Wednesday, August 26, 2015

..இதை விவரமான வாசகர்கள் புரிந்து கொள்கிறார்கள்”


தமிழகம் வந்துள்ள University of Edinburgh மாணவர்களுடன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. சமூகம் மற்றும் ஜனநாயகத்தைச் செழுமைப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு என்பது தலைப்பு. எனது உரையைத் தொடர்ந்து, ‘தேர்தல் நேரங்களில் குறிப்பிட்ட கட்சிக்கு ஊடகங்கள் ஆதரிப்பது போன்ற வழக்கம், உங்கள் நாட்டிலும் உண்டா?’ என்று வினவினார் ஒரு மாணவர்.

அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பத்திரிகைகள் வெளிப்படையாக ஒரு கட்சிக்கோ வேட்பாளருக்கோ ஆதரவு தெரிவித்து தலையங்கங்களை எழுதுவதும், அவர்களை ஆதரிக்குமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்வதுமான மரபு நீண்டகாலமாக இருந்து வருகிறது. தங்கள் ஆதரவுக்கான காரணங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படுகின்றன.
“தங்களுக்கென நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளைக் கட்சிகள் நடத்திவரும் முறை இந்தியாவில் இருந்து வருகிறது. நடுநிலை ஏடுகள், ஊடகங்கள் என்போர் அவ்வாறு நேரடியாக எந்தக் கட்சியையும் ஆதரிப்பதாக வெளிப்படையாக அறிவிப்பதில்லை. ஆனால், செய்திகளைத் தேர்வு செய்வதில், முக்கியத்துவம் தருவது அல்லது புறக்கணிப்பதன் மூலம் மறைமுகமாக ஆதரவு நிலையை சிலர் வெளிப்படுத்தி விடுகின்றனர்,. இதை விவரமான வாசகர்கள் புரிந்து கொள்கிறார்கள்” என்றேன். நிறைவானதொரு காலைப்பொழுது!
                               Gunaa Gunasekaran