யாத்திரை
சென்றாலும்
மாத்திரை ....
நாக்கிற்கு திரையிடாதவரை
உடலுக்கு
நித்திரையென்பது அறைகுறை,,,
அந்நோய் இந்நோய்
எந்நோய் வருவதற்கும் காரணமேதுமில்லை,,,
உணவுக்கட்டுப்பாடு
மனக்கட்டுப்பாடற்றால்
வருமே உடல்
உபாதைகளின் தொல்லை...
சக்கரையும் கொழுப்பும்
அக்கறையற்றால்
ஆங்காங்கே
அழகு தேகமும் புண்கரைபடுமே..
கல்லும் கட்டிகளும் உருவாகி
கரைத்திட வழிசெய்வதாய்கூறி
காசுபணத்தை
காவுகேட்கும் மருத்துவமே..
அளவுக்குமீறினால்
அமிர்தமும் நஞ்சாம்
அஃதே மருந்து
மாத்திரையின் நிலையும்
உணவே மருந்து
மருந்தே உணவு
வேண்டாம் மறந்தும்
மருந்தின் இவ்விருந்து
வேண்டும் வேண்டும்
ஆரோக்கிய உடம்பு..
Malikka Farook


No comments:
Post a Comment