Monday, August 31, 2015

எனக்கு எதுக்கப்பா வேலை?

இலவச வீட்டில்
இலவச அரிசி வாங்கி
இலவச கிரைண்டரில் மாவரைச்சு
இலவச காஸ் அடுப்பில் இட்லி சுட்டு
இலவச மிக்ஸியில் சட்னி அரைச்சு
இலவச மின்விசிறியப் போட்டு
இலவச TV-யப் பாத்துக்கிட்டு

சர்க்கரை நோயா ? இனி கவலை வேண்டாம் !

-    வெங்கட்ராவ் பாலு B.A., -

  இன்றைய நாகரிக உலகில் நிறைய பேருக்கு சர்க்கரை இரத்த அழுத்த நோய் என்பது சகஜமானதாக இருக்கிறது. இவர்கள் அதிலிருந்து மீள உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

  சர்க்கரை இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட கலோரி அளவு கொண்ட உணவினை சாப்பிட வேண்டுமென உணவு நிபுணர்கள் நிர்ணயித்துக் கொடுத்திருக்கிறார்கள். இந்த சரிவிகித உணவினை சர்க்கரை அழுத்த நோய் உள்ளவர்கள் மட்டுமல்லாது குடும்பத்திலுள்ள மற்றவர்களும் கூட உண்ணலாம். அதனால் ஆரோக்கியமான வாழ்வு வாழ ஏதுவாகிறது.

Sunday, August 30, 2015

மனநிலைகள் நிமிடத்திற்கு நிமிடம் மாறக் கூடியது...

இன்று இருக்கும் மனநிலையில் மறுநாள் ஒருவரும் இருப்பதில்லை..

மனிதர்கள் நடை முறைகள்
அப்படித் தான்.

"கொஞ்ச முன்னால வரை
ஒழுங்கா தான் பேசினார்..

அதற்கிடையில் அவருக்கு
என்ன ஆகி விட்டது..

இப்போ ஏன் இப்படி சாடுகிறார்..

வரக்கூடியக் கோபத்திற்கு அவன் மண்டையை உடைக்கலாம் னு தோனுது .." என்றெல்லாம் சொல்வார்கள்...

பெரும்பாலும் எல்லோரும் சந்திக்கும் பொதுவானப் பிரச்சினை இது...

எல்லோருமே இப்படித் தான் இருப்பார்களா என்றால்
நிச்சயமாக கிடையாது...

Friday, August 28, 2015

உணர்வுகளை புதைக்க உள்ளத்தை தோண்டலாமா ?.

உயிரும் ,மூச்சும் பறக்கும் தூசு
பிறப்பு,
வளர்ப்பு,
இருப்பு உணர்வுகளை புதைக்க உள்ளத்தை தோண்டலாமா ?.
இறப்பு
எல்லாம்
அடையாளம் காணமுடியாத தடங்கள் கூட !

துயரங்களோடு நல்ல பரிச்சயம்
இது நிரந்தரமற்ற மனிதப் பிறப்பு என்பதால்

எந்த நிலத்தை பிடிப்பது
எப்படி பணம் சேர்ப்பது
யாரோடு போட்டி போடுவது
பொறாமைப் படுவது
குழி யாருக்கு தோண்டுவது
இவை எல்லாம் மனித ஆத்மாக்களின் ஆசைகள்

அன்றும் இன்றும் என்றும்... - Mohamed Salahudeen

அன்பு
எனது மொழி,

அது ஆதி மொழி,

எப்போதும்
நான் பேச
விரும்பும் மொழி

எல்லோரும்
அறிந்த மொழி,

ஏனோ சிலர்
மறந்த மொழி,

Wednesday, August 26, 2015

..இதை விவரமான வாசகர்கள் புரிந்து கொள்கிறார்கள்”


தமிழகம் வந்துள்ள University of Edinburgh மாணவர்களுடன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. சமூகம் மற்றும் ஜனநாயகத்தைச் செழுமைப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு என்பது தலைப்பு. எனது உரையைத் தொடர்ந்து, ‘தேர்தல் நேரங்களில் குறிப்பிட்ட கட்சிக்கு ஊடகங்கள் ஆதரிப்பது போன்ற வழக்கம், உங்கள் நாட்டிலும் உண்டா?’ என்று வினவினார் ஒரு மாணவர்.

அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பத்திரிகைகள் வெளிப்படையாக ஒரு கட்சிக்கோ வேட்பாளருக்கோ ஆதரவு தெரிவித்து தலையங்கங்களை எழுதுவதும், அவர்களை ஆதரிக்குமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்வதுமான மரபு நீண்டகாலமாக இருந்து வருகிறது. தங்கள் ஆதரவுக்கான காரணங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படுகின்றன.

தோலை உரிச்சுருவேன் !

பள்ளிக்கூடத்தில்
படிக்கும்போது
வாத்தியார் வாயில்
அடிக்கடி உரிபடும் சொல்
தோலை உரிச்சுருவேன் !

சண்டை வந்தால்
நண்பர்கள் கூட சொல்வார்கள் !
அட்டகாசம் செய்தால்
வீட்டிலும் கூட !

வாரந்தோறும்
கசாப்புக் கடையில்
ஆட்டின் தோலையும்
ஹஜ் குர்பானி காலங்களில்
மாட்டுத் தோலையும்
உரிப்பதை
பார்த்திருக்கிறேன் !

Tuesday, August 25, 2015

அம்மை நோய்கள் வருவது ஏன்?

டாக்டர் கு.கணேசன்


















ஓவியம்: வெங்கி

ஆகஸ்ட் மாதம் முடியப் போகிறது. ஆனால், தமிழகத்தில் இன்னும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. அக்னி நட்சத்திர வெயில் தொடர்கிறதோ என்று எண்ணும் அளவுக்கு வெயிலின் கடுமை நீடிக்கிறது. இதனால் பல நோய்கள் நம்மை நோக்கிப் படையெடுக்கின்றன. அவற்றில் அம்மை நோய்களுக்கு முக்கிய இடமுண்டு. அதிலும் குறிப்பாகச் சின்னம்மை (Chicken pox) நோய் அதிதீவிரத் தொற்றுநோய் என்பதால், இதுதான் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

Sunday, August 23, 2015

குழந்தைகளை தைரியமாக இருக்கச் செய்வது எப்படி?

பொதுவாக குழந்தைகளுக்கு எதையாவது கண்டு பயப்படுவது, பேய் கதைகள் அல்லது ஏதாவது ஒரு உருவத்தை கண்டு பயம் கொள்வது போன்றவை இருக்கத்தான் செய்யும். அப்போது பெற்றோர்கள் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், அவர்களின் பயத்தை போக்கும் வகையில் அன்பாக பணிவாக அவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறி பயத்தை போக்க வேண்டும்.

குழந்தைகள் சாப்பிட மறுத்தாலோ அல்லது அடம் பிடிக்கும் சமயத்திலோ, அவர்களுக்கு ‘பூச்சாண்டி’ காட்ட சொல்லும் பயமானது. மனதில் அப்படியே பதிந்து, எப்பொழுதும் அதே பயத்தில் இருப்பார்கள். சில சமயம் அந்த பயம் அவர்களுக்கு நிரந்தரமாகிவிடும். எனவே அவற்றை நிரந்தரமாக விடாமல், அதிலிருந்து அவர்களை காப்பது பெற்றோரின் கடமை. இப்போது குழந்தைகளின் பயத்தை எப்படியெல்லாம் போக்கலாம் என்று பார்ப்போமா!!!

1. சிறு வயதில், அதாவது 1-2 வயது வரை குழந்தைகளை சாப்பிட வைக்க, பூச்சாண்டி காட்டி சாப்பிட வைப்பது, அடம் பிடிக்கும் போது அவர்களுக்கு பேய் வருகிறது என்று சொல்லும் கட்டுகதைகள் போன்றவற்றை அவர்கள் வளர வளர நாளடைவில் மாற்றி கொள்வது நல்லது. அதாவது அவர்கள் அடம் பிடிக்கும் பொழுது, ஏதாவது பாட்டு அல்லது கதை சொல்லி அல்லது அவருக்கு பிடித்தமான ஒன்றை கொடுக்கிறேன் என்று சொல்லி, அவர்களை திசை திருப்பலாம்.

Saturday, August 22, 2015

அனுபவப் பாடம்

அறிந்திருக்க வேணும்
அதிலுள்ள தெளிவு
ஆத்மார்த்த அறிவு


புதுமையாய் பலவும்
புரியத்தரும் பாடம்
பூப்போன்று உலகில்
பழகச்சொல்லும் பாடம்

பொறுமையை நமக்கு
புகட்டிடும் பாடம்
பொல்லாதவை விட்டு
புறம்தள்ளும் பாடம்

வெறுமைகள் யாவும்
விலக்கிடும் பாடம்
விதியையும் வெல்ல
விளக்கம்தரும் பாடம்

அழிவுப் பாதையில் மனிதன்!


        இன்று உலகில் காணப்படும் அனைத்துப் பொருள்களும் அபரிமிதமான வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன. மண்ணுக்கடியில் இருந்த உலோகங்கள் வளர்ச்சி பெற்று, விண்ணில் பறப்பது மட்டுமில்லை; இதரகோள்களையும் அடையும் பாக்கியத்தைப் பெற்றுள்ளன. இதுபோல் அனைத்துப் பொருள்களும் மேல்நிலை அடைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. சுருக்கமாகச் சொன்னால் மனிதனுக்கு வெளியேயுள்ள அனைத்துப் பொருள்களும் மேன்மை அடைந்துள்ளன.

       அவற்றின் மேன்மைக்கு யார் காரணம் என்று பார்த்தால், அதற்கு மனிதனே காரணம் என்பது விளங்கும். ஆம்! அவற்றின் மீது மனிதனின் இடைவிடா தொடர் முயற்சியின் காரணமாக அவை ஒவ்வொன்றும் பிரமிக்கத் தக்க பெரும் வளர்ச்சி கண்டுள்ளன. இப்படி பொருட்களின் வளர்ச்சியைப் பார்த்து பெருமிதம் கொண்டு மனிதன் பெரிதும் முன்னேறி விட்டதாகப் பெருமையடிக்கிறான். ஆக மனிதன் வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சியை தனது வளர்ச்சியாக நினைத்து பெருமையடிக்கிறான்.

பிரச்னைகளில் விலகி நின்று யோசியுங்கள். தீரும்!

By vayal    

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அது ஒப்ப நில்!

இந்த குறளுக்கு நமக்கு கண்டிப்பாய் விளக்கம் தெரிந்திருக்கும். நமக்கு துன்பம் வரும் போது சிரிக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; அந்த மகிழ்ச்சியே, அந்த துன்பத்தை தூர காணாமல் போக்கிவிடும். அந்த துன்பத்திற்கு நிகர், அந்த நேர மகிழ்ச்சி தான்.

சமீபத்தில் ஒரு வாழ்வியல் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். இதற்கான ஒரு புது விளக்கம், நாம் ஒத்துக் கொள்கிற மாதிரி, வேறு விதமாக கூறப்பட்டது ஆச்சரியமாக இருந்தது.
‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றால், – துன்பம் வரும்போது நகர்ந்து விடுங்கள் என அர்த்தம்.
அதற்காக, ‘துன்பத்தை பார்த்து பயந்து ஓடி விடுங்கள்’ என்று நேர் அர்த்தம் கொள்ளக் கூடாது; அந்த துன்ப மனநிலையிலிருந்து நகர்ந்து, தள்ளி நின்று, அந்த பிரச்னையை – துன்பத்தை கவனியுங்கள்; தீர்வு கிடைக்கும் என்பதாக விளக்கம் கூறினர்.
இது எவ்வளவு தூரத்திற்கு உண்மை,

Thursday, August 20, 2015

ஆண் என்பவன் ....

உரத்த சிந்தனை - 2

பனி உறைய மலை முகடுகளும், மழை பொழிய கார் மேகங்களும், பசி தீர்க்க கனி வகைகளும், தாகம் தீர்க்க அருவிகளும், மனம் லயிக்க மலர் தோட்டங்களும், அழகு ரசிக்க அற்புத பறவைகளும், இடம் ஒதுங்க எழில் குடில்களும், இனம் பெருக்க பெண் துணையும், அதில் பூத்த மலர் பார்த்து மனம் மகிழ்ந்து, வாழும் வாழ்வை மணமாக்க, இயற்கையாம் பேரின்ப கடவுளின் நினைப்பையும் தன் எண்ணத்தில் கொண்ட, அன்றிருந்த இன்ப நிலை, அற்புத நிலையன்றோ, ஆண்டவனும் உகந்த அழகான நிலையன்றோ?

Wednesday, August 19, 2015

சொல்லத் தோணுது 47 - விடுதலை எதற்காக?

 -கட்டுரை ஆக்கம்: தங்கர் பச்சான்
இந்த ஆண்டின் சுதந்திர தினத்தை முழுமனதோடு அனுபவிக்க முடி யாததுதான் இந்திய மக்கள் பெரும் பாலானோரின் பெரும் கவலை. சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையில் சுதந்திர தினம் அமையாமல், திங்கள்கிழமை அமைந்திருந்தால் சுதந்திர தினத்தை முழுமையாக அனுபவித்திருப்பார்களோ என்னவோ?

சுதந்திரம் என்றால் என்ன? இந்த சுதந்திரம் எப்படிக் கிடைத்தது என்பதை எல்லாம் அறியாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. சுதந்திர தினம் ஒரு சடங்காகவே கடைபிடிக்கப் பட்டு, மற்ற விடுமுறை நாட்களைப் போல் இதுவும் ஒரு விடுமுறை நாளாக மட்டும் மாற்றப்பட்டுவிட்டது.

Tuesday, August 18, 2015

திப்பு சுல்தான் (1750 - 1799)

                                                திப்பு சுல்தான் (1750 - 1799)

திப்பு சுல்தான் 1787 ஆம் ஆண்டு தனது ஆட்சியின் கொள்கைகள் சிலவற்றைப் பிரகடனம் செய்தார். அவற்றை வரி தவறாமல் வாசித்து, வரிகளுக்குள் பொதிந்து கிடக்கும் கருத்துகளின் ஆழ அகலங்களை ஆய்வுசெய்து பார்த்தால் திப்புவின் ஆட்சித் திறனும் அரசியல் மேன்மையும் வெளிப்படும். “பிற மதங்களிடம் சகிப்புத் தன்மையே புனித குரானின் அடிப்படைக் கோட்பாடு. மத விஷயங்களில் நிர்ப்பந்தம் என்பதே கூடாது; அவரவர் விருப்பத்தை மதிப்பதே புனித குரானின் வாக்கு; பிற மதங்களின் விக்ரகங்களை அவமதிக்காதீர்; பிற மதத்தினருடன் வாதம் புரியக் கூடாது எனக் கட்டளையிடுகிறது புனித குரான். மனிதர்கள் தங்கள் நற்காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது அவசியம்; நமக்கொரு நல்ல மார்க்கம் வழங்கப்பட்டுள்ளது.

Saturday, August 15, 2015

மன அழுத்தத்தை குறைக்கும் வைட்டமின் ‘டி' - தி இந்து

மன அழுத்தத்தை குறைக்கும் வைட்டமின் ‘டி' - தி இந்து



 மன அழுத்தத்தை குறைக்கும் வைட்டமின் ‘டி'

 உயிர்ச்சத்துகளில் வைட்டமின் டி முக்கியமானது. அதேநேரம் அதிகக் கவனம் செலுத்தப்படாத வைட்டமின்களில் ‘டி'யும் ஒன்று.



வைட்டமின் டி என்பது எலும்புக்கும் பற்களுக்கும் அத்தியாவசியம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான பல உயிர்வேதியியல் செயல்பாடுகளுக்கும், இந்த வைட்டமின் மிகவும் அடிப்படையானது என்பது தற்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.



வைட்டமின் டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோஸிஸ், ரிக்கட்ஸ், இதய நோய், புற்றுநோய், மல்ட்டிபிள் ஸ்கிளரோஸிஸ், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஜலதோஷத்தை விரட்டுவதிலும் மன அழுத்தத்தைச் சமாளிப்பதிலும் வைட்டமின் டி உதவுவதாகக் கூறப்படுகிறது.



மற்ற வைட்டமின்களைப் பொறுத்தவரை நமது வழக்கமான உணவுப் பொருட்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். வைட்டமின் ‘டி'யைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சிக்கல்தான். வைட்டமின் ‘டி'யைப் பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம்.



சூரிய ஒளி



நமது வாழ்க்கை முறை என்பது பெரும்பாலும் நான்கு சுவர்களுக்குள் அமைந்துவிட்டது. வீட்டுக்கு அல்லது அலுவலகத்துக்கு வெளியே ஒரு 20-25 நிமிடங்கள் நம் கை மீது வெயிலோ அல்லது திறந்தவெளிக் காற்றோ படும்படி இருந்தாலே போதும், வைட்டமின் டி கிடைக்கும்.

Friday, August 14, 2015

""பேரீச்சம் பழக் காட்டின் பிரதிநிதிகள்" --- முதலாளித்துவம்! --

--- முதலாளித்துவம்! --

கட்டுமானங்கள் இல்லாமல்
நிறுவப்பட்ட
வான முகட்டின்
கீழும் மேலுமுள்ள
கோளப் பிரதேசங்களின்
ஏக முதலாளியே !

உனது
சொத்துகள் மட்டுமே
இங்கு தனியுடைமைகள் !

ஆனாலும்
உன் அடிமைகளுக்குக் கூட
முதலாளிப் பட்டம்
தொங்க விடப்படுகிறது !

உனது சொத்துகளைப்
பொதுவுடைமை யாக்கப்
புரட்சி வெடிசல்கள்
புறப்படும் போதெல்லாம்
மரண வானத்திலேதான்
உதய சூரியனை
உதிக்க வைக்கிறாய் !

Thursday, August 13, 2015

"Ayisha is always dreaming," இது ஆசிரியமிடருந்து வந்தது, இது குற்றச்சாட்டா?? பாராட்டு என்று எடுப்பதா?

ஆயிஷா............
இரண்டாண்டுக்கு முன், பிறந்தநாளன்று புத்தகம் பரிசளித்ததிலிருந்து
( http://goo.gl/lycAAE )உங்கள் எல்லோருக்கும் இவளைத் தெரியும்.....
கடந்தமாதம், இவளின் வகுப்பாசிரியை சந்திக்கச் சென்றிருந்தேன்.
( ஒவ்வொரு மாதத்தின் இறுதி வெள்ளியன்று பிள்ளைகளின் ஆசிரியர்களை சந்திப்பதினை வழக்கமாக்கி வைத்துள்ளேன்.)..

(
பிறந்தநாள்.............
அதுவும் சிறுவர்கள் பிறந்தநாள் என்றால் முதலில் ஞாபகம் வருவது......... சாக்லெட்.... க்ரீம் கேக்,
இன்று ஆயிஷாவின் பிறந்தநாள்...........!
மாத்தி யோசி என்றது மனம்,
வகுப்பில் உள்ள அனைவருக்கும் ‘சாக்லெட்’க்கு பதில் புத்தகம் தரலாம் என்று யோசித்தேன்.... "Elementary Grammar & Punctuation" தேர்வு செய்தேன்.
இன்று காலை நண்பர்களுக்கு புத்தகம் தந்ததில் ஆயிஷாவிற்கு மகிழ்ச்சி.
படிக்கும் பழக்கத்தினை பிஞ்சுகளுக்கு விதைத்ததில் எனக்கு திருப்தி!)
"Ayisha is always dreaming," இது ஆசிரியமிடருந்து வந்தது, இது குற்றச்சாட்டா?? பாராட்டு என்று எடுப்பதா?

Wednesday, August 12, 2015

முடிவெடுக்கும் திறன் முக்கியம்!

முடிவெடுக்கும் திறன் முக்கியம்!

100 முறை சிந்தனை செய்யுங்கள். ஒரே ஒரு முறை மட்டுமே முடிவெடுங்கள்.

முடிவெடுக்கும் திறன் படைத்தவர்கள் வாழ்வின் எல்லா தடைக்கற்களையும் எளிதாகக் கடந்து செல்வது நிதரிசன உண்மை.

உலகில் சாதனையாளர்களின் எண்ணிக்கை குறைவாகவும், சாமானியர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பது ஏன்? சாதனையாளர்கள் எல்லோரும் வானத்திலிருந்து குதித்தா வந்தார்கள்? ஏன் நம்மாலும் சாதிக்க முடியாது?

Tuesday, August 11, 2015

வாழ்வின் அத்தனை வெளிச்சங்களிலும் .....!

உடலுக்குள் ஊடுருவி
ஊசலாடிக் கொண்டிருக்கிறது
உயிர் !

உடைகளுக்குள் வெட்கமேயில்லாமல்
சுதந்திரமாய் சுற்றித் திரிகிறது
நிர்வாணம் !

இமைகளுக்குள் உறங்காமல்
எப்போதும் விழித்திருக்கிறது
உறக்கம் !

Monday, August 10, 2015

முதியவனின் முணங்கல்!

எனது வாலிப காலத்தில் கடும் உழைப்பால் கை நிறைய சம்பாதித்தவன் உத்யோகத்தோடு குடும்பத்தையும் இரு கண்களாய் பாவித்தவன். நான் பெற்ற 4 குழந்தைகளையும் சமமாய் செல்லமாய் வளர்த்தவன் மனைவியின் பொருப்பில் பாதியை என் தோளில் ஏற்றிக்கொண்டவன் விடுமுறை நாட்களிள் குழந்தைகளோடு முழு நேரத்தையும் செலவிட்டவன்.

அவர்கள் கேட்ட விளையாட்டு பொம்மைகள் அத்தனையும் மறுப்பு சொல்லாமல் வாங்கிக்கொடுத்து அவர்கள் மகிழ்வதை கண்டு கவலைகள் மறந்து அகம் மகிழ்ந்து தன்னிலை மறந்திருக்கிறேன்.

Monday, August 3, 2015

சொல்லத் தோணுது 45 - வேலி!

- தங்கர் பச்சான்

நமக்கு எல்லாமே செய்திதான். அதைப் படிப்பது, பார்ப்பது, விவாதிப்பது, பின் அதை மறந்து போவது என்பதே நடைமுறையில் உள்ளது. மறுமுறை அது நிகழும்போது வெறும் செய்தியாக மட்டுமே மனதில் பதிந்துவிடுகிறது.

ஆணும், பெண்ணும் சேர்ந்து உருவாக்குவதுதான் இந்த மனித இனம்; இந்த சமுதாயம். ஆனால், இதில் பெண் மட்டும் எப்போதுமே அதிக பாதிப்புக்குள்ளாகிறாள். கேள்விக்கு உட்படுத்தப்படுகிறாள். எல்லாப் பொறுப்புகளும் அவளுக்கு மட்டுமே உண்டு. இதைத் தான் ஆணாதிக்க உலகம் நடைமுறைப்படுத்தி சாதித்துக்கொண்டு வருகிறது.

சமுதாய வளர்ச்சி, தனிமனித வளர்ச்சி, உளவியல், மனித ஆளுமை இவற்றில் பாலியலின் பங்கு என்ன என்பதை அறிவுபூர்வமாக, அறிவியல்பூர்வமாக ஆராய்வது அவசியமாகிறது. பெண் ணுடல் சார்ந்து பார்க்கப்படும் பார்வைகளும், கேட்கப்படும் கேள்விகளும் விவாதத்துக்குரியவை. பெண்ணுடல் சார்ந்து மட்டுமே தங்களின் வணிகப் பார்வையை வளர்த்து, காலங்காலமாக அதைக் கொண்டு சந்தைப்படுத்திவரும் ஊடகங்களும் இதில் பங்குபெறுகின்றன.

Sunday, August 2, 2015

கடவுள் எங்கே இருக்கிறார்?

நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.

“நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”

“நிச்சயமாக ஐயா..”

“கடவுள் நல்லவரா?”

“ஆம் ஐயா.”

“கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?”

“ஆம்.”

“எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?”

(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)