Friday, August 28, 2015

அன்றும் இன்றும் என்றும்... - Mohamed Salahudeen

அன்பு
எனது மொழி,

அது ஆதி மொழி,

எப்போதும்
நான் பேச
விரும்பும் மொழி

எல்லோரும்
அறிந்த மொழி,

ஏனோ சிலர்
மறந்த மொழி,

மகிழ்ச்சி மொழி,

மனதை மயக்கும் மொழி,

காலம்,தேசம்,இனம்,
கடந்த மொழி,

இகபரம் இரண்டின்
வெற்றி மொழி,

இளமை, முதுமை,
ஏதுமில்லா மொழி,

எனை மயக்கும் மொழி,

நான் மயங்கும் மொழி,

இச்சை மொழி,

சிலநேரம்
அது கொச்சை மொழி,

ஏனோ சிலர்பேச
மறுக்கும் மொழி,

தித்திக்கும் மொழி,

எப்போதும்
திகட்டாத மொழி,

உலகை ஒன்றாய்
இணைக்கும் மொழி,

எதிரிக்கும்
தெரிந்த மொழி,

எல்லைகளற்ற மொழி,

வலி தராத மொழி,

அன்பே எனது விழி,

அதன் வழியே விரியும்
எனது வழி.

 Mohamed Salahudeen

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails