Friday, October 31, 2014

திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்தே ஆகவேண்டுமா?

முதலில் திருமணம் மற்றும் குடும்பம் என்றால் என்ன என்று நாம் புரிந்து கொள்வது அவசியம். நீங்கள் திருமணம் செய்வதும் குழந்தை பெற்றுக்கொள்வதும் நீங்கள் மட்டுமே சம்பந்தப்பட்டது அல்ல. முழு சமூகத்திற்கும் தேசத்திற்கும் உலகத்திற்கும் சம்பந்தப்பட்ட விஷயம்.

உங்கள் குழந்தைகள்தானே வருங்கால உலகம்? தோராயமாக பத்து சதவீதம் பேர் மட்டுமே உலகில் எந்த இடத்திலும் சமாளித்து வாழும் திறமை படைத்தவர்கள். மற்றவர்கள் எல்லாம் இருக்கும் ஊரைத் தாண்டினாலே, பிழைப்புக்கு வழி இல்லாதவர்களாகத் தான் இருக்கிறோம். படிப்பறிவில்லாத தாயிடம் குழந்தை எப்படி வளரும்?

Tuesday, October 28, 2014

- ஏங்க கத்தி பாத்தீங்களா...?

- ஏங்க கத்தி பாத்தீங்களா...?
- இல்லியே. நான் கத்தலையே...?
- நான் அதைக்கேக்கலே. கத்தி பாத்தீங்களான்னு கேட்டேன்.
- நான் ஏன் கத்திப் பாக்கணும். எனக்கு தொண்டை நல்லாத்தானே இருக்கு...?
- அய்யோ... நான் கேட்டது கத்தி பாத்தீங்களா...?
- கத்தி.... ஆமா. பார்த்தேனே!
- எங்கே பாத்தீங்க...?
- கிச்சன்லதான் இருந்துச்சு... ஸ்ட்வ் பக்கத்துல!
- அய்யோ... நான் கேட்டது விஜயோட கத்தி பாத்தீங்களா...?
- நம்ம வீட்டுலயே கத்தி இருக்கும்போது விஜயோட கத்தியை நான் எதுக்கு பாக்கணும்...?
- அய்யோ... நான் கேட்டது கத்தி சினிமா பாத்தீங்களா...?
- சினிமா பார்க்க எதுக்கு கத்தோணும்...?
ஆஆஆஆஆஆஆ.... என்கையில மட்டும் கத்தி கிடைச்சுது...
*
ஹிஹிஹி.... சும்
 
Shah Jahan(புதியவன்
**************************************
படித்ததில் (கேட்டதில்) பிடித்தது  
நன்றி 
Shah Jahan(புதியவன் ) அவர்களுக்கு

புரியாமையையும் புரிதலும் - தாஜ் தீன்

புரியாததுகள்..
நம்மில் திறக்கப்படாத கதவுகள்!
அது புரிப்படாததினால்
கதவுகள் திறக்கப்படாமலேயேதான்
நாளும் வாழ்கிறோம்!.

புரியாமையின்
கொடுமையின்றி
ஓர் மகத்தான கவிதையும் கூட
நமக்கு பிடிப்படாமல் போவது
வேறெங்கணம்!?

புரியாமையை வென்ற
புரிதலிலேயே
நவ கலைகளின்
அத்தனை நேர்த்தியும்
நம்மை அசுவாசப்படுத்தும்
என்பது நிச்சயம்.
 
 
ஆக்கம் தாஜ் தீன்Taj Deen

மனிதர்களின் அளப்பறியார்வத்திற்கு (Curiosity) அளவேயில்லை.

இந்த மனிதர்களின் அளப்பறியார்வத்திற்கு (Curiosity) அளவேயில்லை. கையில், அதாவது கைபேசியில் எந்தத் தகவல் கிடைத்தாலும் மற்றவர்க்கு அல்லது குழுமங்களுக்கு அனுப்பிவிட்டுத் தான் மறுவேலை பார்க்கிறர்கள்.

இந்த சமூக வலைத்தளங்களில் கொட்டப்படும் தகவல்களுக்கும் அளவேயில்லை. அவற்றில் பெருமளவில் உண்மையுமில்லை.

நான் எப்போதும் சொல்வதுண்டு: அச்சு ஊடகத்தில் வராமல், சமூக ஊடகத்தில் மட்டுமே வருகிற ஒரு பொதுச் செய்தி பெருமளவுக்குப் பொய்யாக இருக்கவே வாய்ப்பு உள்ளது. அத்துடன், சமூக வலைத்தளச் செய்தியைப் பின்னணியாகக் கொண்டு வெளியாகும் அச்சு ஊடகச் செய்திகள் பற்றியும் இப்போதெல்லாம் நம்பகத்தன்மை இல்லாமல் போகிறது.

Monday, October 27, 2014

சேவியரின் அலசல் - கவிதைகள்,கட்டுரைகள்,நிகழ்வுகள் மற்றும்...

'அன்பின்றி அமையாது உலகு…
எழுத்துக்களை வாசிப்போம், இதயங்களை நேசிப்போம்….'

வாழ்க்கை என்பது ஒரு யாத்ரீகனின் பயணத்தைப் போன்றது. இதில் கவனிப்புகளே பிரதானம். பயணத்தின் நீளங்களையோ, அகலங்களையோ, ஆழங்களையோ, உயரங்களையோ நிர்ணயம் செய்து விடமுடியாத சாலை நமக்கு முன்னால் நீண்டு கிடக்கிறது. இடுக்கமான நெரிசல் நிறைந்த சந்து ஒன்றில் காரோட்டும் கவனம் வாழ்வின் தினசரி நிகழ்வுகளை ஆக்கிரமிக்கிறது. யாரையும் காயப்படுத்தாமலும், காயப்படுத்துபவர்களுக்கு எதிராய் குரல் எழுப்பத் தயங்காமலும், உடன் பயணிப்போருடன் அளவளாவி சிரிக்க முரண்டு பிடிக்காமலும் தொடர்கிறது எனது பயணம். http://sirippu.wordpress.com/ என்ற  தளத்தில். நீங்கள் கம்பனின் கவிதைக் கூறுகளையோ, சேக்ஸ்பியரின் ரசனைக் கூறுகளையோ சந்திக்காமல் போகலாம், ஆனால் நீங்கள் நினைக்கும் சிலவற்றைக் காணலாம் கீழ உள்ள View என்பதை கிளிக் (சொடுக்கி) செய்து பாருங்கள் -சேவியர்
குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 5

View

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 4

View

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 3

View

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 2

View

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 1

View

கண்ணோடு காண்பதெல்லாம்…

View

காதலின்றி அமையாது உலகு.

View

சிறுகதை : ஒரு குரலின் கதை

View

இறைவன் படைப்பில் தாய்.

View

மனோரமா இயர் புக் : Top 10 கணினி இதழ்கள்

View

ஃபாஸ்ட் ஃபுட் திருமணங்கள்.

View

எல்லைகள் கடந்த மனித நேயம்

View

TBB’s New Song , பாடல் : பூம் பூம்

View

TBB – பைரவன் – முகிலே முகிலே

View

எல்லோருக்குள்ளும் உறையும் குளம்

View

ரஜினி நினைவுகள்.

View

பெயர்க் காரணம்

View

அட… அங்கேயும் இதே நிலமை தானா !!

View

பொறுமை கடலினும் பெரிது.

View

IOF : பொருட்களின் இணையம் ! .. தெரிஞ்சுக்கோங்க !

View

POS ! என்ன ? ஏன் ? எப்படி ?

View

அசத்தப் போகும், NFC !

View

புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !

View

குழந்தைகளைப் பாதுகாப்போம் !

View

ஓவிய உடல்கள் !

View

தொங்கலில் தெங்குமரஹாடா

View

புத்தகங்கள் அழியுமா ?

View

காரோட்டினால் நீ கன்னியல்ல ! : நாடுகளின் ஆணாதிக்க முகம்.

View

ஹை ஹீல்ஸ் : அழகா, ஆபத்தா ?

View

ஹை ஹீல்ஸ் : அழகா, ஆபத்தா ?

View

தொழில் நுட்பத் திகில் !!

View

திரைப்படத்திலிருந்து காமிக்ஸ் !

View

வின்டோஸ் 8, ஒரு பார்வை !

View

தேர்வு எழுதப் போறீங்களா ? : கொஞ்சம் டிப்ஸ் இதோ !

View

ரோபோவுக்குள் மனிதன் !

View

அரை நூற்றாண்டுக்குப் பின் ஒரு ஆனந்த சந்திப்பு

View

கட்டுரை : பலவீனங்களை பலங்களாக்குவோம்

View

கட்டுரை : அவமானங்கள் நம்மை உயர்த்தும் ஏணிகள்.

View

தொலைபேசியில் ஆபாசப் பேச்சு

View

மறதிக்கு மருந்து…

View

ஆடு ஜீவிதம் : நாவல் ஒரு பார்வை

View

பெண்களுக்கான வயாகரா !

View

மிரட்டும் மரபணு பயிர்கள் : பசுமை விகடன் கட்டுரை

View

குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கணுமா ?

View

தினத் தந்தியில் எனது தொடர் : சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்.

View

குழந்தைகளுக்கான செல்போன் !!! 2G அல்ல 2LKG !

View

கருக்கலைப்பு : சரியான சில தவறுகள் !

View

டெக்னாலஜிக் கூட்டில் டீன் ஏஜ் கிளிகள்

View

ஆத்துக்காரர்(ரி) அல்வா பார்ட்டியா ? கண்டுபிடிக்கலாம் !

View

வியப்பூட்டும் வேலண்டைன் கதைகள்

View

என்றும் இளமை தரும் டெலோமியர் !!! ஜூவி கட்டுரை

View

(பிரெஞ்ச்) நாவல் : குட்டி இளவரசன்.

View

30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் ?!

View

மல்லுக்கட்டும் பதின் வயது !

View

BLACK SWAN : எனது பார்வையில்

View

தைப் பொங்கலும், ஜீன்ஸ் பெண்களும்

View

BURIED : எனது பார்வையில்

View

பெண்கள் விடுதி ! :- வேண்டியதும், வேண்டாததும்…

View

DEVIL : திரைப்படம் எனது பார்வையில்

View

நந்தலாலாவா ? கிகுஜிரோவா ? : எது பெஸ்ட் ?

View

ITயில் வேலை வேண்டுமா : எனது புதிய நூல்.

View

2010 : படித்தவை, கிழித்தவை, பார்த்தவை…

View

பனிப் பூக்கள், குளிர் காற்றில்…

View

UNSTOPPABLE : எனது பார்வையில்.

View

புத்திசாலிப் பெண்களை ஆண்களுக்குப் பிடிக்குமா ?

View

வேலையில் ஸ்டார் ஆக 20 டிப்ஸ் !

View

நூல் பார்வை : பாலியல் – இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன ?

View

டீன் ஏஜ் பெண்ணின் அப்பாவா நீங்க ?

View

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்… : நூல் குறித்து….

View

தொலைந்த மொபைல் கிடைக்குமா ?

View

கல்கியில் உங்க “ஊர்ப்பாசத்தை” எழுதுங்க….

View

கல்கியில் எனது : “நல்லா இருக்கியா மக்களே…”

View

எனது புதிய நூல் : குழந்தையால் பெருமையடைய….

View

ஆண்களே “பெல் பஜாவோ”

View

கிளிமஞ்சாரோ : பின்னணி தெரிஞ்சுக்கலாம் வாங்க !

View

வாடகை மனைவி…கார்ப்பரேட் காமம் !

View

எந்திரன் – இப்படியெல்லாம் எதிர் விமர்சனங்கள் வரக் கூடும் !

View

மச்சி.. இவ்ளோ மேட்டர் இருக்கா சீட்டு கட்டுல !

View

எந்திரன் : எனது பார்வையில்

View

ஹாலிவுட் டாப் 5 !

View

ஆகதன் : விமர்சனம் ! நாணமில்லே சத்யராஜ் ?

View

INVICTUS : எனது பார்வையில்

View

உங்க கணவர் அம்மா பிள்ளையா.. ?

View

உதடுகளில் உற்பத்தியானவை.- சேவியர்

எத்தனையோ விதமாய்
என்னைச் சுற்றிலும்
மனிதர்கள்.

பலரின்
புன்னகைக் கிடங்குகள்
பூப்பதை நிறுத்தினாலும்,
உதட்டுச் சந்தை
அதை
வினியோகிக்க மறக்காது.

சிலரோ
மூடிவைத்த சீசாவுக்குள்
மூச்சு முட்ட
பூத்துக் குலுங்குவார்கள்.

மிதமாய் பூத்து
அதை
இதமாய் தருபவரும் உண்டு.

பூக்காதவர்கள்
இருக்க இயலாது,
ஆனால் என்ன ?
சிலர்
வசந்த காலத்தில் மட்டுமே
வருவேன் என்கிறார்கள்.

