Tuesday, May 9, 2017

இயல்பும் , இழுப்பும் , இயலாமையும் !...

இயல்பும் , இழுப்பும் , இயலாமையும் !...

விவாதத்தை
எதிர் கொள்பவர்கள்
இயல்பாகவே
எழுதுகிறார்கள் !

வீண் விவாதத்தை
செய்பவர்கள்
ஒரு வெறியோட
குதறுகிறார்கள் !

காற்றுக்கு
உருவம்
உண்டென்கிறான்

குயிலுக்கும்
தோகை
உண்டென்கிறான்



ஆதாரம்
கேட்டால்
சேதாரம்
தருகிறான்

நாம் ஆதாரம்
கொடுத்தால்
கண்ணோரம் கூட
பார்ப்பதில்லை

சத்தியம்
மட்டுமே
நிலைக்கும்
என்கிறோம்

அசத்தியமும்
சத்தியமென
சாத்தியமாகும்
என்கிறான்.....

இழுத்தடிப்பதையே
இயல்பாக்குவது
இயலாமைதானே ?......

- தக்கலை கவுஸ் முஹம்மத்

No comments: