Showing posts with label அரபி. Show all posts
Showing posts with label அரபி. Show all posts

Wednesday, July 24, 2013

சொந்த மண்ணில் அன்னிய உணர்வு

அரபு மக்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் குணமுள்ளவர்கள்.

இன்று நாங்கள் பணிபுரியும் இடத்துக்கு ஒரு அரபு யுவதி வந்தார். அவர் அரபி என்றாலும் ஆங்கிலத்தில்தான் உறையாடினார். அவருக்கான சேவையைப் பெருவதற்கு எழுத்து விண்ணப்பம் தரவேண்டும்.

நான் அதற்கான விண்ணப்ப படிவத்தை அவரிடம் கொடுத்தேன்,அது அரபு மொழியில் இருந்தது.

அவர் என்னைப் பார்த்து ஆங்கிலத்தில் விண்ணப்பப் படிவம் இருக்கிறதா எனக் கேட்டார், அதற்கு நான் ஆங்கிலத்தில் படிவம் இல்லை என சொல்லிவிட்டு எதற்கு
ஆங்கிலத்தில் கேட்கிறீர்கள் என கேட்டேன்.

Wednesday, August 29, 2012

அரபி தெரிந்தால்தான் குர்ஆனை விளங்கமுடியும்

அரபி தெரிந்தால்தான் குர்ஆனை விளங்கமுடியும்
இறைவன் நம்மைக் குர்-ஆனை ஆராயச் சொன்னான். அதில் கேள்விகள் கேட்கச் சொன்னான். ஆனால் நமக்குத் தெரியாவிட்டால் அரபு கற்றவர்களிடம் விளக்கம் கேட்கச் சொன்னான் என்று ஓர் நண்பர் கூறினார்.

அதற்கு ஆதாரமாக கீழே உள்ள இறை வசனத்தையும் அனுப்பி வைத்தார்.

And We sent not (as Our Messengers) before you (O Muhammad ) any but men, whom We inspired, (to preach and invite mankind to believe in the Oneness of Allah). So ask of those who know the Scripture [learned men of the Taurat (Torah) and the Injeel (Gospel)], if you know not. (16:43)

சரியான மொழிபெயர்ப்பு கிடைத்துவிட்டால் அரபி தெரிந்தவர்களும் அரபி தெரியாதவர்களும் ஒன்றுதான் என்பது என் கருத்து.

ஏனெனில் வசனங்களின் பொருளை விளங்கிக் கொள்ளத்தான் ஆய்ந்தறியும் அறிவு தேவையே தவிர வெறுமனே மொழிபெயர்ப்பு செய்வதற்கு அல்ல.

மொழிபெயர்க்க அரபி தெரிந்திருக்க வேண்டும்தான். ஆனால் விளக்கம் சொல்ல அரபி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதனை விளக்கும் வகையில், நண்பருக்கு நான் அளித்த பதில் கீழே உள்ளது. இனி உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள், வளரலாம்!

*
16-43 ஐ அனுப்பித் தந்தமைக்கு நன்றி. ஆனால் அதே வசனத்திற்கு மற்றவர்களின் மொழி பெயர்ப்புகளையும் பாருங்கள்.

http://www.tamililquran.com/qurandisp.php?start=16#16:43


16:43. (நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) “நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (என்று கூறுவீராக).

16:44. தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.

இதன்படி முந்தைய வேதத்தில் ஞானம் பெற்றோரிடம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் இருக்கிறதல்லவா?

இந்தத் தமிழ் மொழியாக்கத்தோடு நான் நின்றுவிடவில்லை. மேலும் தேடினேன்.