சிலர்
பனியில் மட்டுமே
பூப்பேன் என்கிறார்கள்.

இன்னும் சிலர்
வெயில் வரட்டும்
பூக்களை விளைவிக்கிறேன்
என்கிறார்கள்.

வாடாமல்லியாய்
நிலைப்பதும்,
பத்துமணிப் பூவாய்
பட்டென்று ஓய்வதும்,

ரோஜாவாய் ராஜ்ஜியம் ஆள்வதும்,
கள்ளியாய்
தூரமாய் பூப்பதும்
செடிகளின்
சம்மதத்தைப் பொறுத்தது.

ஏதேனும்
ஓர் பூ கிடைக்கும் வரை
செடிச் கடைகளை
தேடித் திரியும்
தேனீயாய் நான்.

தேனீக்கும் எனக்கும்
ஒரே ஒரு
சின்ன வித்தியாசம்.

தேனீக்கள்
ஆதாயத்துகாய்
ஆழமாய் குழி தோண்டும்
அசலூர்க்காரன்.

நான்
பூக்களைப் பூக்களால்
பறிக்க நினைக்கும்
பண்டமாற்றுக் காரன்.

Sunday, October 26, 2014

ஆசை....! சுமைகள்....!

ஆசை....!

கடலலையில் கலந்து
கரையைத் தொட்டுவிட ஆசை....

காற்றில் மிதந்து
மேகத்தை தொட்டுவிட ஆசை....

நதியில் நீந்தி
கடலில் கலந்துவிட ஆசை....

மழையில் நடந்து
முழுவதும் நனைந்து விட ஆசை....

அன்பைப் பகிர்ந்து
நட்புகளில் நிலைத்துவிட ஆசை....

ஏகஇறையை வணங்கி
அவனருளில் அடங்கிவிட ஆசை...
 

வெளிநாட்டில் இருந்து வரும் பணத்துக்கு 12.36% சேவை வரி : மத்திய அரசு அதிரடி

கும்பகோணம்: வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்திற்கு பணம் பெற்றுகொள்வோர் 12.36% சேவை வரியை செலுத்த வேண்டும் என்ற மத்திய நிதியமைச்சக உத்தரவால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை சேர்ந்தவர்கள், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இந¢தியாவில் உள்ள குடும்பத்தினருக்கு, உறவினர்களுக்கு பணம் அனுப்புவதற்காக முன்பு குருவி, ஏஜென்ட் ஆகியோரிடம் பணத்தை கொடுத்து அனுப்பினர். இ¢வ்வாறு அனுப்பப்படும் பணம் இந்திய நிதியமைச்சகத்தின் கணக்கில் வராமல் இருந்தது. இந்த பணம் ஹவாலா என்று அழைக்கப்பட்டது. இந்த நடைமுறையில் பணம் இந்தியாவிற்குள் வரும்போது போதிய பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. பல இடங்களில் இந்த பணம் கொண்டு செல்வதை கண்காணித்து கொள்ளையடிக்கப்பட்டது. இதை தடுப்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பப்படுவதை மத்திய நிதியமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி சில நிறுவனங்கள் பணம் அனுப்புவோரிடம் கமிஷன் தொகையை பெற்று கொண்டு, இந்தியாவில் உள்ளவர்களிடம் எவ்வித கமிஷனும் பெறாமல் பணத்தை வழங்கி வந்தது.

Friday, October 24, 2014

“ஜீன்ஸ் வேணுங்க”

“ஜீன்ஸ் வேணுங்க”

அவன் தூக்கிவைத்திருந்த குழந்தையைப் பார்த்துக்கொண்டே, “பாப்பாவுக்குதானே சார்?”

“ம்…. இந்த பீப்பாவுக்கும் சேர்த்துதான்” பக்கத்தில் நின்றிருந்த அனிதாவை காட்டினான்.

சேல்ஸ் கேர்ள் களுக்கென்று சிரித்தாள். இப்படிதான் பொது இடங்களில் திடீர் திடீரென ஏடாகூடமாக பேசுவான். எல்லா ஆண்களுமே மற்றவர்களை ஈர்க்க தங்கள் மனைவியை மட்டமடித்து ஜோக் அடிக்கும் அதே அரதப்பழசான டெக்னிக்கைதான் கையாளுகிறார்கள். இவன் மட்டும் விதிவிலக்காக இருந்துவிடுவானா என்ன? கிருஷ்ணாவை முறைத்துக்கொண்டே சொன்னாள்.

வெற்றியின் வித்து !

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
ஒளிந்துகிடக்கும்
உந்தல் சக்தியே
வெற்றியின் வித்து

பூவாக்கிக் காயாக்கி
கனிதரும் நல்ல மரமாக்கி
காலமெல்லாம் பயன்பெறுவதும்
வெற்றிக்கு இட்ட வித்தே

வித்திட்டு முயற்சித்தல்
வெற்றிக்கு அறிகுறியே
வேதவாக்காய் எண்ணுவதும்
வித்துக்கு முதற்ப்படியே

வல்லவரும் வித்திட்டே
வீரனாக வலம்வருவர்
விந்தையரிந்த நல்லவரும்
வித்திடாதில்
வெல்ல மாட்டார்

நட்புக்கு வித்து நல்மனது
நற்ப்பண்பிற்கு வித்து நல்லொழுக்கம்
அன்பிற்கு வித்து அரவணைப்பு
ஆசைக்கு வித்து ஆன்மாவின் ஈர்ப்பு
உறவுக்கு வித்து உரிமை
உண்மைக்கு வித்து நேர்மை

ஆக

உப்பில்லா பண்டம் குப்பையிலே
வித்தில்லா வாழ்வு வீதியிலே
கவிதை ஆக்கம் : அதிரை மெய்சா

Tuesday, October 21, 2014

சீர்காழிக்கும் நாகூருக்கும் ஓர் இனிப்பான பந்தம்

மேடையில் சிவசிதம்பரத்துடன் எம்.ஜி.ஆர்., நெடுஞ்செழியன், மா.பொ.சி. அரிய புகைப்படம்

ரவீந்தரைப்பற்றி எனது வலைத்தளத்தில் தொடர் எழுது வருகிற எனக்கு  “இன்பக்கனவு” நாடகம் சீர்காழியில் அரங்கேறியபோது அது எந்த இடத்தில் நடைபெற்றது என்ற துல்லியமான விவரம் தேவைப்பட்டது. காரணம் எம்.ஜி.ஆருக்கு கால்முறிவு ஏற்பட்டது சீர்காழியில் நாடகம் நடந்தபோதுதான். பதிவு செய்யப்படவேண்டிய முக்கியமான நிகழ்வு அது. அதைபற்றி அங்குள்ள ‘பெருசு’களிடம் விசாரிப்பதற்கு எனது நண்பர் சீர்காழி கவிஞர் தாஜ் அவர்களைத்தான் தொடர்பு கொண்டேன். அவரும் அதற்குரிய விவரங்களை உடனேயே சேகரித்துத் தந்தார். என் நண்பர் எழுத்தாளர் ஆபிதீனுக்கும் அப்படித்தான். தாஜ் என்றால் அப்படியொரு இஷ்டம். அவருடைய வலைத்தளமே அதற்கு சான்று பகரும்.

Monday, October 20, 2014

நஃபீலா- Nafilah

வாழ்த்துகள் to நஃபீலா- Nafilah
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur. S.E.A.முகம்மது அலி ஜின்னா,

Sunday, October 19, 2014

பயோடேட்டா எப்படி இருக்க வேண்டும்

உலகம் பொருளாதார நெருக்கடியின் பிடியில் சிக்கி முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது. ஆலமரம் என கருதப்பட்ட அமெரிக்கப் பொருளாதாரம் அடியோடு சாய்ந்து அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு நீண்ட நெடிய நெருக்கடி நிலையில் விழுந்து கிடக்கிறது.

அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி உலகெங்கும் சல்லி வேர் பரப்பி உலகின் எல்லா பாகங்களிலும் அதன் பாதிப்பு பலமாகவே இருக்கிறது.

நிறுவனங்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு தினமும் ஆயிரக்கணக்கான ஆட்களை வேலையை விட்டு உதறிக்கொண்டே இருக்கிறது. வீதியில் வேலை தேடுவோர் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து கொண்டே இருக்கின்றன.

மனுஷங்களா.....அவங்க? - by. LKS.Mohamed Meera Mohideen

கொஞ்ச நாட்களுக்கு முன்னர், எங்கள் குடும்ப நண்பரும் மிகச்சிறந்த பாடலாசிரியருமான கவிஞர் வீரை.அப்துல் ரகுமான் என்னை காலை ஏழு மணி அளவில், அலைபேசியில் அழைத்தார்.. அப்போது நெல்லை விரைவு வண்டியில், சென்னையில் இருந்து ஊர் நோக்கி வந்து கொண்டு இருந்தேன்..
கவிஞர் வீரை ரகுமான் அவர் கள் ,இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களுக்காக, நிறைய இஸ்லாமிய பாடல்கள் எழுதியுள்ளார்...
ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்.......இறைவா வரம் தருவாய்,......கைகளை எந்திவிட்டேன்,.....சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவரே,கொஞ்சம் சீர் தூக்கிப்பார்க்கனும் நெஞ்சுக்குள்ளே...முதலான சிறப்புக்குரிய பாடல்களும் அதில் உண்டு..
தமிழ் மீது மாறாத காதல் கொண்டவர்....

Friday, October 17, 2014

மலையுச்சிப் பூவின் தியானம்


கைக்குழந்தை உள்ளங்கையென மொட்டவிழ்கிறது
பறிக்கப்படாத கனிகள் வீழ்ந்தழியும் மலைத் தரைகள்
வனப்பு மிக்க காடுகளைச் சுமக்கின்றன தம்மில் அவை

அந்திப் பறவைகள்
கறுப்புத் திட்டுகளாகப் பறந்து மறையும்
மாலை நேரங்களில் வனங்கள் என்ன செய்யும்

Thursday, October 16, 2014

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 2)

நாடக வாழ்க்கை

1951-ஆம் ஆண்டில்தான் ரவீந்தருக்கும்  எம்.ஜி.ஆருக்கும் இடையே இணையில்லாத ஒரு நெருங்கிய பந்தம் ஆரம்பமாகியது. எம்.ஜி.ஆருடன் ரவீந்தருக்கு தொடர்பு எப்படி ஏற்பட்டது என்பதை இதற்கு முந்தைய பதிவில் நான் விளக்கமாக எழுதியிருந்தேன்.

1953-ஆம் ஆண்டு  “எம்.ஜி.ஆர். நாடக மன்றம்” என்ற  நாடகக் குழுவை எம்.ஜி.ஆர். தொடங்கினார்.  இம்முயற்சிக்கு  உறுதுணையாக  இருந்து செயல்பட்டவர்  ரவீந்தர்.  அதற்கான ஆயத்தப்பணிகளை முறையாக நிறைவேற்ற முழுஉத்வேகத்துடன் அயராது பாடுபட்டார். இவர்கள் இருவருக்குமிடையே  நிலவிய இந்த கலையுறவு பந்தம் இறுதிவரை நிலைத்திருந்தது.  கடைசிவரை எம்.ஜி.ஆரின் விசுவாசியாகவே இவர் காலம் தள்ளினார்.

விசுவாசம் என்பது நாகூர்க்காரர்களுக்கே உரித்தான உயர்ந்த குணம் போலும். எப்படி நாகூர் ஹனிபா இன்றுவரை திமுகவுக்கும், கலைஞருக்கும் அசைக்க முடியாத விசுவாசியாக இருக்கிறாரோ அதுபோல இறுதிமூச்சு வரைக்கும் எம்.ஜி.ஆருக்கு விசுவாசமாக இருந்தவர் ரவீந்தர்.

Wednesday, October 15, 2014

”இவ்வளவு தான் சம்பளமா?”

எங்கள் ஊரில் வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் யாரும் இல்லை. அதனால் எனக்கு அதை பற்றிய அறிவு மிக குறைவு தான். எவ்வளவு சம்பளம் தருவார்கள், எவ்வளவு நாள் லீவு கிடைக்கும், எப்போ ஊர் வந்து போவார்கள் என்பது பற்றி எதுவும் எனக்கு தெரியாது.

சமீபத்தில் வேலை வாய்ப்பு பதிவு ஒன்று பார்த்தேன். அதில் சம்பளம் AED ல் இருந்தது. அதை இந்திய ருபாய்க்கு மாற்றி பார்த்து அதிர்ந்தேன். காரணம் இந்திய மதிப்புக்கு அது சுமார் 30 ஆயிரம் ருபாய்கள்.

