு நாட்டு கிரிஸ்துவர்களால் தாக்கப்பட்டு வருகின்றன என்பதனை நினைத்து. இது ஒன்றும் அதிசியமான செய்தி அல்ல.
இஸ்லாத்தினை வளர விடாமல் பல்லாண்டுகளாக தொடந்து வந்த முயற்சி இப்பொழுதும் தொடர்கின்றது.
இஸ்லாத்தினை வளர விடாமல் தடுப்பது புனிதப் போராகவே கிரிஸ்துவர்களால் கருதப்படுகின்றது .
பிறைக்கும் சிலுவைக்கும்(wars between Christians and Muslims ... Crescent and the Cross,) நடந்த சரித்திரப்போரில்இதனையும் கிரிஸ்துவர்கள் இணைத்து விட்டார்கள் அதற்க்கு முத்தாய்ப்பு வைத்தது போல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அதை சுற்றி வளைத்து ஒரு சிலுவை போர் என அத்தாட்சி கொடுத்து விட்டார்.
. முஸ்லீம் நாடுகள் பெரும்பாலும் உயிர்வாழ மேற்கு நாடுகளை சார்ந்து இருக்கும் நிலை.
