Friday, March 31, 2023
Thursday, March 30, 2023
Wednesday, March 29, 2023
முதல் முஸ்லிம் பிரதமராக ஸ்காட்லாந்து நாட்டின் பிரதமராக ஹம்ஸா இன்று மாலை பதவியேற்றார்
மேற்கு ஐரோப்பிய வரலாற்றில் பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு பிராந்தியத்தின் முதல் முஸ்லிம் பிரதமராக ஸ்காட்லாந்து நாட்டின் பிரதமராக ஹம்ஸா இன்று மாலை பதவியேற்றார்
..
இரண்டு தினங்கள் முன்பு ஸ்காட்டிஷ் நேஷனல் பார்ட்டி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஹம்ஸா, பின்னர் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரதம அமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டார்..
பிரிட்டிஷ் பிராந்தியத்தின் மிக இளம் வயது பிரதமர் எனும் பெருமைக்குரிய 37வயதான ஹம்ஸா பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர்.
இன்று மாலை பிரதமராக பதவி ஏற்ற ஹம்ஸா தனது அலுவலகத்தில் நோன்பு திறந்த பிறகு மஹ்ரிப் தொழுகைக்கு தானே இமாமாக நின்று தொழ வைத்தார்..
Tuesday, March 28, 2023
Sunday, March 26, 2023
Friday, March 24, 2023
Thursday, March 23, 2023
பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்து வந்தது முற்றிலும் உண்மை
கல்வித் தந்தை என போற்றப்படும் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்து வந்தது முற்றிலும் உண்மை. இவர்கள் இருவருக்குமிடையே நிலவிய ஆழமான நட்பை எடுத்துச் சொல்ல மூன்று தியரிகளை பலரும் எடுத்துக்காட்டாகச் சொல்வதுண்டு
#முதல்_தியரி
===============
//“சிரித்து வாழ வேண்டும்” படத்தில் முஸ்லிம் வேடத்தில் எம்.ஜி.ஆர். பாடும் "ஒன்றே சொல்வான்; நன்றே செய்வான்; அவனே அப்துல் ரஹ்மானாம்" என்ற பாடல் தன் ஆத்ம நண்பர் பி.எஸ்.அப்துல் ரகுமானுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அமைக்கப்பட்ட பாடலிது என்பார்கள்.//
தன் நண்பர் 'அப்துல் ரஹ்மான்' பெயரை இப்பாடலில் சேர்க்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் வேண்டுகோளுக்கிணங்க பாடலாசிரியர் புலமைப் பித்தன் இவ்வரிகளை பாடலில் இடம்பெற வைத்தார் என்ற கூற்றை பற்பல திரையுலக பிரபலங்கள் உட்பட சொல்வதை நாம் கேள்வியுற்று இருக்கிறோம்.
Tuesday, March 21, 2023
Monday, March 20, 2023
பிரம்மாண்ட இசைச்சேவை
பிரம்மாண்ட இசைச்சேவை
=======================
NagoorRumi
இரண்டு நாட்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளரிடமிருந்து எனக்கொரு அலைபேசி அழைப்பு வந்தது. ஏற்கனவே ரஹ்மான் என்னிடம் நேரடியாக இரண்டு மூன்று முறை பேசியுள்ளார். நாங்கள் இருவரும் சேர்ந்து செய்யவேண்டிய ஒரு விஷயம் பற்றி. அது நடக்கும்போது சொல்கிறேன், இன்ஷா அல்லாஹ்.
விஷயம் என்னவென்று கேட்டேன். நேரு ஸ்டேடியத்தில் ரஹ்மானுடைய ஒரு இசை நிகழ்ச்சி நடக்க இருப்பதாகவும், அதற்கு எனக்கு எத்தனை பாஸ் வேண்டுமென்றும் (ரஹ்மான் கேட்கசொன்னதாகக்) கேட்டார். எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. நான் இரண்டு அல்லது மூன்று என்று சொல்லி வைத்தேன். மூன்று பேருக்கான பாஸ் வாட்சப்பில் மறுநாள் அனுப்பிவைக்கப்பட்டது! அம்மூன்றும் விவிஐபி பாஸ்கள்.
Friday, March 17, 2023
Wednesday, March 15, 2023
Tuesday, March 14, 2023
Monday, March 13, 2023
வாழ்க்கை ஒரு பக்கம் அள்ளி கொடுத்தாலும், இன்னொரு பக்கம் கிள்ளித்தான் கொடுக்கிறது..!
வாழ்க்கை ஒரு பக்கம் அள்ளி கொடுத்தாலும், இன்னொரு பக்கம் கிள்ளித்தான் கொடுக்கிறது..!
வாழ்விடம் என்பது மனிதனுக்கு அத்தியாவசியமான ஒன்று என்றாலும், பல பேர் அதை அனாவசியம் செய்கிறார்களோ..? என்று எண்ணும் அளவிற்கே, அவர்களின் மாட மாளிகைகள் அமைந்து விடுகின்றன.
சென்னைக்கு சென்ற பின்பு தான், மக்கள் ரோட்டில் வசிப்பார்கள் என்ற விசயமே தெரிய வந்தது. சிறு குடிசைகள், நடைபாதை கூடாரமென்ற அவர்களின் வாழ்க்கை முறையே வேற…
கடமைகளும் பொறுப்பும் உரிமைகளும்!!
#கடமைகளும் பொறுப்பும் உரிமைகளும்!!
#வழக்கம் போல ஒரு கதை!!
*அப்பா, என் கல்லூரியில் என்னோடு படிக்கும் பெரும்பாலானவர்கள் காரில்தான் வருகிறார்கள்..எனக்கு சங்கடமாக இருக்கிறது..உடனே எனக்கு ஒரு கார் வேணும்..
Saturday, March 11, 2023
Thursday, March 9, 2023
Wednesday, March 8, 2023
Tuesday, March 7, 2023
Munaajat - Arulvaaye Naayane - அருள்வாயே நாயனே - [Daff] - Ahmad Salih Fa...
அருள்வாயே
நாயனே
மவ்லாய
ஸல்லி வஸல்லிம்
தாஇமன்
அபதா
அலா ஹபீபிக خகைரில்
خகல்கி குல்லிஹிமி
==========
என்னைத்தான்
படைத்தவனே!
என்றென்றும்
நிலைப்பவனே!
என் தேவை நானுரைப்பேன்
நீ தந்து அருள்வாயே!
உருவில்லா
உள்ளமையே
உன்னை நான் உணர்ந்துக் கொள்ளும்
உள்ளம்
தான் வேண்டுகிறேன்
நீ தந்து அருள்வாயே!
நாள் தோறும் நபி மீது
- நல்
ஸலவாத்தை
நான் நவிலும்
நாவைத்
தான் வேண்டுகிறேன்
நீ தந்து அருள்வாயே!
Monday, March 6, 2023
உகாண்டாவில் உணவுத் திருவிழா
உணவுத்
திருவிழா
வெற்றி
நிகழ்வு
உகாசேவா
அமைப்பை
பற்றிப்
பிடிக்கிறது ....
பேரிறைவன்
நல்கிய
பெரும்
கிருபையை வரமாக பெற்று
பாகுபாடில்லாது
பல்கிய
உழைப்பினை
உரமாக தூவி
ஆர்ப்பரித்த
ஒற்றுமையை
சரமாக தொடுத்து
உணவுக்குழு
யாவரும்
ஒரே கரமாக அழகாக இணைந்து
வெற்றிகரமாக
ஞாயிறன்று (08.12.2019) நிகழ்ந்தேறிய உணவுத் திருவிழா எம்மை
உற்சாக வெள்ளத்தில் மகிழ்வோடு நீந்த வைக்கிறது ....
முனைப்போடு
செய்கிற ஏற்பாடுகளின் பற்பல நிறைகளை கண்டறிந்து
அவைகளை தக்க வைத்து சிற்சில
குறைகளை ஆராய்ந்து அதற்குத் தக்கவாறு நிவர்த்தி செய்து பங்கேற்றோரின் பாராட்டுகளை
உணவுக் குழுவினர் அள்ளுகிறார்கள் ....
இலாகா வாரியாக வாகாக நின்று
அனைத்து பொறுப்புகளையும் அவ்வனே ஏற்று செவ்வனே
நிறைவேற்றி என்னை விடவும் அதிகமான
பளுவான பணிகளை செய்து முடித்த
எனது இனமான உணவுக்குழுவுக்கு கனமான
சல்யூட் அடிக்கிறேன் ....
உகாண்டா
வர்த்தக நிறுவனங்களின் வாயில் கதவுகளை தட்டிய
பின்னர் நன்கொடை தொகைகள் கணிசமாக
எட்டிய செய்தி எமக்கு கிட்டிய
பாக்கியம் என்றே கருதுகிறேன்
....
கற்பனையை மிஞ்சிய டிக்கெட்டுகள் விற்பனையை நிகழ்த்திக் காட்டிய விற்பன்னர்களையும்