Tuesday, October 14, 2014

மெட்ராஸ் சாதி - யுவகிருஷ்ணா

'மெட்ராஸ்’  திரைப்படம் வெளிவந்தபிறகு, மெட்ராஸில் சாதி எப்படி இயங்குகிறது என்று மெட்ராஸுக்கு சமீபத்தில் குடியேறியவர்கள் பக்கம் பக்கமாக இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மெட்ராஸ் எக்மோரில் நான் பிறந்து முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது. வளர்ந்ததெல்லாம் தென்சென்னைதான் என்றாலும், ஒட்டுமொத்த மெட்ராஸின் சுற்றளவே நூறு கி.மீ.க்குள்தான் எனும்போது மத்திய சென்னை, வடசென்னை எல்லாம் அந்நியமெல்லாம் இல்லை. கல்யாணம், காதுகுத்து, சாவு, எழவு என்று மேடவாக்கம் டூ திருவொற்றியூர் வரை நம் கால் படாத இடமேயில்லை.

Sunday, October 12, 2014

மலாலா எனும் மாயை! - Rafeeq

இந்த மலாலா யூஸுஃப்ஸாய் பற்றிய செய்தி வரும்போதெல்லாம் ஷபானா பாஸிஜ் பற்றி எழுதவேண்டும் என்று தோன்றும்…சரி, பிறகு எழுதலாம் என்று.விட்டுப்போகும். ஆனால் இரண்டு வருடங்களாக தள்ளிப் போன விடயம் இப்போது எழுதாவிட்டால்எப்போதுமே வேண்டியதில்லை என்றாகிவிடும்.

முதலில் எல்லோரும் சொல்வது போலவே மலாலாவுக்கு வாழ்த்துகள் சொல்லிக்கொள்வோம்!

அது தகுதியுடையதா அல்லது இல்லையா என்பதை இக்கட்டுரையின் முடிவில் உங்களின் தீர்ப்பில் தெரிந்துகொள்வோம்.

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசினை பெறுவதற்காக இதுவரையிலும் இல்லாத அளவிற்கு தனிநபர்களின் மனுக்கள் மற்றும் 47 நிறுவனங்கள் உள்பட 278 மனுக்கள் பரிசீலனைக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. இறுதியாக இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவ்விருவரில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த திரு.கைலாஷ் சத்யார்த்தி மற்றொருவர் பாகிஸ்தானைச் சார்ந்த இங்கிலாந்து வாழ் சிறுமி மலாலா யூஸுஃப்ஸாய்.

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 1)

1955-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் வெற்றிப் படங்களில் ஒன்றான  “குலேபகவாலி” வெளிவந்தது.  அரேபிய மண்ணின் வாசனையோடு படமாக்கப்பட்ட இச்சித்திரத்தில் வசனம் தஞ்சையா ராமதாஸ் என்று படத்தின் தொடக்கத்தில்   ‘டைட்டில்’போட்டுக் காண்பிப்பார்கள்.

1957-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்.நடித்த “மகாதேவி” படம் வெளியானது.  அந்த படத்தில் வசனங்கள் அபாரமாக இருந்தது. ரசிகர்களின் ஆராவாரம் அரங்கத்தின் கூரையைப் பிய்த்தது.  கதை-வசனம்  கண்ணதாசன் என்று கொட்டை எழுத்தில் காண்பிப்பார்கள். ஆனால் வசனம் எழுதியது அவரல்ல.

1958-ஆம் ஆண்டு வெளிவந்த “நாடோடி மன்னன்”  படத்திற்கு வசனம் யார் என்று பார்த்தால் “வசனம் : கண்ணதாசன்” என்று விளம்பரப் படுத்தியிருப்பார்கள். அத்தனை சுவரொட்டிகளிலும்  “கதை: எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா” என்று அச்சடிக்கப்பட்டிருக்கும். அந்த கதை இலாகாவிற்குப் பின்னால் யாருடைய கைவண்ணம் இருந்ததென்று மக்களுக்குத் தெரியாமலே போனது. உண்மையில் அப்படத்தின் வசனத்தை எழுதியது யாரென்று மக்களுக்குத் தெரியப்படுத்தவே இல்லை.

Thursday, October 9, 2014

சென்னை முகநூல் நண்பர்கள் சந்திப்பு - 2014

(சென்னை முகநூல் நண்பர்கள் சந்திப்பு - 2014) வருகின்ற டிசம்பர் மாதம் 7ம் தேதி சென்னை புனித தோமையார் மலை கண்டோன்மெண்ட் திருமண மண்டபத்தில் (St. Thomas Mount Cantonment Marriage Hall ) சிறப்பாக நடை பெற உள்ளது.

நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சந்திப்பின் நிகழ்வுகள் குறித்த விபரங்கள் விரைவில்..

மேலும் விவரங்களுக்கு அனுகவும்..

டி. சதிஷ் குமார் - 7667974233

கார்த்திக் - 8508517676

Tuesday, October 7, 2014

புரிந்து கொண்டேன் - என்றான்.

இருப்பதை பகிர்ந்தேன் -
என்றான்.

பகிர்ந்தது இனிக்கும் -
என்றேன்.
************
கற்றதை பயன்படுத்த
முடியவில்லை - என்றான்

பயனுள்ளதை பயன்படுத்திக்
கொள் - என்றேன்
********************
கவலைப் படவேண்டாம் -
என்றான்.

காலம் கடக்கும்முன்
கடந்ததை நினைவுகொள் -
என்றேன்.
*****************
தேடியது கிடைக்கவில்லை -
என்றான்.
கிடைத்ததை பெற்றுக்கொள் -
என்றேன்.
***************
தேவைகள் கூடுதல் -
என்றான்.

எண்ணிச் சுடு
பணியாரத்தை - என்றேன்.
******************
தொடர்ந்து சொல்வேன் -
என்றான்.

உள்ளத்திலிருந்து சொல்
உதட்டிலிருந்து சொல்லாதே - என்றேன்.
********************
மரண பயம் -
என்றான்.

மாற்று இல்லை -
என்றேன்.
*************
பயணம்
ஏற்ற இறக்கமாக
இருக்கிறது - என்றான்.

போகும் இடம்
வெகுதூரம் இல்லை -
என்றேன்.
*****************
அள்ளித் தருவேன் -
என்றான்.

சிந்தாமல் சிதறாமல்
தரவேண்டும் - என்றேன்.
*************
தொடர்ந்து செல்கிறேன் -
என்றான்.

தொட்டும் தொடாமலும்
செல் - என்றேன்.
******************
தோல்வி துரத்துகிறது -
என்றன்.

வெற்றி நெருங்குகிறது -
என்றேன்.
****************
ரணம் ஆறிவிட்டது -
என்றான்.

மனம் ஆறினால்
மார்க்கம் தெரியும் -
என்றேன்.
******************
புரிந்து கொண்டேன் -
என்றான்.

புறம் பேசாமல் இரு -
என்றேன்.
 
ஆக்கம்  ராஜா வாவுபிள்ளை(சங்கம் அப்துல் காதர் )

செல்வாக்கு !

அரசியல்வாதிகள் முதல்
ஆளுமைக்கும்
அத்தனை நல வாதிகளுக்கும்
தார்மீகப் பொறுப்பெடுத்து
தாங்கி வருமாம் செல்வாக்காய்

மனித வாழ்வை மேம்படுத்த்தி
மக்கள் மத்தியில் மதிக்கவைக்கும்
மந்திரச்சொல் இதுவன்றோ

புண்ணியவான் புகழ்பெறவும்
கண்ணியவானைக் காப்பதும்
செல்வாக்கு தானன்றோ

Thursday, October 2, 2014

கிள்ளப்படுவது காம்புதானேத் தவிர வெற்றிலைக்கு எந்த வேதனையுமில்லை.!

கிள்ளப்படுவதும்
மெல்லப்படுவதும
வெற்லை வேண்டி
கொடிக்காலுக்குச்
சென்றால்
கிள்ளப்படுவது
காம்புதானேத் தவிர
வெற்றிலைக்கு எந்த
வேதனையுமில்லை.!
அதுவே
தாம்பூளத்திற்கு
வந்து விட்டால்
மெல்லப்படுவது
வெற்றிலைதானேத்
தவிர
காம்புக்கு எந்தக்
கவலையுமில்லை.?!

”கட்டிக் கொடுக்கும் சோறும்;

”கட்டிக் கொடுக்கும் சோறும்;
சொல்லிக் கொடுக்கும் பாடமும் – ஒருநாளும்
கரை சேர்க்காது.” எனும் சொலவடையினை எங்கள் ஆசிரியர் அடிக்கடி வகுப்பறையில் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அதாவது ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடத்தினை கேட்டால் மாத்திரம் போதாது, அதற்கும் மேலாக உனது முயற்சியும் உழைப்புமே
உன்னை உயர்த்தும் என்பது அதன் பொருள்.