Wednesday, May 31, 2017

எமது மக்களுக்காக உங்களால் இயன்ற உதவியைச் செய்ய இணைந்து கொள்ள வேண்டுகிறேன்.

இது கொழும்பு மருதானை புகையிரத நிலையத்தின் நுழைவு வாயில். ஏனைய நாட்களைப் போல அல்லாது இன்றைய தினம் காலை நேரம் அதன் தோற்றம் சற்று மாறியிருந்தது.

வாயில் முழுவதும் உணவுப் பொதிகளும், தண்ணீர் போத்தல்களும் நிறைந்திருந்தன. அவை, எமது தேசத்தில் மண்சரிவு மற்றும் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி உயிர் பிழைத்திருக்கும் மக்களுக்காக, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் தொழில் நிமித்தம் கொழும்புக்கு வந்தவர்கள் தந்து சென்றவை.முகநூலில் ஒரு சின்னப் பதிவின் மூலமாக இதை சாதிக்க முடிந்தது. விடிகாலையில் எழுந்து சமைத்துக் கொண்டு வந்த உணவை இரு தடவைகள் யோசிக்காது அவர்கள் அங்கிருந்த மேசை மீது வைத்துச் சென்றார்கள்.

வெள்ளத்தால் பாதிப்புற்றவர்கள், இந்த உணவின் மூலமாவது சற்று ஆசுவாசமடைவார்கள் என்ற சிறிய எதிர்பார்ப்போடு தமது அன்றைய உணவைத் தியாகம் செய்த கொடையாளிகள் இவ்வாறாக தந்து சென்ற உணவுப் பொதிகளின் எண்ணிக்கை 2500 ஐத் தாண்டியிருந்தன. உடனுக்குடன் அவை பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நாளையும் வெள்ளத்தாலும், மண் சரிவாலும் பாதிக்கப்பட்டவர்களுக்காக உலருணவுகள் சேகரிக்கப்படும். உங்களால் இயன்றவாறு ஒரு தண்ணீர் போத்தலையோ, பிஸ்கட் பாக்கட்டையோ தந்து செல்லுங்கள்.

இயற்கை அனர்த்தங்கள் எவருக்கும், எப்போதும் நேரலாம். நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் இது. எமது மக்களுக்காக உங்களால் இயன்ற உதவியைச் செய்ய இணைந்து கொள்ள வேண்டுகிறேன்.

- என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
https://www.facebook.com/363266657034367/videos/1694475763913443/

31.05.2017
-----------------------------------------
1700 பேருக்கு அவசர உதவி தேவை - ரக்ஸபான ஜும்ஆ மஸ்ஜித் அவசர வேண்டுகோள்
சுமார் 1700 பேரை உள்ளடக்கிய எமது ஊர் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 6 அடி உயரத்திற்கு ஊரைச் சுற்றி ஆற்று நீர் பாய்வதால் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரமின்மையால் வெளியுலகத் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
சுமார் 70 இற்கு மேற்பட்ட வீடுகளும் 40 இற்கு மேற்பட்ட வியாபார ஸ்தலங்களும் நீரில் மூழ்கியுள்ள நிலையில் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன. மக்கள் தற்காலிக இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
எமது ரக்ஸபான பள்ளிவாசலை மையமாக வைத்து சுமார் 1700 பேருக்கு ஸஹர் உணவு உட்பட நிவாரணப் பணிகள் சிரமங்களுக்கு மத்தியில் இடம்பெறுகின்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை அத்தியவசிய வீட்டுப் பாவனைப் பொருட்கள் வழங்குதல், துப்பரவு செய்து மீள்குடியேற்றச் செய்தல் என்பவற்றுக்கு பாரிய உதவிகள் தேவைப்படுகின்றன.
எனவே, புனித ரமழானில் சிரமத்துடன் நோன்பு நோற்றிருக்கும் உங்கள் சகோதரர்களுக்கு உதவிக் கரம் நீட்டி, பன்மடங்கு நன்மைகளைப் பெற்றுக்கொ்ள முன்வருமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
சகோதர் பியாஸ் - 0772482594
சகோதரர் இஜ்லான் ஆசிரியர் - 0773531376
சகோதரர் நிஷவ்ஸ் – 0714922490
M.rishan Shareef
May 27 at 9:29pm

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails