Monday, March 13, 2023

கடமைகளும் பொறுப்பும் உரிமைகளும்!!


 #கடமைகளும் பொறுப்பும் உரிமைகளும்!!


#வழக்கம் போல ஒரு கதை!!


*அப்பா, என் கல்லூரியில் என்னோடு படிக்கும் பெரும்பாலானவர்கள் காரில்தான் வருகிறார்கள்..எனக்கு சங்கடமாக இருக்கிறது..உடனே எனக்கு ஒரு கார் வேணும்..


*அப்படியா, நீ மனதில் நினைத்திருக்கும் காரின் விலை என்ன..?


*அது,ஐந்து லட்சத்திலிருந்து பதினைந்து லட்சம் வரை இருக்கிறது..எனக்கு ஐந்து லட்சத்தில் வாங்கி கொடுங்கள் போதும்..


**சரி,ஐந்து லட்சத்திற்கான காசோலையை இப்பவே கொடுக்கிறேன்..ஆனால் ஒரே ஒரு நிபந்தனை..Promise??


*Yes, Promise..

                 என்ன நிபந்தனை


#நான் கொடுக்கும் ஐந்து லட்சத்தை உன் இஷ்டப்படி முதலீடு செய்ய வேண்டும்..அதில் வரும் லாபத்தை சேர்த்து வைத்து கார் வாங்கி கொள்..


**மாட்டிக்கிட்டோமே..Promise வேறு பண்ணியாச்சு..

          சரிப்பா கொடுங்கள்..


*அப்பா ஐந்து லட்சத்திற்கான காசோலையை மகனிடம் கொடுத்துவிட்டு அதை மறந்துவிட்டார்(மறந்தது மாதிரி..ஐந்து லட்சமாயிற்றே எப்படி மறக்க முடியும்)


#ஒரு சில மாதங்களுக்கு பிறகு, என்னப்பா , நீ முதலீடு செய்த தொகை எப்படி போயிகிட்டு இருக்கு..லாபம் கீபம் வருகிறதா??!


*நல்ல லாபம் வருதுப்பா..


#சரியாக,ஒரு வருடம் கழித்து..

     மகனிடம், அப்பா கேட்டார் எப்படிப்பா போகுது உன் பிஸினஸ்..

     நல்லா போகுதுப்பா..

     லாபமா நஷ்டமா..

     லாபம்தான் அப்பா

     அப்போ அந்த லாபத்திலே நீ விரும்பிய  கார் ஒன்றை வாங்கியிருக்கலாமே..


#இல்லைப்பா, இப்போ நான் கார் வாங்குவதைவிட என் பிஸினஸிலேயே மேலும் முதலீடு செய்யலாம்னு இருக்கேன்..பிஸினஸ் நல்லா வந்ததிற்கு பிறகு காரின் அவசியம் ஏற்படும்போது வாங்கி கொள்கிறேனே அப்பா..


#இதைத்தான் நான் உன்னிடமிருந்து எதிர்பார்த்தேன்..


      நமக்கான "விருப்பங்கள்" வேறு "தேவைகள்" வேறு ..நம்முடைய விருப்பங்கள் எல்லாம் நமக்கான தேவைகள் என்று சொல்ல முடியாது..நீ சென்ற வருடம் கார் கேட்டது உன் விருப்பமாக இருந்தது (உன்னை பிறரோடு ஒப்பிட்டதால் ஏற்பட்ட விருப்பம்)..ஆனால் இன்று நீயே, உனக்கு இப்போதைக்கு காரின் தேவையைவிட முதலீட்டை அதிகப்படுத்துவதே "விருப்பமும் தேவையுமாக" கலந்து இருக்கிறது..


...ஒன்றை புரிந்து கொள்..நாம் ராஜா மாதிரி வாழ ஆசைப்பட்டால்..உண்மையிலேயே ராஜாவுக்கான தகுதிகள் என்னென்னே என்று யோசித்து அவற்றை வளர்த்துக் கொள்வோமானால் நீ விரும்பியபடியே ராஜாவாகலாம்..


#இப்போ, புரிகிறதுப்பா 

               அடுத்தவர்களை பார்த்து/ஒப்பிட்டு வாழாமல் நாம் ஒரு இலக்கை வைத்து முன்னேற வேண்டும் என்று புரிந்து கொண்டேன்..


...இந்த கதைக்கு கிளைமாக்ஸ் எப்படி கொடுக்கலாம்..


#அப்பா தன் மகன் முதுகில் தட்டிக் கொடுத்து..இதோ நீ விரும்பிய காரின் சாவி..கார் வெளியே நிற்கிறது..GO AHEAD..

              ALL THE VERY BEST..AND MY BEST WISHES..


*தன் பொறுப்பை உணராதவனும் கடமையை செய்யாதவனுக்கும் உரிமையை பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை...!



அன்பன்

Syed Hussain.


No comments: