Monday, May 2, 2016

முயற்சி செய்

-முஹம்மது முஸம்மில்.

முயற்சி செய்
விழுந்தாலும் எழு
தடுக்கினாலும் தாண்டு
வழுக்கினாலும் முன்னேறு
வெற்றியெனும் கனல்
கருவிழியில் எறியட்டும்
எதிர்வரும் தடைகளை
பார்வைக் கொண்டு பொசுக்கட்டும்
தோல்வியெல்லாம் தோல்வியல்ல
வெற்றியதுவும் தூரமில்லை
சூரியன் மறைந்தால் - அது
மறைந்ததாகாது
மீண்டும் உதிக்குமென்பதை -உன்
அறிவும் மறவாது

காற்றின் திசைநோக்கி -உன்
படகை நீ செலுத்து
தூரம் தெரிவதே
உனது இலக்கு
காற்றோடு போராடு
காலங்கள் மறக்காது
தொலைவைக் கண்டு -நீ
நின்றால்
தூரம் உனை நெருங்காது
கடினமென்று -நீ
நினைத்தால்
மடுவும் மலையாகும்
வீர்க்கொண்டு -நீ
முயன்றால்
இரு மலையிடை
தூரமும் சிறு கடுகாகும்
என்றும் கவியுடன்
முஹம்மது முஸம்மில்.

என்றும் கவியுடன் முஹம்மது முஸம்மில்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails